குழந்தைகளில் தட்டம்மை சிகிச்சைக்கு கூடுதல் துத்தநாகம்

திறனாய்வு கேள்வி

குழந்தைகளில் தட்டம்மை சிகிச்சைக்கு துத்தநாகம் கூடுதல் சேர்ப்பதால் விளைவு என்ன?

பின்னணி

கடந்த பத்து ஆண்டுகளில் தட்டம்மை தொற்று உலகளாவிய அளவில் குறைந்துவிட்டது, ஆனால் பெறிய தீடீர் தொற்று இன்னமும் இருக்கிறது, குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் நிகழ்கிறது. துத்தநாகம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் உகந்த செயல்பாட்டிற்கு தேவையான அத்தியாவசிய நுண்ணுயிரிகளில் ஒன்றாகும். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் குழந்தைகளில் குறிப்பாக துத்தநாக குறைபாடு உள்ளது. குழந்தைகளில் தட்டம்மை நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் துத்தநாகம் அளிப்பதற்கான சாத்தியமான பங்கை ஆராய்வது மிகவும் முக்கியமானது.

குழந்தைகளில் தட்டம்மை சிகிச்சைக்கு துத்தநாகம் அளிப்பதன் விளைவாக வெளியிடப்பட்ட ஆய்வுகளின் தற்போதைய ஆதாரங்களை விமர்சன ரீதியாக மதிப்பிடுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.

தேடல் தேதி

03 பிப்ரவரி 2017 வரை நாங்கள் ஆதாரங்களை தேடினோம். இது 2015 இல் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் புதுப்பிப்பாகும். இந்த மேம்படுத்தல்களில் புதிய ஆராய்ச்சிகளை நாங்கள் சேர்க்கவில்லை.

ஆய்வு பண்புகள்

ஒரு சிறிய சீரற்ற சோதனை (85 குழந்தைகளை உள்ளடக்கியது), தட்டம்மை மற்றும் நிமோனியா உள்ள குழந்தைகளுக்கு துத்தநாகம் கூடுதலுக்கு எதிராக மருந்தற்ற குளிகை ஒப்பிட்டு வழங்கப்படுகிறது. அனைத்து 85 குழந்தைகளும் ஆதரவளிக்கும் பாதுகாப்பு மற்றும் வைட்டமின் ஏ பெற்றனர். இந்தியாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, குழந்தை நல அறக்கட்டளை அமெரிக்கா மற்றும் நெஸ்லே அறக்கட்டளை மூலம் நிதியுதவி செய்யப்பட்டது.

முக்கிய முடிவுகள்

இதில் சேர்க்கப்பட்ட ஆய்வு சிறியதாக இருந்தது மற்றும் போதுமான தரவுகளை வழங்கவில்லை துத்தநாகம் இறப்புக்கு விளைவிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க மருந்தற்ற குளிகையோடு ஒப்பிடுபோது. என்றாலும் எந்தவொரு பாதகமான விளைவுகளும் தெரிவிக்கப்படவில்லை, குழந்தைகளில் தட்டம்மை அறிகுறிகளை மேம்படுத்துவதற்காக துத்தநாக கூடுதல் சேர்ப்புகளை பயன்படுத்துவது பற்றிய எந்த முடிவையும் எடுக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. எந்த நன்மையையும் தீங்குகளையும் தெளிவுபடுத்துவதற்கு அதிக ஆராய்ச்சி தேவை.

ஆதாரங்களின் தரம்

ஆதாரங்களின் தரத்தை மிகவும் குறைவாக மதிப்பிட்டுள்ளோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [வசந்த், ஜாபெஸ் பால்]

Tools
Information