பிரசவத்தில் episiotomy மற்றும் கிழிதல் சரிசெய்வதற்கு உறிஞ்சக்கூடிய தையல்கள்.

சுக பிரசவம் அடையும் பெண்கள் மத்தியில் தோராயமாக 70 சதவிகித பெண்களுக்கு பிரசவிக்கும் போது perineum பகுதியில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது, கிழிந்தோ அல்லது வெட்டுதல் மூலம் சேதம் ஏற்படும்போது தையல்.போடும் தேவை உண்டாகும்.; இதனால் சுக பிரசவத்திற்கு பிறகு இரண்டு வாரங்களுக்கு perineal இடத்தில் வலி ஏற்படும், மற்றும் ஒரு சில பெண்கள் நீண்ட நாட்கள் வலியை அனுபவிக்கக்கூடும் மற்றும் தாம்பத்திய உறவின் போது அசொவ்கிரியங்களை அடைய கூடும். இந்த பிரச்சினையானது புதிய தாய்க்கு ஏற்படும் ஹர்மோணல் மாற்றங்கள் நேரிடும்போதும் மற்றும் குழந்தையின் தேவைகளை சந்திக்கும்போதும் வருத்தத்தை உண்டாக்கும், மற்றும் அவளின் உடலுறவின் போது நீண்டகால பாதிப்பையும் உண்டாக்கும். நவீன கருவிகள் கொண்டு போடப்படும் தையல்கள் படிப்படியாக உட்கொள்ளப் படுகின்றதாயும் மற்றும் திரும்ப எடுக்க தேவையில்லாதாயும் இருக்கும். சில நேரங்களில், மருத்துவரோ அல்லது நர்ஸ் அந்த தையலை பிரிக்க வேண்டியிருக்கும். குறைந்த அளவிலான perineal காயங்கள் திறந்த நிலையில் (உடைந்த நிலையில்) அல்லது குணமாவதற்கு தாமதாகும். சில நேரங்களில் திரும்பவும் தையல் போட வேண்டியிருக்கும்

இந்த ஆய்வு 18 RCT ஆய்வுகளை கொண்ட 1௦,171 பெண்களை உட்கொண்ட ஆய்வறிக்கை, மற்றும் perineumமை தைக்க பயன்படுத்தப்படும் தயல் நரம்பு, செயற்கை பொருட்களை குறித்த ஆய்வுகளாகும். சமீபத்தில் விசேஷமாக அதிசீக்கிரமாக உரிந்துகொள்ளகூடிய தயாரிக்கப்பட்ட ஒரு பொருளின் குறித்த ஆய்வும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. தயல் நரம்பால் தைக்கப்பட்ட பெண்களை காட்டிலும், செயற்கை பொருட்களை கொண்டு தைக்கப்பட்ட பெண்களுக்கு பிரசவம் ஆன முதல் மூன்று நாட்களில் வலி குறைந்தே இருந்தது, மற்றும் வலிகளை குறைக்க சிறிய அளவிலான மருந்துகள் பிரசவத்திற்கு பின் பத்து நாட்கள் கொடுக்கப்பட்டது. செயற்கை தையல் எப்போதும் எளிதில் உறிஞ்சப்படுவதில்லை என்பதோடு இந்த தையல்களுடன் சில பெண்களுக்கு தையல் நீக்கப்பட வேண்டிய அவசியம் இருந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன. தரமான உறிஞ்சக்கூடிய செயற்கை பொருட்கள் மற்றும் விரைவாக உறிஞ்சும் தையல் கொண்ட பெண்களில் குறுகிய மற்றும் நீண்ட கால வலி இருந்தது. . இருப்பினும், ஒரு ஆய்வில், விரைவாக உறிஞ்சும் தையல் கொண்ட பெண்கள் பிரசவத்திற்கு பின் பத்து நாட்களுக்கு வலி போக்கும் மருந்துகளை எடுத்தனர் என்று தெரிவித்தனர், தையலை நீக்கும் அவசியம் சற்று குறைவே என்று குறிப்பிட்டுள்ளனர். தயல் நரம்பு மற்றும் கிளைசாரல்-நிறைவித்த தயல் நரம்போடு ஒப்பிட்டு பார்க்கும் போது முடிவுகள் ஒன்றுப் போல காணப்படுகிறது, ஆனாலும்கூட கிளைசாரல்-நிறைவித்த தையலில் ஆதிகமான குறுகிய கால வலி சேர்த்திருந்தது. ஒரு ஆய்வு ; மோனோபிலமென்ட் மற்றும் நிலையான செயற்கை தையல்களை ஆராய்ந்தது, வலி மற்றும் காயம் குணமாவதில் இந்த இரண்டு வெவ்வேறு பொருட்களிலும் சிறு வித்தியாசமே இருக்கிறது. இந்த காயங்கள் குணமாக, மற்றும் வலியின் அளவை குறைக்க, தையல் பொருளின் வகை, தையல் எந்த முறையில் செய்யப்பட்டது (தொடர் நூல் தையல் அல்லது தனிப்பட்ட தையகள்) மற்றும் தையல் முறையை செய்கிறவரின் திறைமை ஆகிய காரணங்களும் முக்கிய பங்காற்றும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [ஜாபெஸ் பால்]

Tools
Information