கடுமையான (acute) இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்திற்கு கங்களியோசைடுஸ் (Gangliosides)

கங்களியோசைடு (Ganglioside) மூலம் சிகிச்சை அளிப்பது பக்கவாதத்திற்கு பிறகு இயலாமையைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கடுமையான பக்கவாத்தில் இருந்து மீண்டவர்களின் இயலாமையைக் குறைக்ககூடிய மருந்துகள் தேவை. கங்களியோசைடு (Ganglioside) என்பது செல்களின் சவ்வுகளின் ஒரு கூறு. அது காயங்களுக்கு எதிராக நியூரான்களை பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. கங்களியோசைடு (Ganglioside) சிகிச்சை கொண்டு பெரும்பாலும் பக்கவாத நோயாளிகள் மீது,பல மருத்துவ ஆய்வுகள் செய்யப்பட்டன. இந்த ஆய்வுகள் தெளிவற்ற முடிவுகளையே அளித்தன. கடுமையான பக்கவாத நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை பயன்உள்ளது என்று கூற எந்த ஆதாரமும் இல்லை என்று இந்த திறனாய்வு காட்டுகிறது. கங்களியோசைடுகள் (Gangliosides) அரிதாக நரம்புகளில் சேதம் (தீவிரமான நரம்பு வியாதிகள்) ஏற்படுத்தலாம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ஜெயலக்ஷ்மி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information