போட்காஸ்ட்: மாதவிடாய் வலிக்கான ஸ்டீராய்ட் அல்லாத அழற்சி நீக்கி மருந்துகள்

டிஸ்மெனொரியா அல்லது மாதவிடாய் வலி என்பது பெண்களில் ஏற்படுகின்ற பொதுவான மருத்துவ பிரச்னைகளில் ஒன்றாகும், இதற்கான பல்வேறு விதமான சிகிச்சை தலையீடுகளின் விளைவுகளை பற்றி காக்ரேன் மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் குறைந்த கருவுறுதல் திறன் ஆராய்ச்சி குழுவின் அதிகமான திறனாய்வுகளை ஆராய்ந்துள்ளது. ஜூலை 2015-ல் வெளியான ஒரு புதுப்பிக்கப்பட்ட திறனாய்வு,  ஸ்டீராய்ட் அல்லாத  அழற்சி நீக்கி மருந்துகள் குறித்த ஆதாரத்தை திறனாய்வு செய்தது. நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து பல்கலைக் கழகத்தில் இருந்து, இந்த திறனாய்வு ஆசிரியர்களில் ஒருவரும் மற்றும் இந்த குழுவின் ஒருங்கிணைந்த பதிப்பாளருமான சிண்டி பார்குவார் இந்த திறனாய்வில் கண்டதை பற்றி இங்கு கூறுகிறார்