கீழ்முதுகுவலிக்கு பிரிஇழுவையக (traction) முறை

நாள் படாத குறுங்கால(Acute)-4 வாரங்களுக்கும் மிகாத,சற்றே நாள்பட்ட (Acute-4 வாரங்களுக்கும் மிகாத),சற்றே நாள்பட்ட (Subacute-4 வாரங்கள் முதல் 12 வாரங்கள் வரை), அல்லது நாட்பட்ட (Chronic- 12 வாரங்களுக்கு மேற்ப்பட்ட) என்ற வெவ்வேறு கட்ட கீழ்முதுகு வலியுடைய மக்களின் வலி தீவிரம், சீரான தினசரி நடைமுறை வாழ்வியல் செயல்பாட்டுத்திறன், ஒட்டுமொத்த செயல் முன்னேற்றம், பணி திரும்புதல் திறன், ஆகியவற்றிற்கு பிரி இழுவையக முறைகளினால் ஏற்படும் விளைவுகளின் ஆதாரங்களை நாங்கள் சீராய்வு செய்தோம். சில நோயாளிகளுக்கு புட்டப்பின்னந்தொடைகெண்டைக்கால் பெருநரம்பு(sciatica) வலியும் உடனிருந்தது நாங்கள் பிரி இழுவையக முறையின் சிகிசைக்குப்பின்னான உடனடி விளைவுகள், குறுகிய கால(சிகிசைக்குப்பின்னான மூன்று மாதங்கள் வரை),நீண்டகால(சுமார் ஒரு வருடகாலம் வரை) விளைவுகளை ஆய்வு செய்தோம்.

உலகளவில்,கீழ்முதுகு வலி என்பது மிகப்பெரும் உடல்நலபிரச்சனையாகவும் , மருத்துவ செலவினம்,முன்னறிவிப்பற்ற பணி விடுப்பு,இயலாமை போன்றவற்றிற்கான மிகப்பெரும் காரணியாக உள்ளது. கீழ்முதுகு வலிக்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள நடைமுறை சிகிச்சை முறைகளில் ஒரு தெரிவாக, விசையை பயன்படுத்திஅருகிலுள்ள இரண்டு எலும்புகளை ஒட்டாமல் இழுத்து மூட்டு இடைவெளி தூரத்தை அதிகரிக்கசெய்யும் பிரி இழுவையக முறையும் ஒன்றாக உள்ளது. வெவ்வேறு விதமான பிரி இழுவையக முறைகள் நடைமுறை பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலும் இந்த வெவ்வேறு விதமான பிரி இழுவையக முறைகள் கூட்டுசேர்த்தி முறையில் மற்ற சிகிச்சைகளுடன் சேர்த்தே பயன்படுத்தப்படுகின்றன. மிகப்பரவலாக பொதுப்பயன்பாட்டில் இயந்திர(அ) விசை உந்து கருவி பயன்படுத்தி செய்யப்படும் பிரி இழுவையக முறை(பிரி இழு விசை மின்னியக்க கப்பி மூலம் செயப்படும்), மற்றும் கை விசை பிரி இழுவையக முறை(இழுவையக விசை இயன்முறை சிகிச்சையாளரின் கைகள்கொண்டு தன்னுடைய உடல் எடையை பயன்படுத்தி விசை மாற்றம்,இழுத்திசை மாற்றம் செய்வது) ஆகியவை உள்ளது.

ஆகஸ்ட் 2012 வரை தரவுகள் நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த சீராய்வு 32 ஆய்வுபடிப்புகளையும், 2762 கீழ்முதுகு வலியால் அவதிப்படுவோரையும் உள்ளடக்கியது. பெரும்பான்மையான ஆய்வு படிப்புகள் ஓரளவு ஒத்த கீழ்முதுகு வலியுடையவர்களை உட்படுத்தியுள்ளது (புட்டப்பின்னந் தொடைகெண்டைக்கால் பெருநரம்பு(sciatica) வலியும் சேர்த்து உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள். பெரும்பான்மை ஆய்வுபடிப்புகள் நாள் படாத குறுங்கால,சற்றே நாள்பட்ட, நீண்ட நாட்பட்ட கீழ்முதுகு வலியுடையவர்களை உள்ளடக்கியது. பெரும்பான்மை ஆய்வுபடிப்புகள் 1 முதல் 16 வாரங்கள் வரையிலான பின்தொடர் சிகிச்சையையும், மிகக்குறைந்த எண்ணிக்கையில் நீண்டகால பின்தொடர்சிகிச்சையான 6 மாதங்கள் முதல்1 வருடம் வரையிலானவற்றையும் குறிப்பிட்டிருக்கின்றன.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ஆராய்ச்சிகள் தெரிவிப்பது என்னவென்றால்,பிரி இழுவையக முறை தனிசிகிச்சை முறையாக கொடுக்கப்படுவதோ, மற்ற சிகிச்சைகளுடன் சேர்த்து கூட்டுசிகிச்சை முறையில் கொடுக்கப்படுவதோ, வெற்று பாவனை சிகிச்சை முறை, பிரி இழுவையகம் பயன்படுத்தா இயன்முறை சிகிச்சை முறை, மற்ற சிகிச்சைகளான பயிற்சி செய்முறைகள்,கதிரியக்க கிளர்ச்சி சீரொளி சிகிச்சை முறை, செவியுணரா ஒலி சிகிச்சை முறைகளை காட்டிலும் ஒன்றும் பெரிதான விளைவுப்பயன் கொண்டிருக்கவில்லை. இந்த ஆய்வு முடிவுகள் புட்டப்பின்னந்தொடைகெண்டைக்கால் பெருநரம்பு(sciatica) வலியும் சேர்த்து உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கும் பொருந்தும். எவ்விதமான பிரி இழுவையக முறைகள், (இயந்திர(அ) விசை உந்து கருவி பயன்படுத்தி செய்யப்படும் பிரி இழுவையக முறை கை விசை பிரி இழுவையக முறை)பயன்படுத்தினாலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

மொத்தமுள்ள 32 ஆய்வு படிப்புகளில் 7 இல் பக்கபின் விளைவுகளாக வலி அதிகரிப்பு,நரம்பியல் அறிகுறிகளின் தீவிரம் அதிகரிப்பு,முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. நான்கு ஆய்வுகள் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று குறிப்பிடுகின்றன. மீதமுள்ள ஆய்வுகள் பக்க விளைவுகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

ஆய்வு முடிவு ஆதாரங்கள் மிகக்குறைந்த தரத்திலிருந்து மிதமான தரம் அளவீட்டிலே கிடைக்கப்பெறுகின்றன. வெவ்வேறு நோய் அறிகுறி வடிவங்கள் கொண்ட வெவ்வேறு நிலையில் உள்ள மக்கள் இடையே உள்ள (புட்டப்பின்னந் தொடைகெண்டைக்கால் பெருநரம்பு(sciatica) வலியும் சேர்த்து உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள், வெவ்வேறு வலி கால அளவீட்டில் உள்ள ) கீழ்முதுகு வலிக்கான உயர்தர ஆய்வுகள் அரிதாகவே கிடைக்கபெறுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: வினோத் குமார் சுப்ரமணியன் மற்றும் சி.இ. பி.என்.அர் குழு

Tools
Information