இதயத் தமனி நோய்க்கான உளவியல் சிகிச்சை தலையீடுகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

மாரடைப்புகள் மற்றும் இதய அறுவை சிகிச்சை அச்சுறுத்துவதாக மற்றும் மனத்தைக் காயப்படுத்துவதாக இருக்கலாம், மற்றும் சில நோயாளிகள் உளவியல் பிரச்னைகளை அனுபவிக்க வழி நடத்தக் கூடும். கூடுதலாக, சில உளவியல் பண்புகள், இதய பிரச்னைகளின் உருவாகுவது மற்றும் தீவிரமடைவதுடன் இணைக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட முறையிலோ அல்லது இதய புனர்வாழ்வின் ஒருங்கிணைக்கப்பட்ட தொகுதியின் ஒரு பகுதியாக, நோயாளிகளுக்கு, மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் அல்லது பொருத்தமற்ற நடத்தைகளுக்கான உளவியல் சிகிச்சைகள் சில சமயங்களில் வழங்கப்படுகின்றன. புனர்வாழ்வு சிகிச்சையின் பிற அம்சங்களிலிருந்து வேறுப்படுத்தி காட்டக் கூடிய இந்த உளவியல் சிகிச்சை தலையீடுகளின் விளைவை ஆராய்ந்த ஆய்வுகளை இந்த திறனாய்வு மதிப்பிட்டது (எடுத்துக்காட்டிற்கு: உடற்பயிற்சி) உளவியல் சிகிச்சை தலையீடுகள், மனச்சோர்வு, பதட்டம், ஆகியவற்றில் சிறிது முதல் மிதமான அளவு குறைவுகளை ஏற்படுத்துகின்றன, மற்றும் இதய நோயின் இறப்பியல்பையும் குறைக்கக் கூடும் என்பதற்கு ஆதாரத்தைக் நாங்கள் கண்டோம் . ஆனால் மாரடைப்பின் அடுக்கு நிகழ்வு அல்லது இதய அறுவை சிகிச்சைக்கான தேவை அல்லது மொத்த இறப்பியல்பை அவைகள் குறைத்தன என்பதற்கு ஆதாரத்தை நாங்கள் காணவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.