குழந்தைகளின் வயிற்றுப்போக்கால் அவர்கள் உடல் நீர் இழக்கின்றனர் மற்றும் சில நேரங்களில் அது நீரிழப்பாகவும் (dehydrated) மாறுகின்றது. தண்ணீரில் கரைக்கப்பட்ட சர்க்கரை மற்றும் உப்பும் கொண்ட ஒரு கரைசல் பரவலாக வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீரிழப்புக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய சர்வதேச சிகிச்சை வழிமுறைவிட குறைந்த ஊடமைச் செறிவு (lower osmolarity) கரைசல் அளிப்பது, அதற்குப் பின்னர் சில குழந்தைகளுக்கு மட்டுமே சிரை வழி நீர் (drips) தேவைப்படும் என்று இத்திறனாய்வு கண்டறிந்தது.
மொழிபெயர்ப்பு குறிப்புகள்:
மொழிபெயர்ப்பு: பிறைசூடன் ஜெயகாந்தன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு