அதிவளியோட்டம் சிகிச்சை, புறவழி மூளைக் காய நோயாளிகளுக்கு உபயோகமானது என்று சொல்ல போதுமான ஆதாரங்கள் இல்லை

இறப்பு மற்றும் இயலாமைக்கு புறவழி மூளைக் காயம் ஒரு முக்கிய காரணம். தலையில் கடுமையான காயமேற்பட்டால் அது மூளை வீக்கத்தை தூண்டி, அதனால் மூளையின் மேல் அழுத்தத்தை அதிகரிக்கும். (உள்மண்டை அழுத்தம் அதிகரிப்பு ICP) உள்மண்டை அழுத்தம் அதிகரிப்பு ICP மூளை பாதிப்பு அல்லது இறப்பு சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும். மூளைக் காயத்தை தொடர்ந்து உள்மண்டை அழுத்தத்தை குறைக்க பொதுவாக அதிவளியோட்டம் (hyperventilation) சிகிச்சை(இரத்த ஆக்சிஜன் அளவை அதிகரிக்கசெய்தல் ) அளிக்கப்படுகிறது. அதிவளியோட்டம் (hyperventilation) சிகிச்சை உள்மண்டை அழுத்தத்தை குறைக்க வல்லது எனினும், மூளைக் காய நோயாளிகளின் விளைவுபயனை மேம்படுத்தும் (உபயோகமானது) என்று சொல்ல வலுவான ஆதாரங்கள் இல்லை. எனவே இதில் மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information