நாள்பட்ட முதுகு வலிக்கு சருமவாயிலாக மின்வழி நரம்பு தூண்டுதல் (TENS) அல்லது வெற்று சிகிச்சை.

வேலைக்கு வருகையின்மை, மற்றும் சுகாதார நிபுணர்களை சந்திக்க முக்கிய காரணமாக இருப்பது முதுகு வலி ஆகும்.வயது வந்த மக்கள் தொகையில் 60% முதல் 90% நபர்களுக்கு முதுகு வலி உருவாகும் ஆபத்து இருக்கிறது.பெரும்பாலான தொடர் நிகழ்வுகள் ஆறு வாரங்களுக்குள் இவ்வலி குணம் அடைவதாக தோன்றினாலும், நோய் மீளல் அதிமாக உள்ளது. மேலும்,பாதிக்கபட்ட 10% முதல் 20% நபர்களிடம் நாள்பட்ட முதுகு வலிக்கான (மூன்று மாதங்களுக்கு மேல் வலி நீடித்தல்) அறிகுறிகள் உருவாகலாம் என மதிப்பிடப்பட்டன. நாள்பட்ட முதுகு வலி அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது.

சருமவாயிலாக மின்வழி நரம்பு தூண்டுதல் (TENS) பரவலாக முதுகு வலி மேலாண்மைக்கு ஒரு துணை சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. இது பாதுகாப்பானது, ஊடுருவல் அற்றது மற்றும் பயன்படுத்த எளிதான சிகிச்சை முறை.TENS கருவி அதிகபட்ச வலி இருக்கும் தோலின் மேற்பரப்பில் எலக்ட்ரோடுகளை வைத்து அதன் வழியாக அடித்தளத்தில் உள்ள நரம்புகளை தூண்டுகின்றது.

நாள்பட்ட முதுகுவலிக்கு TENSயை வெற்று சிகிச்சைமுறையுடன் ஒப்பிட்டு நான்கு உயர்தரமான சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் (585 நோயாளிகள்) இந்த ஆய்வில் சேர்க்கப்படுகிறது.  TENS வலியின் தீவிரத்தை குறைத்து நன்மைகள் பயக்குமா என்பது முரண்பட்ட ஆதாரங்களினால் தெளிவாக தெரியவில்லை.  எனினும் இரண்டு ஆராய்ச்சிகளில் இருந்து(410 நோயாளிகள்) பெறப்பட்ட முரணற்ற ஆதாரங்கள் TENS, முதுகு வலினால் உண்டாகும் இயலாமையை மேம்படுத்தவில்லை என்று தெருவித்தது. மருத்துவ சேவைகள் உபயோகித்தல், மற்றும் பணி நிலை சிகிச்சையின், போது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை (எடுத்துக்காட்டு: வேலை இழப்பு, நோய்வாய்ப்பட்ட நாட்கள்) என்பதற்கு மிதமான ஆதாரங்கள் உள்ளன. இறுதியாக, வழக்கமான TENSக்கும், குத்தூசி-போன்ற TENSக்கும் விளைவுகளில் வித்யாசம் இல்லை. 

சில பாதகமான விளைவுகள், குறிப்பாக சிகிச்சை பெற்ற குழுவினர் மற்றும் வெற்று சிகிச்சை பெற்ற குழுவினருக்கும் சமமாக தோல் எரிச்சல் இருப்பதாக கண்டறிந்த விபரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருவருக்கு சிகிச்சை பெற்று நான்கு நாட்களுக்கு பின்னர் கடுமையான தடிப்பு ஏற்ப்பட்டது. 

சுருக்கமாக, ஆய்வு ஆசிரியர்கள்,முதுகு வலிக்கு TENSன் நன்மைகள் குறித்து முரண்பட்ட சான்றுகளையே கண்டு உள்ளதால், நாள்பட்ட முதுகு வலிக்கு வழக்கமான சிகிச்சை முறையாக TENS பயன்படுத்த ஆதரவாக இல்லை.  

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ஜெயா லக்ஷ்மி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information