கீல்வாதத்திற்கான மூலிகை மேற்பூச்சு சிகிச்சைகள்

கீல்வாதத்திற்கு மூலிகை மருந்து தோல் மேல் பூசும் மருந்தின் விளைவுகளை குறித்து ஆய்வுகள் மூலம் நாங்கள் அறிந்து கொண்டதை இந்த புதுப்பிக்கப்பட்ட காக்குரேன் திறனாய்வு சுருக்கம் வழங்குகிறது.

இந்த ஆய்வு கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூருவது:

அர்நிக்கா (Arnica) களிம்பு ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள்ப் போல வலி மற்றும் செயல்பாட்டு திறனை மேம்படுத்தும்.

காப்சிகம் சாறு களிம்பு வலி மற்றும் செயல்பாட்டு திறனை மருந்தற்ற குளிகை எடுத்துக்கொள்பவரைக் விட வலியை குறைக்காது;

காம்பிரே (Comfrey) சாறு களிம்பு மருந்துப்போலி விட வலியைக் குறைக்கலாம்.

காம்பிரே (Comfrey) சாறு களிம்பு மருந்துப்போலி விட வலியைக் குறைக்கலாம்.

மூலிகை சிகிச்சைகள், பக்க விளைவுகள் ஏற்படுதலாம் இருப்பினும் அவற்றை பற்றிய துல்லியமான தகவல்கள் எங்கள் இடம் இல்லை. குறிப்பாக இது ஒரு அரிதான ஆனால் தீவிர பக்க விளைவாகும். தோல் எரிச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.

கீல்வாதம் என்றால் என்ன மற்றும் மூலிகை சிகிச்சை என்றால் என்ன?

கீல்வாதம் என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது வளர்ந்து, அதன் பாதிப்பை சரி செய்ய முயற்சிக்கும். ஆனால், எலும்பு வழக்கதிற்கு மாறாக வளர்ந்து இந்நிலையை சரி செய்வதற்கு பதிலாக, மோசமடையச் செய்கிறது. உதாரணமாக, எலும்பானது உருவிழந்து, மூட்டுவலியையும், மற்றும் அசைவின்மையை உண்டாக்ககூடியது. உங்கள் உடல் செயல்பாடு, குறிப்பாக உங்கள் மூட்டுகள் செயல்பாட்டு திறனை பாதிக்கும்.

மூலிகை மருந்துகள் என்பது தரைக்கு மேலே அல்லது நிலத்தடியிலுள்ள தீவிர செயல்திறன் கொண்ட தாவர பாகங்களின் ஆக்கக் கூறுகள் அல்லது பிற தாவர பொருள், அல்லது இவற்றின் சேர்க்கைகள் கொண்ட கச்சா நிலையிலோ அல்லது ஆலை தயாரிப்பாகவோ, (உதாரணமாக சாறு, எண்ணெய்கள், டிங்க்சர்கள் ) தயாரிப்பில் இறுதியானதும் பெயர் முத்திரை இடப்பட்டதுமான மருந்துப் பொருட்கள், என வரையறுக்கப்பட்டுள்ளது

கீல்வாதம் உடையவர்களுக்கு அர்நிக்கா (Arnica) களிம்பு தடவுவதால் ஏற்படுபவை என்ன என்பதற்கான ஒரு சிறந்த அளவீடு :

அர்நிக்கா சாறு களிம்பு இப்யூபுரூஃபனுடன் (ஒரு ஸ்டெராய்டல்லாத அழற்சி) ஒப்பிடுகையில்.

வலி (குறைந்த மதிப்பெண்கள் சிறந்த செயல்பாடு அர்த்தம்): அர்நிக்கா களிம்பு பயன்படுத்தியவர்கள் ஐபுப்ரூஃபன் களிம்பு பயன்படுத்தியவர்களைவிட ஒப்பிடுகையில், அவர்களின் வலியை 3.8 புள்ளிகள் குறைவாக (10.1 குறைந்த பதிப்பிடு முதல் 2.5 புள்ளிகள் வரை ) மதிப்பீடு செய்தார்கள். 3 வராச் சிகிச்சைக்கு பினர் அர்நிக்கா பயன்படுத்தியவர்கள் 40.4 புள்ளிகள் என்று மதிப்பீடு செய்தனர் மற்றும்இப்யூபுரூஃபன் பயன்படுத்தியவர்கள் அவர்களின் வலியை 44.2 என்று 0 முதல் 100 உள்ள ஒரு அளவுகோளில் மதிப்பிடு செய்தார்கள்.

உடல் செயல்பாடு (குறைந்த மதிப்பெண்கள் சிறந்த செயல்பாடு அர்த்தம்): அர்நிக்கா களிம்பு பயன்படுத்தியவர்கள் ஐபுப்ரூஃபன் களிம்பு பயன்படுத்தியவர்களைவிட ஒப்பிடுகையில், அவர்களின் உடல் செயல்பாட்டை 0.4 புள்ளிகள் குறைவாக (1.75 குறைந்த பதிப்பிடு முதல் 0.95 புள்ளிகள் வரை ) மதிப்பீடு செய்தார்கள். 3 வராச் சிகிச்சைக்கு பினர் அர்நிக்கா பயன்படுத்தியவர்கள் உடல் செயல்பாட்டை 0-30 வரை உள்ள ஒரு அளவுக்கோளில் 7.1 புள்ளிகள் என்றும்இப்யூபுரூஃபன் பயன்படுத்தியவர்கள் 7.5 என்றும் மதிப்பீடு செய்தார்கள்.

பக்க விளைவுகள் : அர்நிக்கா பயன்படுத்திய பெருன்பான்மையானோர் இப்யூபுரூஃபன் பயன்படுத்திய வர்களை விட அதிகமாக பக்க விளைவுகள் வந்தது என்று கூறினர். அரிக்கா பயன்படுத்திய 105வரில் 14 பேரும் ஐபுப்ரூஃபன் பயன்படுத்திய 99 பேரில் 8 பேர் பக்க விளைவுகள் வந்தது என்று கூறினர்.

காப்சிகம் சாறு களிம்பு கீல்வாதம் உடையவர்களுக்கு ஏற்படுபவை என்ன என்பதற்கான ஒரு சிறந்த அளவீடு:

காப்சிகம் சாறு களிம்பு மருந்துப்போலியுடன் ஒப்பிடும்போது

வலி (குறைந்த மதிப்பெண்கள் சிறந்த செயல்பாடு அர்த்தம்): காப்சிகம் களிம்பு பயன்படுத்தியவர்கள் மருந்தற்ற குளிகை களிம்பு பயன்படுத்தியவர்களைவிட ஒப்பிடுகையில், அவர்களின் வலியை 1.0 புள்ளிகள் குறைவாக (6.76 குறைந்த பதிப்பிடு முதல் 4.76 புள்ளிகள் வரை ) மதிப்பீடு செய்தார்கள். 4 வராச் சிகிச்சைக்கு பினர் காப்சிகம் பயன்படுத்தியவர்கள் பயன்படுத்தியவர்கள் அவர்களின் வலியை 44.6 புள்ளிகள் என்றும் மருந்தற்ற குளிகை பயன்படுத்தியவர்கள் 45.6 என்று மதிப்பீடு செய்தார்கள்.

உடல் செயல்பாடு (குறைந்த மதிப்பெண்கள் சிறந்த செயல்பாடு அர்த்தம்): காப்சிகம் களிம்பு பயன்படுத்தியவர்கள் மருந்துப்போலி களிம்பு பயன்படுத்தியவர்களைவிட ஒப்பிடுகையில், அவர்களின் உடல் செயல்பாட்டை 2.64 புள்ளிகள் குறைவாக (9.51 குறைந்த பதிப்பிடு முதல் 4.23 புளிகள் வரை) 0-96க்குள்ளான ஒரு அளவுக்கோலில் மதிப்பீடு செய்தார்கள். 4 வராச் சிகிச்சைக்கு பினர் காப்சிகம் பயன்படுத்தியவர்கள் பயன்படுத்தியவர்கள் அவர்களின் உடற்சார்ந்த செயல்பாட்டு திறனை 0-96 என்கின்ற அளவுகோளில் 32.15 புள்ளிகள் என்றும் இப்யூபுரூஃபன் பயன்படுத்தியவர்கள் 34.79 என்று மதிப்பீடு செய்தார்கள்.

பக்க விளைவுகள் : காப்சிகம் (capsicum) பயன்படுத்தப்படுதியவர்கள் மருந்தற்ற குளிகை பயன்படுத்தப்படுதியவர்களை விட அதிகாமான எதிர்விளைவு நிகழ்வுகலை சந்தித்ததாக கூறினர். 338 எதிர்விளைவு நிகழ்வுகள் தெரிவிக்கப்பட்டத்தில், இதில் 272 காப்சிகம் பயன்படுத்தியவர்கள் மற்றும் 66 நிகழ்வுகள் மருந்தற்ற குளிகை பயன்படுத்தியவர்களுக்கு நிகழ்தது.

கீல்வாதம் உடையவர்களுக்கு கம்பரே (comfey) களிம்பு தடவுவதால் ஏற்படுபவை என்ன என்பதற்கான ஒரு சிறந்த அளவீடு :

கம்பரே Comfrey சாறு களிம்பு மருந்துப்போலியுடன் ஒப்பிடும்போது

வலி: (அதிக மதிப்பெண்கள் என்றால் கடுமையான அல்லது மோசமான வலி என்று அர்த்தம்): கம்பரே பயன்படுத்தியவர்கள் மருந்துப்போலி களிம்பு பயன்படுத்தியவர்களைவிட ஒப்பிடுகையில், அவர்களின் வலி 16.33 புள்ளிகள் குறைவாக (20.08ல் இருந்து 12.58 குறைந்த) என்று மதிப்பிடு செய்தனர். 3 வராச் சிகிச்சைக்கு பினர் கம்பரே பயன்படுத்தியவர்கள் 0 முதல் 100 உள்ள ஒரு அளவுகோளில், அடிப்படை அளவு நிலையில் இருந்து 20.9 புள்ளிகள் குறைந்தது என்று மதிப்பீடு செய்தனர் மற்றும் மருந்தற்ற குளிகை பயன்படுத்தியவர்கள் அவர்களின் வலியை 4.6 புள்ளிகள் குறைந்தது என்று மதிப்பீடு செய்தனர்.

பக்க விளைவுகள் : கம்பரே பயன்படுத்திய ஒரு சிறுபான்மையானோர் மருந்தற்ற குளிகை பயன்படுத்திய வர்களை விட அதிகமாக பக்க விளைவுகள் வந்தது என்று கூறினர். கம்பரே பயன்படுத்திய 110 பேரில் 7 பேரும் மருந்தற்ற குளிகை பயன்படுத்திய 110 பேரில் 15 பேர் பக்க விளைவுகள் வந்தது என்று கூறினர்.

சீன மூலிகை மருத்துவ திட்டுகள்

சீன மூலிகை கலவைகள் FNZG மற்றும் SJG கொண்ட ஒட்டக்கூடிய இணைப்பினை மருந்தற்ற குளிகை ஒப்பிடுகையில். இந்த தலையீடு ஏழு நாட்களுக்கு மட்டுமே சோதனை செய்யப்பட்டது ஆகையால் சீன மூலிகை திட்டுகள் கீல்வாதம் பாதிக்கும் என்பதை பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

வலி: (அதிக மதிப்பெண்கள் என்றால் கடுமையான அல்லது மோசமான வலி என்று அர்த்தம்): FNZG பயன்படுத்தியவர்கள் மருந்துப்போலி களிம்பு பயன்படுத்தியவர்களைவிட ஒப்பிடுகையில், அவர்களின் வலி 1.44 புள்ளிகள் குறைவாக (9.28 ல் இருந்து குறைந்து 6.40 அதிகம்) மற்றும் SJG பயன்படுத்தியவர்கள் மருந்துப்போலி களிம்பு பயன்படுத்தியவர்களைவிட 1.08 குறைந்தது (6.28. குறைவில் இருந்து 8.40 அதிகம்) FNZG உபோகித்தவர்கள் தங்களின் வலியை அடிப்படை அளவு நிலையில் இருந்து 19.20 புள்ளிகள் குறைந்தது என மதிப்பீடு செய்தார்கள். SJG உபோகித்தவர்கள் தங்களின் வலியை அடிப்படை அளவு நிலையில் இருந்து 16.04 புள்ளிகள் குறைந்தது என மதிப்பீடு செய்தார்கள். மருந்தற்ற குளிகை உபோகித்தவர்கள் தங்களின் வலியைஅடிப்படை அளவு நிலையில் இருந்து 17.68 புள்ளிகள் குறைந்தது என மதிப்பீடு செய்தார்கள்.

உடல் செயல்பாடு (குறைந்த மதிப்பெண்கள் சிறந்த செயல்பாடு அர்த்தம்): FNZG பயன்படுத்தியவர்கள் SJG பயன்படுத்தியவர்களை ஒப்பிடுகையில், அவர்களின் உடல் செயல்பாட்டை 2.61 புள்ளிகள் குறைவாக (9.50 குறைந்த பதிப்பிடு முதல் 4.28 புளிகள் அதிக மதிப்பிடு) மதிப்பிடு செய்தனர். மற்றும் SJG பயன்படுத்தியவர்கள் மருந்தற்ற குளிகை பயன்படுத்தியவர்களை ஒப்பிடுகையில் 2.9 புள்ளிகள் குறைவாக (9.60 றைந்த பதிப்பிடு முதல் 3.66 புளிகள் அதிக மதிப்பிடு) மதிப்பிடு செய்தனர். FNZG உபோகித்தவர்கள் தங்களின் உடல் செயல்பாட்டை அடிப்படை அளவு நிலையில் இருந்து 5.04 புள்ளிகள் குறைந்தது (மேம்பட்டது) என மதிப்பீடு செய்தார்கள். SJG உபோகித்தவர்கள் தங்களின் உடல் செயல்பாட்டை அடிப்படை அளவு நிலையில் இருந்து 6.71 புள்ளிகள் குறைந்தது (மேம்பட்டது) என மதிப்பீடு செய்தார்கள்.மருந்தற்ற குளிகை உபோகித்தவர்கள் தங்களின் உடல் செயல்பாட்டை அடிப்படை அளவு நிலையில் இருந்து 5.04 புள்ளிகள் குறைந்தது (மேம்பட்டது) என மதிப்பீடு செய்தார்கள்.

பக்க விளைவுகள்: மூலிகை மருத்துவ திட்டுகள்தி பயன்படுத்திய பெருன்பான்மையானோர் மருந்தற்ற குளிகை திட்டுகள் பயன்படுத்திய வர்களை விட அதிகமாக பக்க விளைவுகள் வந்தது என்று கூறினர். FNZG பயன்படுத்திய 60பேரில் நால்வரும் SJG பயன்படுத்திய 60 பேரில் நால்வருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டது என்றும், மருந்தற்ற குளிகை உபோகித்த 30 பேரில் யாவருக்கும் பக்க விளைவுகள் வரவில்லை என்று கூறினர்.

பிற இடத்துக்குரிய பொருட்கள்

கீல் வாத வலி அல்லது செயல்பாட்டு திறன் முன்னேற்றமடைவதை மூலிகைத் தயாரிப்புகள் மேம்படுத்தும் என்பதை எங்களால் திட்டவட்டமாக கூற முடியவில்லை.ஏனெனில் இதற்கான ஆதாரம் குறைந்த தரம் முதல் மிக குறைந்த தரம் உள்ள ஆதாரங்களை உடையதாய் உள்ளது. FNZG திட்டுகலை நேருக்கு நேர் SJGயுடன் ஒப்பிடும்போது Marhame-Mafasel அழுத்தி மருந்துப்போலியுடன் ஒப்பிடும்போது கட்டைவிரல் அல்லது முழங்காலில் கீல்வாதம் உள்ளவர்களில் இரண்டு வெவ்வேறு ஆய்வுகளில் ஸ்டின்கிங் நேட்டலே இலை மருந்தற்ற குளிகையுடன் ஒப்பிடத்து.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information