வளரும் நாடுகளில் பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கல்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பொதுவாக குடல் புழு தொற்று அதிகமுள்ள இடங்களில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வதின் விளைவுகளை பற்றி காக்ரேன் ஆராய்ச்சியாளர்கள் இந்த காக்ரேன் திறனாய்வில் ஆய்வு செய்தனர். ஏப்ரல் 2015 வரையுள்ள ஆய்வுகளை தேடி பிறகு, நாங்கள் 67,672 பங்கேற்பாளர்கள் கொண்ட 44 ஆராச்சிகளையும், கூடுதலாக பத்துலட்சம் குழந்தைகள் கொண்ட ஒரு ஆராச்சியும் சேர்த்தோம்.

குடற்புழு நீக்கம் என்றால் என்ன ? அது எதனால் முக்கியத்துவம் பெறுகிறது ?

உருளைப்புழுக்கள், கொக்கிப் புழுக்கள், மற்றும் சாட்டைப்புழுக்கள் போன்ற மண் வழி பரவும் புழுக்கள், வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் பொதுவாக காணப்படும். குறிப்பாக இவை போதிய சுகாதார வசதிகள் இல்லாத குறைந்த வருமானம் உள்ள இடங்களில் இருக்கும் குழந்தைகளை பாதிக்கும். கடுமையான புழு தொற்று, குழந்தைகளின் சத்துப் பற்றாக்குறை, போதிய வளர்ச்சியின்மை, மற்றும் இரத்த சோகை ஆகியவற்றோடு தொடர்புடையது.

உலக சுகாதார அமைப்பு தற்போது ஆண்டு முழுவதும் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பள்ளி குழந்தைகளுக்கு தவறாமல் இந்த புழுக்களைக் கொல்ல சிகிச்சை அளிக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறது. பரிந்துரைக்கப்படும் மருந்துகள், புழு தொற்றை நீக்குவது அல்லது பெரிதும் குறைக்கும் திறன் வாய்ந்தவை. ஆனால் இவர்கள் கூற்றுபடி அது இரத்த சோகை மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துகிறதா ? அதனால் பள்ளி வருகை, பள்ளி செயல்திறன், மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படுகிறதா என்பது கேள்விக்குறியே.

ஆராய்ச்சி என்ன கூறுகிறது:

தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்று உறுதிப்படுத்தப் பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கல் மருந்து அளித்தல் உடல் எடையை அதிகரிக்க கூடும் (குறைந்த தர சான்று ) ஆனால் அறிவாற்றல் அல்லது உடல் நலத்தில் அது ஏதேனும் விளைவை ஏற்படுத்துமா என்பது எங்களுக்கு தெரியாது ( மிகவும் குறைந்த தர சான்று ).

ஆண்டு முழுவதும் நோய் தோன்றும் (endemic) பகுதியில் வாழும் அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க சிகிச்சை அளிப்பது அவர்களின் சராசரி உடல் எடை மிதமான தர சான்று ), ஹீமோகுளோபின் ( குறைந்த தர சான்று ), மற்றும் அறிவாற்றலில் ( மிதமான தர சான்று ) சிறிய அளவு அல்லது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

வழக்கமாக ஒவ்வொரு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு குடற்புழு நீக்கம் சிகிச்சை அளிப்பது சராசரி உடல் எடையை அதிகரிப்பதில் சிறிய அல்லது எந்த விளைவையும் ஏற்படுத்தாது ( குறைந்த தர சான்று ). ஆய்வின் விளைவுகள் வெவ்வேறு ஆய்வுகளிடையே வெவ்வேறாக இருந்தன: 1995 ல் குறைந்த நோய்த்தாக்கம் உள்ள இடத்தில் செய்த ஒரு ஆய்வு எடை அதிகரிப்பு இருந்ததாக கண்டது. ஆனால் அதன்பின்னர் மிதமான அல்லது அதிகமாக நோய் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒன்பது ஆய்வுகள் எந்த விளைவையும் காட்டவில்லை.

வழக்கமாக சிகிச்சை அளிப்பது சராசரி உயரம் ( மிதமான தர சான்று) , ஹீமோகுளோபின் ( தரம் குறைந்த சான்றுகள்) அறிவாற்றலை முறையாக சோதித்தல் ( மிதமான தர சான்று) , அல்லது பரீட்சை திறன் ( மிதமான தர சான்று) ஆகியவற்றில் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை. . பள்ளி வருகையில் இதன் தாக்கம் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது மிக குறைந்த தர சான்று ).

ஆய்வாளர்களின் முடிவு

புழு தொற்று உள்ள குழந்தைகள் என்று அறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதால் அவர்களின் உடல் எடையை மேம்படுத்த வாய்ப்பு உள்ளது ஆனால் மற்ற நன்மைகள் பற்றி மிகக் குறைவான ஆதாரமே உள்ளது. ஆண்டு முழுவதும் நோய் பாதிக்கும் பகுதிகளில் பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க வழக்கமாக செய்யப்படும் குடற்புழு நீக்கும் திட்டங்களால் சராசரி ஊட்டச்சத்து நிலை, ஹீமோகுளோபின், அறிவாற்றல், பள்ளி செயல்திறன், அல்லது மரணம் வகையில் நன்மை ஏதும் இல்லை என்பதற்கு கணிசமான சான்று உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர். குழு