ஆஸ்துமாவிற்கான உடற்பயிற்சி

ஆஸ்துமா உடைய சில மக்கள் உடற்பயிற்சி செய்யும் போது, ஆஸ்துமாவின் ​ அறிகுறிகள் மோசமாகுதல் அல்லது நிலையகற்றல் போன்ற மற்ற காரணங்களால், உடற்பயிற்சிக்கு குறைந்தளவு சகிப்புத் தன்மையைக் காட்டக் கூடும். இது, அவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதை அல்லது உடற்கட்டுடன் இருக்க முயற்சியெடுப்பதை தடுக்க முடியும். உடற் திறன், தசை ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்த ஏற்றவாறு ஆஸ்துமா கொண்ட மக்களுக்கு உடற்பயிற்சி திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி (ஓடுதல், ஜிம்னாஸ்டிக்ஸ், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், எடைகள் மற்றும் நடைபயிற்சி ஆகியவை உள்ளடங்கிய) ஆய்வு பங்கேற்பாளர்கள் மத்தியில் சிறப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று இந்த சோதனைகளின் திறனாய்வு கண்டறிந்தது. உடற்பயிற்சி, இதயநுரையீரல் திறனை முன்னேற்றி மற்றும் ஆரோக்கியம்-தொடர்பான வாழ்க்கைத் தரத்தில் சில சாதகமான விளைவுகளை கண்டது என்றும் இந்த திறனாய்வு கண்டறிந்தது. எனினும், உடற்பயிற்சியால் நிலைப்பட்ட நுரையீரல் செயல்பாட்டின் மேல் எந்த குறிப்பிடத்தக்க விளைவும் இல்லை. சுருக்கமாக, நிலையான ஆஸ்துமா கொண்ட மக்கள் தங்களின் ஆஸ்துமா அறிகுறிகள் மோசமாகுகிற பயம் இல்லாமல் தங்கள் சக்திக்கு உட்பட்ட ஒழுங்கான உடற்பயிற்சியில் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information