மனச்சிதைவு நோய்க்கு (Schizophrenia) வழக்கமான மனக்குழப்ப நீக்கி மருத்துகள் ஒப்பிடு ரிஸ்பெரிடோன் (Risperidone)

ரிஸ்பெரிடோன் மருந்து மிக பரவலாக பயன்படுத்தப்படும் புதிய தலைமுறை மனக்குழப்ப நீக்கி மருந்துகளில் ஒன்று. இந்த திறனாய்வு ரிஸ்பெரிடோனின் விளைவுகளை மற்ற பழைய மனக்குழப்ப நீக்கிகளுடன் ஒப்பிட்டு அறியப்பட்ட கண்டுபிடிப்புகளை தொகுத்துரைத்துள்ளது. சாராம்சமாக ரிஸ்பெரிடோன், ஒருவேளைக்கான மருந்தளவுகள்(dose) அதிகமான ஹாலோபெரிடோல் (haloperidol) க்கு சமமான மருத்துவ விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றாலும் இது மருத்துவ ரீதியாக அர்த்தமுள்ளது என விளக்கமளிப்பது கடினம். அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஹாலோபெரிடோலை விட ரிஸ்பெரிடோன் பாதகமான விளைவுகளைக் குறைவாகவே ஏற்படுத்துகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information