பக்கவாதினால் பாதிக்கபட்டு வீட்டில் இருக்கும் நோயாளிகலுக்கு சிகிச்சை-சார்-புனர்வாழ்வு சேவைகள்

சமீபத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் சிகிச்சை சேவைகளை பெற செய்தால் தினசரி நடவடிக்கைகளை முன்னெடுக்க தங்கள் திறனை பராமரிக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பக்கவாததத்தில் உயிர் தப்பியவர்களுக்கு இயன்முறை மருத்துவர்கள், தொழில்சார் மருத்துவர்கள் அல்லது பல்முனை குழுக்கள், ஆகியவர்களின் பரிந்துரையின் பெயரில் அளிக்கப்படுவதும் சிகிச்சை சார்ந்த புனர்வாழ்வு சேவைகளில் உள்ளடங்கும். 1617 பங்கேற்பாளர்கள் கொண்ட14 ஆய்வுகளில் சம்பந்தப்பட்ட விமர்சனத்தில், பக்கவாத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்கள் வீட்டில் சிகிச்சை சேவைகளை பெற்றார்கள் என்றால் சுதந்திரமாக தனிப்பட்ட தினசரி வாழ்கை நடவடிக்கைகளில் ஈடுபடவும்,அத்திறனை பராமரிக்க இயலும் என்பதும் கண்டறியப்பட்டது. எனினும் நன்மையின் அளவு கேள்விக்குறியாக உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: இ. நவீன் குமார் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information