புற்றுநோய் உடல்மெலிவுச் சீர்கேடு கொண்ட நோயாளிகளுக்கு உடற்பயிற்சி திறன் மிக்கதாக இருக்குமா?

புற்று நோய் மற்றும் அதின் சிகிச்சை காரணத்தினால், உடல்மெலிவுச் சீர்கேட்டின் ஒரு பகுதியாக அநேக புற்றுநோய் நோயாளிகள் உடல் எடை (தசை மற்றும் கொழுப்பு) குறைவர். இது, தசை பலவீனம், அயர்ச்சி, சக்தியின்மை மற்றும் குறைந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றுக்கு வழி வகுக்கும். நோயாளிகளின் மீது புற்றுநோய் உடல்மெலிவுச் சீர்கேட்டின் விளைவை குறைக்க உடற்பயிற்சியானது ஒரு சாத்தியமான சிகிச்சையாகும். இந்த முறைப்படுத்தப்பட்ட திறனாய்வில், புற்றுநோய் உடல்மெலிவுச் சீர்கேடு கொண்ட புற்றுநோய் நோயாளிகளில் உடற்பயிற்சி ஆய்வுகளை அடையாளம் காண பிரதான தரவுத்தளங்கள் மற்றும் மாநாடு அறிக்கைகளை நாங்கள் தேடி மற்றும் அந்த துறையின் வல்லுநர்களை தொடர்புக் கொண்டோம். ஜூன் 2014-க்குமான எங்களின் பரந்தளவிலான இலக்கிய தேடல், திறனாய்வில் சேர்க்கத்தகுந்த ஆய்வுகளை காணவில்லை. ஆதலால், புற்றுநோய் உடல்மெலிவுச் சீர்கேட்டில் உடற்பயிற்சியின் விளைவை தீர்மானிக்க இலக்கியத்தில் கிடைக்கப் பெறும் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளிலிருந்து எந்த ஆதாரத்தையும் நாங்கள் காணவில்லை. அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது. இந்த தலைப்பின் மீது தற்போது ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன,ஆதலால், அவற்றின் முடிவுகளை சேர்த்து இந்த திறனாய்வை நாங்கள் புதுப்பிப்போம்.

மொழிபெயர்ப்பு: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information
Share/Save