Skip to main content

கர்ப்பகால கால் தசைப்பிடிப்புக்கான குறுக்கீடுகள்

சோடியம் கூடுதல் சேர்ப்பு கர்ப்ப காலத்தில் பெண்கள் அனுபவித்த தசைப்பிடிப்புக்கள் தாக்குதல்களின் எண்ணிக்கையைக் குறைக்க கூடும் ஆனால் அதன் திறன் சொற்பமானது . கால்சியத்தால் எந்த நன்மையும் இல்லை . மகனீசியம் பயனுள்ளது என்பதற்கான ஆதாரம் வலுவாக உள்ளது. பன்னுயிர்ச்சத்துக்கள் மற்றும் தாது உப்பு துணைத்தீவனங்களும் உதவுவதுபோல் தெரிகிறது.ஆனால் இவற்றிற்குள்ள சம்பந்தம் தெளிவற்றதாயுள்ளது. ஏனெனில் பயன்படுத்தப்படும் தயாரிப்பு பன்னிரண்டு தனி உட்பொருட்களைக் கொண்டுள்ளது ஆகையால் இதில் எது திறன் வாய்ந்தது அல்லது திறன் இவற்றின் கூட்டியக்கம் காரணமாகவா என்பதனை கண்டறிய சாத்தியம் இல்லை. சோடியம் கூடுதல் சேர்ப்பு இரத்த அழுத்தத்தை உயர்த்தும் என்கின்ற தத்துவார்த்த ஆபத்து உள்ளது. பரிந்துரைக்கப்படும் அளவுகளில் மக்னீசியம் கூடுதல் சேர்ப்பு தீங்கு விளைவிக்க சாத்தியமில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பு: சி.இ.ப.ஏன்.அர். குழு

Citation
Young G, Jewell D. Interventions for leg cramps in pregnancy. Cochrane Database of Systematic Reviews 2002, Issue 1. Art. No.: CD000121. DOI: 10.1002/14651858.CD000121.