மூளைக் காயத்திற்கு கார்டிகோஸ்டெராய்டுகள்

இறப்பு மற்றும் இயலாமைக்கு புறவழி மூளைக் காயம் ஒரு முக்கிய காரணம். மூளை காயம் ஏற்பட்டவுடன் அது மூளை வீக்கத்தை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் உள்மண்டை அழுத்தத்தை அதிகரிக்கும். கார்டிகோஸ்டெராய்டு மருந்துகள் பரவலாக உள்மண்டை அழுத்தத்தை குறைக்கும் என்று எண்ணி மூளை காயம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு, பல ஆண்டுகளாக, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. டெக்ஸாமீதாசோன் மற்றும் மெத்தில்ப்ரிடினிசோலன் போன்றவை கார்டிகோஸ்டீராய்டுகளின் சில உதாரணங்கள்.

மூளைக் காயத்திற்கு கார்டிகோஸ்டெராய்டுகள் எந்த அளவு திறன் வாய்ந்தது மற்றும் பாதுகாப்பானது என்று முடிவெடுக்க மருத்துவ இலக்கியத்தை திறனாய்வு ஆசிரியர்கள் தேடினர். எந்த சிகிச்சையும் பெறாதவர்கள் அல்லது வேறு விதமான சிகிச்சை அல்லது வழக்கமான சிகிச்சை பெற்றவர்களுடன் கார்டிகோஸ்டெராய்டுகள் சிகிச்சை பெற்றவர்களை ஒப்பிட்ட சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை அவர்கள் தேடினர். 12,303 பங்கேற்பாளர்கள் கொண்ட 20 ஆராய்ச்சிகளை இந்த திறனாய்வு ஆசிரியர்கள் கண்டறிந்தனர். இந்த திறனாய்வு முதலில் செய்த போது இதன் முடிவுகள் தெளிவற்று இருந்தன . மொத்த பங்கேற்பார்களில் 80% பேர் கொண்ட பெரிய அளவிலான புதியதொரு ஆய்வு 2006ல் முடியப்பெற்று இந்த திறனாய்வை புதுப்பித்தது . . CRASH என்று அழைக்கப்பட்ட இந்த ஆய்வு, எந்த சிகிச்சையும் பெறாத நோயாளிகளோடு ஒப்பிடுகையில் ஸ்டிராய்டுகள் கொடுக்கப்பட்ட நோயாளிகளின் மரண எண்ணிக்கை ஒரு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து இருந்தது. ஸ்டிராய்டுகள் அளிப்பது மரணங்களை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தமையல் ஸ்டிராய்டுகள் இனி வழக்கமாக புறவழி மூளைக் காயத்திற்கு பயன்படுத்த கூடாது என தெளிவாகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு.

Tools
Information