கடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு பிரசெட்டம்

பக்கவாதம் வளர்ந்த நாடுகளில் மரணத்திற்கு மூன்றாவது காரணமாகவும் மற்றும் உயிர் பிழைத்தவர்களில் நீண்ட கால இயலாமைக்கு முதன் மையான காரணமாகவும் உள்ளது. Piracetam ஒரு 'nootropic' ஏஜென்ட் என்று பல ஆண்டுகளாக பல நாடுகளில் மருந்து நிறுவனங்களால் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அதாவது இந்த மருந்துகள் மனித மூளையில் வளர்சிதைமாற்றச் செயல்பாடுகளை கொண்டுள்ளது . விலங்குகளில் செய்யப்பட்ட சோதனைகள் Piracetam கடுமையான பக்கவாதம் நோயாளிகளுக்கு இது பயனுள்ள விளைவுகளை உண்டுப் பண்ணலாம் என்று தெரிவிக்கின்றன. கடுமையான பக்கவாதம் நோயாளிகளுக்கு பிராசெடம் (Piracetam)தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு இதுவரை நிரூபிக்கப்படவில்லை. பக்கவாதம் வந்து 48 மணி நேரத்திற்குள் நோயாளிகளுக்கு பிராசெடம் (Piracetam) வழங்கப்பட்ட பல சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் உள்ளன. 1002 நோயாளிகள் கொண்ட மூன்று ஆய்வுகளில் இந்த திறனாய்வுக்கான தரவுகள் கிடைத்தன . ஆனால் கிட்டத்தட்ட அனைத்தும் , ஒரே ஒரு ஆராய்ச்சியில் இருந்தே வந்தது. கடுமையான பக்கவாதத்திற்கு பிராசெடம் (Piracetam)தின் விளைவுகளை பற்றி உறுதியான ஆதாரங்களை இந்த திறனாய்வு தரவுகள் கொடுக்கவில்லை. கூடுதலாக ஒரு பெரிய ஆய்வு நடத்தப்பட்டது மற்றும் சில முதல்கட்ட பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பிறகு உற்பத்தியாளர்களால் நிறுத்தப்பட்டது. ஆனால் முடிவுகள் அறிவியல் சமூகத்திற்கு கிடைக்க வகை செய்யப்படவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information