தாளிறுக்கம் நோய்க்கு (frozen shoulder) கையாளல் சிகிச்சை முறை மற்றும் உடற்பயிற்சி

பின்புலம்

வலி மற்றும் விறைப்புத்தன்மைக்கு, தாளிறுக்கம் ஒரு பொதுவான காரணமாக உள்ளது. வலி மற்றும் விறைப்புத்தன்மை போவதற்கு, இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும், மற்றும் ஆரம்ப கட்டங்களில் மிகவும் வேதனையாக இருக்கக் கூடும்.

கையாளல் சிகிச்சை முறை ஒரு நல்வாழ்வுப் நிபுணரால் மூட்டுகள் மற்றும் பிற அமைப்புகளை இயக்குவதை உள்ளடக்கியது (எ.கா. இயன்முறை மருத்துவர்). மூட்டு மற்றும் தசை சுருக்கம் அல்லதுபரிந்துரைக்கப்பட்ட செயல்பாடு ஆகியவற்றின் குறிக்கோளுடன் கூடிய அசைவு உடற்பயிற்சியில் அடங்கும். இந்த இரு சிகிச்சைகளின் நோக்கம் வலியை குறைப்பது,மூட்டின் இயக்க வரம்பை அதிகரிப்பதுமற்றும்செயல்பாட்டை மேம்படுத்து ஆகும்.

ஆய்வு பண்புகள்

தாளிறுக்கம் கொண்ட மக்களுக்கு, கையாளல் சிகிச்சை முறை மற்றும் உடற்பயிற்சியின் பலன்கள் மற்றும் பாதகங்களைப் பற்றி ஆராய்ச்சியிலிருந்து எங்களுக்கு தெரிவது என்ன என்பதை இந்த மேம்படுத்தப்பட்ட காக்குரேன் திறனாய்வு சுருக்கம் அளிக்கிறது. மே 2014 வரை வெளியான அனைத்து தொடர்புடைய ஆய்வுகளை தேடிய பிறகு, 19 சோதனைகளை (1249 பங்கேற்பாளர்கள்) நாங்கள் சேர்த்துள்ளோம். சேர்க்கப்பட்டிருந்த பங்கேற்பாளர்களில், 54% பெண்களாய் இருந்தனர், அவர்களின் சராசரி வயது 55 ஆண்டுகள், மற்றும் நோயின் சராசரி காலம் 6 மாதங்கள் ஆகும். கையாளல் சிகிச்சை முறை மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை சராசரியாக நான்கு வாரங்கள் அளிக்கப்பட்டது.

முக்கிய முடிவுகள்- கையாளல் சிகிச்சை முறை மற்றும் உடற்பயிற்சியை, குளூக்கோக்கார்ட்டிகாய்டை (வீக்கத்தைக் குறைக்கும் ஒரு ஸ்டீராய்டு) தோள்பட்டை ஊசி மூலம் செலுத்துதலோடு ஒப்பிடுகையில்

வலி (அதிக மதிப்பெண் என்றால் மோசமான வலி என்று அர்த்தம்)

ஆறு வாரங்களுக்கு கைகளால் செய்யப்படும் சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி பெற்றவர்கள் , குளூக்கோக்கார்ட்டிகாய்டு ஊசி சிகிச்சைபெற்றவர்கள் அளவு முன்னேற்றம் அடையவில்லை—ஏழு வார முடிவில் வலியில் முன்னேற்றம்வலி அளவுகோலில் 26 புள்ளிகள் குறைவாக (15- 37 புள்ளிகள் வரை குறைவு)இருந்தது, (முழுமையான முன்னேற்றம் 26% குறைவு).

•கையாளல் சிகிச்சை முறை மற்றும் உடற்பயிற்சி பெற்ற மக்கள், 0 முதல் 100 புள்ளிகள் வரையிலான ஒரு அளவீட்டில், அவர்களின் வலியை, 32 புள்ளிகளாக பதிவிட்டனர்.

• குளூக்கோக்கார்ட்டிகாய்டு சிகிச்சை பெற்ற மக்கள், 0 முதல் 100 புள்ளிகள் வரையிலான ஒரு அளவீட்டில், அவர்களின் வலியை, 51 புள்ளிகளாக பதிவிட்டனர்.

செயல்பாடு (குறைந்த மதிப்பெண்களின் அர்த்தம் சிறந்த செயல்பாடு )

ஆறு வாரங்களுக்கு கைகளால் செய்யப்படும் சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி பெற்றவர்கள் குளூக்கோக்கார்ட்டிகாய்டு ஊசி பெற்றவர்கள் அளவு முன்னேற்றம் அடையவில்லை—ஏழு வார முடிவில் செயல்பாட்டு திறன் அளவுகோலில் 25 புள்ளிகள் குறைவாகவும் (15-35 புள்ளிகள் வரை குறைவு), (முழுமையான முன்னேற்றம் 25% குறைவு).

-கையாளல் சிகிச்சை முறை மற்றும் உடற்பயிற்சி பெற்ற மக்கள், 0 முதல் 100 புள்ளிகள் வரையிலான ஒரு அளவீட்டில், அவர்களின் செயல்பாட்டு திறனை 14 புள்ளிகளாக பதிவிட்டனர்.

• குளூக்கோக்கார்ட்டிகாய்டு பெற்ற மக்கள், 0 முதல் 100 புள்ளிகள் வரையிலான ஒரு அளவீட்டில், அவர்களின் செயல்பாட்டு திறனை, 39 புள்ளிகளாக பதிவிட்டனர்.

சிகிச்சையின் வெற்றி

100ல் 31பேர் குளூக்கோக்கார்ட்டிகாய்டு சிகிச்சையோடு ஒப்பிடுகையில் ஆறு வார கால கையாளல் சிகிச்சை முறை மற்றும்உடற்பயிற்சி சிகிச்சை வெற்றிகரமானது என்று பதிவிட்டனர்— 31%முழுமையான முன்னேற்றம் குறைவு (13%-48% முன்னேற்றம் குறைவு).

•100ல், 46 நோயாளிகள் கைகளால் செய்யப்படும் சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை வெற்றி என்று கருதினர்.

• 100ல் 77 நோயாளிகள் குளூக்கோக்கார்ட்டிகாய்டு ஊசி மூலம் சிகிச்சை வெற்றி என கருதினர்.

பக்க விளைவுகள்

குளூக்கோக்கார்ட்டிகாய்டு ஊசிசிகிச்சையோடு ஒப்பிடுகையில் 6 வார கையாளல் சிகிச்சை முறை மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை எடுத்த 100 பேரில்மூவருக்கு தற்காலிக வலி போன்ற சிறு சிறு பக்க விளைவுகள் ஏற்பட்டது.

•100ல், 56 நோயாளிகள் கைகளால் செய்யப்படும் சிகிச்சை மற்றும் உடற்பயிற்சிக்கு பின் பக்க விளைவுகள் உண்டாகியது என்று கருதினர்.

•100ல் 53 நோயாளிகள் குளூக்கோக்கார்ட்டிகாய்டு ஊசி மூலமான சிகிச்சைக்கு பின் பக்க விளைவுகள் இருந்தது என கருதினர்.

சான்றின் தரம்

கைகளால் செய்யப்படும் சிகிச்சையோடு உடற்பயிற்சியினையும் சேர்க்கும்போது,ஏழுவாரங்கள் வரைஅளிக்கப்படும்குளூக்கோக்கார்ட்டிகாய்டு சிகிச்சையை விட வலிநிவாரணம் மற்றும் செயல்பாட்டில் குறைந்த அளவு முனேற்றம் இருந்ததாகமிதமான தரம்கொண்ட சான்று காண்பிக்கிறது.மேலும்கூடுதலானஎதிர் விளைவுகளெதுவும்பெரும்பாலும் இல்லாதிருக்க கூடும். மேற்கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சி இந்தமதிப்பீட்டை மாற்றக் கூடும்.

குறைந்த-தர சான்று பரிந்துரைப்பது (1) கைகளால் செய்யப்படும் சிகிச்சை, உடற்பயிற்சி மற்றும் மின் சிகிச்சை (அல்ட்ராசவுண்ட் போன்ற) இவற்றை ஒருங்கிணைத்து அளிப்பது வலி அல்லது செயல்பாட்டு திறனை குளூக்கோக்கார்ட்டிகாய்டு தோள்பட்டை ஊசி அல்லது மருந்துப்போலி ஊசியைவிட மேம்படுத்தாது(2) கைகளால் செய்யப்படும் சிகிச்சை, உடற்பயிற்சி, மின்னாற்றல்சிகிச்சைஇவற்றோடு குளூக்கோக்கார்ட்டிகாய்டு ஊசி இணைந்து அளிப்பதால் வலி அல்லதுசெயல்பாட்டில் குளூக்கோக்கார்ட்டிகாய்டுஊசி மட்டும் அளிப்பதை விடமுன்னேற்றம்ஏற்படாது.(3) கைகளால் செய்யப்படும் சிகிச்சை, உடற்பயிற்சி, மின்னாற்றல்சிகிச்சை மற்றும் வாய்வழி ஸ்டெராய்டல்லாத-மற்றும் தடிப்பினைத் தணிக்கும் மருந்துகள் (NSAID)(3) இணைந்து அளிக்கப்படும்போது தனியாக வாய்வழிஸ்டெராய்டல்லாத தடிப்பினைதணிக்கும் மருந்துகளை(NSAID) செலுத்தும்போது உள்ளதை விட செயல்பாட்டினைஅதிகம் மேம்படுத்த முடியாது. மேற்கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சி இந்த மதிப்பீட்டை மாற்றக் கூடும்.

மூட்டு விரிவிற்கானமூட்டு வரைவியினை தொடர்ந்து கண்காணித்தால் கைகளால் செய்யப்படும் சிகிச்சையோடு உடற்பயிற்சியினையும் சேர்க்கும்போது, வலி அல்லது செயல்பாட்டில் போலியான அல்ட்ராசவுண்ட் சிகிச்சையை விட கூடுதல் முன்னேற்றம் இல்லை என உயர்தரமுடைய சான்று காண்பிக்கிறது ஆனால்மிகுந்த அளவு நோயாளி விரும்பும் சிகிச்சையின் வெற்றியும் இயக்கத்தின்முன்னேற்ற அளவினையும் இது அளிக்கலாம். இனி மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி இந்த முடிவுகளை மாற்றி மதிப்பீடு செய்ய சாத்தியமில்லை.

கைகளால் செய்யப்படும் சிகிச்சையோடு உடற்பயிற்சி இணைந்த சிகிச்சைக்கு எதிர் போலியான சிகிச்சை அல்லது எவ்விததலையீடுமில்லாததோடு ஒப்பிட்ட ஆய்வுகள் எதுவுமில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ஹரிஓம், அழகுமூர்த்தி மற்றும் சி.இ, பி.என்.அர் குழு

Tools
Information