நாள்பட்ட ஆஸ்துமாவிற்கான குத்தூசி சிகிச்சை

குத்தூசி சிகிச்சை என்பது பாரம்பரிய சீன மருத்துவத்திலிருந்து தொடங்கியதாகும். இது தோலின் மேல் குறிக்கப்பட்ட புள்ளிகளை தூண்டுவதை ( பெரும்பாலும் ஊசிகளை செலுத்துவதன் மூலம்) உள்ளடக்கும். ஆஸ்துமா நோயாளிகள் குத்தூசி சிகிச்சையால் பயன் பெறுவார்களா என்பதற்கு சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளிலிருந்து ஆதாரம் உள்ளதா என்பதை மதிப்பிடுவது இந்த திறனாய்வின் நோக்கமாகும். இந்த திறனாய்வில் உள்ளடக்கப்பட்ட ஆய்வுகள் வேறுபாடான தரத்தையும் மற்றும் நிலையற்ற முடிவுகளையும் கொண்டிருந்தன. சிகிச்சையை பெறுபவர்களுக்கு நன்மையளிக்கும் குறிப்பிட்டு-அல்லாத குத்தூசி சிகிச்சையின் கூறு ஏதேனும் உள்ளதா என்பதை தீர்மானிப்பதில் எதிர்கால ஆராய்ச்சி கவனம் செலுத்த வேண்டும். போலி சிகிச்சை மட்டுமின்றி, 'சிகிச்சையின்மை '-யும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். தற்போதைய ஆதாரப்படி, ஆஸ்துமாவிற்கான ஒரு சிகிச்சையாக குத்தூசி சிகிச்சையின் மதிப்பு பற்றி பரிந்துரைகளை செய்ய பற்றாக்குறையான ஆதாரம் உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information