Skip to main content

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகளுக்கான ( ஏஎஸ்டி) அரிப்பிபிரசால் (ariprazole)

பின்புலம்

அரிப்பிபிரசால் (aripiprazole) ஒரு மனக்குழப்ப நீக்கி மருந்து. இது சித்த பிரமை த்(பரனோயா) போன்ற தீவிர மன நோய்களுக்கான சிகிச்சைக்குத் தரப்படும் ஒரு வகை மருந்து. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு ( ஏஎஸ்டி) உள்ளவர்களுக்கு நடத்தைப் பிரச்சினை சிகிச்சைக்கு இவை பொதுவாக பயன்படுத்தப் படுகிறது. (உதாரணமாக: தன்முனைப்பு நடத்தை, கடுமையான பிடிவாத ஆர்ப்பாட்டங்கள்). மனச்சிதைவு நோய் மற்றும் இருமுனை சீர்குலைவு போன்ற நோய்களில் உள்ள நடத்தைப் பிரச்சினைகளை மேம்படுத்த அரிப்பிபிரசால் (ariprazole) அளிக்கப்படுகிறது மேலும் இந்த மருந்து பொறுத்துக்கொள்ளப் படுகிறது. அரிப்பிபிரசால் (aripiprazole) ஒரு புது மருந்து. எஎஸ்டி நோயாளிகளில் இதன் பக்க விளைவுகள் மற்றும் பயன்கள் பற்றி அறிந்துக் கொள்வது அவசியம்.

திறனாய்வு கேள்வி

மருந்தற்ற குளிகையுடன் ஒப்பிடும்போது அரிப்பிபிரசால் உட்கொள்ளும் (ariprazole) ஏஎஸ்டி உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இந்த மருந்து பயன் அளிக்குமா?

ஆய்வு பண்புகள்

அரிப்பிபிரசா (aripiprazole) லின் தாக்கத்தைப் பற்றி ஆராய்ந்த மூன்று ஆராச்சிகளை நாங்கள் இந்த திறனாய்வுக்கு சேர்தது உள்ளோம். அரிப்பிபிரசா (aripiprazole) லின் நடத்தை பிரச்சனைகலை மேம்படுத்துமா என்று இரண்டு குறுகிய காலக்கட்ட (எட்டு வாரங்கள்) ஆய்வுகள் 316 குழந்தைகள்/ இளம் பருவத்தினரில் மதிப்பிடு செய்தன. மூன்றாவது ஆய்வு 85 குழந்தைகள்/ இளம் பருவத்தினரில் மதிப்பீடு செய்த நீண்டகால(16 வாரம் வரை )ஆய்வாகும். இவ்வாய்வு அரிப்பிபிரசால் (aripiprazole)) அளிக்கப்பட்டு அறிகுறிகள் ஆரம்பத்தில் குறைந்து பின்னர் அரிப்பிரசால் (aripiprazole) நிறுத்தியவுடன் அவர்களின் நடத்தை பிரச்சினைகள் மீண்டும் வருமா என்று மதிப்பீடு செய்தது. இதில் அனைத்து அணைத்து பங்கேற்பாளர்களும் 6 வயது முதல் 17 வயது வரை இருந்தனர். அனைத்து ஆய்வுகளும் ஏஎஸ்டி அறிகுறிகளை மதிப்பிட பல நடத்தை சரிபார்ப்புப் பட்டியல்களை உபயோகித்தன.

முக்கிய முடிவுகள் மற்றும் சான்றின் தரம்

அரிப்பிரசால் (ariprazole) எடுக்கும் எஎஸ்டி குழந்தைகள்/ இளம் பருவத்தினரோடு மருந்தற்ற குளிகை எடுப்பவர்களை ஒப்பிடுகையில் அதியியக்கம் (hyperactivity), எரிச்சல், மற்றும் ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்தல் (அதாவது, திரும்பத்திரும்ப செய்யும் நடத்தை) மற்றும் பொருத்தமற்ற பேச்சு போன்றவை குறுகிய காலம் கண்காணிப்பில் மேம்பாட்டு இருந்தது. சோம்பல்/ தனிமையில் இருத்தல் (withdrawn) போன்றவற்றில் மேம்பாடு இருக்கவில்லை என்று ஆராச்ய்சியாளர்கள் கண்டனர் (அதாவது, ஆற்றல் இல்லாமை மற்றும் குறைந்த விழிப்புணர்வு) அரிப்பிபிரசால் (ariprazole) உட்கொள்ளும் வெள்ளை இன குழந்தைகள் /இளம் பருவத்தினர்களுக்கு மறுவீழ்வு (பழைய, சிக்கலான நடத்தைகளுக்கு திரும்புதல்) குறைவாக இருந்தது. ஆனால் இந்த முடிவுகள் மற்ற இனங்களில் தெரிவிக்கப்படவில்லை. அனைத்து ஆய்வுகளிலும் அரிப்பிபிரசால் (ariprazole) உட்கொள்ளும் குழந்தைகள் /இளம் பருவத்தினர்களுக்கு தசை விறைப்பு(rigidty) , நடுக்கம் மற்றும் கட்டுப்பாடற்ற அசைவுகள் போன்ற இயக்கம் சீர்குலைவு (movement disoders) போன்றவை ஏற்படும் விகிதங்கள் அதிகமாக இருந்தது. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகள் கொண்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர், உடல் எடை அதிகரிப்பு, மற்றும் நரம்பியல் பக்க விளைவுகள் (எ.கா. முகம் மற்றும் தாடையின் தன்னிச்சையான அசைவுகள்) ஏற்படக் கூடியதாக இருந்தாலும், எரிச்சல் தன்மை, மிகைச்சுருதி, மற்றும் மீண்டும் மீண்டும் அதே அசைவுகள் சிகிச்சையளிப்பதற்கு குறைந்த-கால சிகிச்சை திறன் மிக்கதாக இருக்கக் கூடும் என்று இந்த திறனாய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. அரிப்பிபிரசால் (aripiprazole) எடுத்துக் கொள்ளும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு அவ்வப்போது அவர்களின் ஏஎஸ்டி அறிகுறிகள் மற்றும் பக்க விளைவுகளுக்கு மறு பரிசோதனை செய்யப் படவேண்டும். ஒட்டுமொத்தமாக, ஆதாரத்தின் தரம் மிதமானதாக இருந்தது. இந்த ஆய்வுகள் நடத்தப்பட்ட முதல், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகைள் (ஏஎஸ்டி) மற்றும் அதனை போன்ற இதர கோளாறுகளை கண்டறிய புதுபிக்கப்பட்ட கையேடு பிரசுரிக்கப் பட்டுள்ளது. அரிப்பிபிரசால்ளின் (aripiprazole) நீண்டகால பாதுகப்பு மற்றும் பயன் பற்றி மதிப்பிட மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Citation
Hirsch LE, Pringsheim T. Aripiprazole for autism spectrum disorders (ASD). Cochrane Database of Systematic Reviews 2016, Issue 6. Art. No.: CD009043. DOI: 10.1002/14651858.CD009043.pub3.