குயில்லன்- பார்ரே கூட்டறிகுறிக்கு சிரை வழி நோய் எதிர்ப்புப் புரதம்

திறனாய்வு கேள்வி

சிரை வழி நோய் எதிர்ப்புப் புரதம் (IVIg) சிகிச்சை முறையில் தானம் மூலம் பெறப்பட்ட இரத்தத்தில் இருக்கும் பிறபொருளெதிரி (antibodies) நோயாளியின் சிரை வழி செலுத்தப் படுகிறது. நாங்கள் சிரை வழி நோய் எதிர்ப்புப் புரதத்தால் குயில்லன்- பார்ரே நோய்க் குறியீட்டிலிருந்து (GBS) இருந்து மீட்பை வேகப்படுத்த முடியுமா என்பதை கண்டுபிடிக்க முனைந்தோம்.

பின்புலம்

குயில்லன்- பார்ரே நோய்க் குறியீடு (GBS) என்பது மூளை மற்றும் முதுகு தண்டுக்கு வெளியே நரம்புகளை தாக்கும் ஒரு அசாதாரணமான நோய். அது பலவீனம், உணர்வின்மை மற்றும் மூச்சுத்திணறல் போன்றவற்றை ஏற்படுத்தும். ஊனீர் (plasma) பரிமாற்றம் GBSக்கு ஆதரவு கவனிப்பை(supportive care)மட்டும் கொடுப்பதை விட சிறந்தது என்று வேறுஒரு காக்ரேன் திறனாய்வு கூறியது. ஊனீர் பரிமாற்றம் செய்யும் பொழுது பிறபொருள் எதிரிகளை(antibodies ) நீக்க ஒரு நபரின் இரத்தத்தின் திரவபகுதி (ஊனீர்)எடுக்கப்பட்டு பதிலாக ஒரு பிளாஸ்மா மாற்று செலுத்தப்படும்

ஆய்வு பண்புகள்

IVIg சிகிச்சை பெறாதோர் மற்றும் "போலி சிகிச்சைகள்", PE, இம்யூனோஅப்சொர்ப்தியன் அல்லது மற்ற நோய் தடுப்பாற்றல் (immune) சிகிச்சைகளுடன் IVIg சிகிச்சையுடன் ஒப்பிட்ட ஆய்வுகளைக் நாங்கள் சேர்த்துக் கொண்டோம். பிற சிகிச்சையுடன் IVIg சேர்த்து அளிக்கப்பட்டு இருந்தாலும் அந்த ஆய்வுகளையும் நாங்கள் அதனையும் சேர்த்துக் கொண்டோம். நாங்கள் 12 ஆய்வுகள் காண்டறிந்தோம் இவற்றில் சில இரண்டுக்கும் மேற்பட்ட சிகிச்சைகளை ஒப்பிட்டன.

- ஏழு ஆராய்ச்சிகள் (கடுமையான GBS கொண்டு 623 பங்கேற்பாளர்கள்) IVgயுடன் PE (பிளாஸ்மா மாற்றத்துடன்) ஒப்பிட்டது.

- ஒரு ஆராய்ச்சி பிளாஸ்மா மாற்றம் மட்டும் உள்ள ஆய்வினையும் பிளாஸ்மா மாற்றத்தைத் தொடர்ந்து IVIg கொடுத்த ஆய்வினையும் (249 பங்கேற்பாளர்கள்) ஒப்பிட்டது.

- மூன்று ஆராய்ச்சிகள் IVIg யுடன் ஆதரவு கவனிப்பை (மொத்தம் 75 குழந்தைகள் ) ஒப்பிட்டன.

- ஒரு ஆராய்ச்சி (51 குழந்தைகள்) ஐந்து நாள் IVIg சிகிச்சை திட்டத்துடன் இரண்டு நாள் சிகிச்சை திட்டத்தை ஒப்பிட்டது.

- ஒரு ஆராய்ச்சி IVIg யை இம்யூனோஅப்சார்ப்சனுடன் ஒப்பிட்டது (48 பங்கேற்பாளர்கள்).

- ஒரு ஆராய்ச்சி IVIg +இம்யூனோஅப்சார்ப்சனுடன் இம்யூனோஅப்சார்ப்சனை ஒப்பிட்டது (34 பங்கேற்பாளர்கள்).

நாங்கள் IVIg சிகிச்சை திறனை அளக்கும் முதன்மை அளவுகோலாக ஒரு இயலாமை அளவு கோலில் நான்கு வாரங்களுக்கு பிறகு ஏற்படும் மாற்றங்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.

முக்கிய முடிவுகள் மட்டும் சான்றின் தரம்

IVIg யுடன் PEயை ஒப்பிட்ட ஐந்து ஆராய்ச்சிள் இயலாமை அளவிடில் மாற்றம் காண்பித்தது. 536 ஆராய்ச்சி பங்கேற்பாளர்களில் IVIg மற்றும் PE இயலாமையில் இதே அளவு முன்னேற்றம் காண்பித்தது. இந்த ஆதாரம் மிதமான தரத்தைக் கொண்டிருந்தது. தீய விளைவுகள் எதுவும் PE அல்லது IVIG ல் அடிக்கடி ஏற்ப்படவில்லை ஆனால் மக்கள் IVIG ன் ஒருதொகுப்பினை நிச்சயமாக முடிக்க அதிக வாய்ப்பு இருந்தது.

PEயைத் தொடர்ந்து IVIg அல்லது PE மட்டும் அளிக்கப்பட பெற்ற 249 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், PE மற்றும் IVIG சேர்த்து பெற்றவர்களிடம் சற்று கூடுதலான முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் திறன் குறிப்பிடத்தக்க அளவு இல்லை எனினும், அதன் சாத்தியத்தை ஒதுக்கிவிட முடியாது. இந்த ஆதாரம் மிதமான தரத்தைக் கொண்டிருந்தது.

குழந்தைகளிடம் மேற்கொண்ட மூன்று ஆய்வுகள் IVIG , ஆதரவு கவனிப்பை(supportive care) விட , மீட்டெடுத்தல் வேகத்தை கூட்டுகிறது என்று காண்பித்தது. ஒன்றில் மட்டும் இயலாமை அளவுகோலை பயன்படுத்தி இருந்தார்கள். அவை குறைந்த தர சான்றகளைத் தந்தன.

குழந்தைகளில் செய்த ஒரு சிறிய ஆய்வுவில், ஒரு நிலையான அளவில் IVIg பயன்படுத்தும்போது ஐந்து நாட்களைவிட இரண்டு நாட்களில் இயலாமைமீதான விளைவில் அதேபோன்ற முன்னேற்றம் இருப்பதுபோல் தோன்றியது.

இம்யூனோஅப்சார்ப்சனுக்குப்பின் IVIg கொடுப்பதில் தனியாக இம்யூனோஅப்சார்ப்சன் கொடுப்பதை விட கூடுதல் பயன் எதுவும் கிடைக்க வில்லை. IVIg யுடன் இம்யூனோஅப்சார்ப்சனை ஒப்பிட்ட ஆராய்ச்சி மூலம் எந்த ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.

சேர்க்கப்பட்டுள்ளது ஆய்வுகள் சார்பு ஆபத்து (risk of bias) வெவ்வேறுராக இருந்தது.

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு IVIgயின் சிறந்த அளவை நிர்ணயிக்க மேலும் ஆராய்ச்சிகள் தேவை. மோசமான முன்னேற்றம் உள்ளவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிற நோயாளிகளுக்கு இரண்டாவது டோஸ் கொடுக்கும் ஒரு ஆராய்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆதாரம் டிசம்பர் 2013 நிலவரப்படியானவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர். குழு

Tools
Information