சமூகத்தில் வாழும் வயதான மக்களில், விழுதலின் பயத்தை குறைப்பதற்கான உடற்பயிற்சி

பல வயதான மக்கள், விழுவதை பற்றி பயப்படுவர், அதுவும் ஒரு தடவை விழுந்த பின் மிக அதிகமாக பயப்படுவர். விழுவதை பற்றிய பயம், ஒரு வயதான நபரின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையின் மீது ஒரு தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும், ஏனென்றால், அவை பெரும்பாலும் அவர்களின் உடல் மற்றும் சமூக நடவடிக்கைகளைக் குறைக்கிறது.

உடல் திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட ஒரு திட்டமிட்ட, கட்டமைக்கப்பட்ட, மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய உடல் செயல்பாடு வடிவத்திலான உடற்பயிற்சி, விழுவதின் பயத்தை குறைக்க உதவுமா என்பதை கண்டறிய நாங்கள் விரும்பினோம். உடற்பயிற்சி தலையீடு வகைகளில், உடற்-சமநிலை பயிற்சி, வலிமை மற்றும் எதிர்ப்பு பயிற்சி மற்றும் முப்பரிமாண (3D) பயிற்சிகளான நடனம் அல்லது தாய்சி ஆகியவை அடங்கும். உடற்பயிற்சியானது பல்வேறு வழிகளில் வழங்கப்பட முடியும். ஒரு பயிற்றுவிப்பாளர் மூலம் பங்கேற்பாளர்கள் கற்றுக் கொள்ளக்கூடிய குழு அமர்வுகளாக அமையலாம் அல்லது தனிநபர்கள், மேற்பார்வை இல்லாமல் தாங்களே உடற்பயிற்சி செய்துக்கொள்ள, அவர்களுக்கு உடற்பயிற்சி செயல்முறை கையேடுகள், டிவிடிக்கள், அல்லது டேப்புகள் வழங்கப்படலாம்.

உடற்பயிற்சியின் விளைவுகளை சோதித்த, மற்றும் 65 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலான வயதுடைய சமுக-வாழ் மக்களில் (அதாவது, வீட்டில் அல்லது செவிலிய பராமரிப்பு அல்லது புனர்வாழ்வு வழங்கப்படாத இடங்களில் வசிப்பவர்கள்) விழுவதை பற்றிய பயத்தை பதிவு செய்த ஜூலை 2013 வரைக்குமான ஆய்வுகளை நாங்கள் மருத்துவ இலக்கியத்தில் தேடினோம். ஆய்வுகள், உடற்பயிற்சியை சிகிச்சையின்மையோடு, அல்லது கல்வி போன்ற ஒரு மாற்று தலையீட்டோடு ஒப்பிட்டன.

சான்றின் தொகுப்பு

68 முதல் 85 ஆண்டுகள் வரை சராசரி வயது கொண்ட மொத்தம் 2878 பங்கேற்பாளர்கள் இருந்த 30 ஆய்வுகளை இந்த திறனாய்வில் நாங்கள் சேர்த்தோம். பெரும்பாலான ஆய்வுகள், முக்கியமாக பெண்களை சேர்த்தனர். பன்னிரண்டு ஆய்வுகள், அதிகப்படியான விழுதல் ஆபத்தைக் கொண்ட பங்கேற்பாளர்களை சேர்த்தனர், மற்றும் மூன்று ஆய்வுகள், விழுவதை பற்றிய பயமும் கொண்ட மக்களை அமர்த்தினர். அனைத்து ஆய்வுகளும் சற்றே ஒரு தலைச் சார்பு அபாயத்தைக் கொண்டிருந்தன, ஏனென்றால் பங்கேற்பாளர்கள் தாங்கள் எந்த குழுவில் இடம் பெற்றிந்தார்கள் என்பதை அறிந்திருந்தனர். மறைக்கப்படாத இந்த பற்றாக்குறை, ஆய்வு முடிவுகளின் மேல் தாக்கம் கொண்டிருக்கக் கூடும்.

தலையீட்டிற்குப் பின் உடனடியாக, உடற்பயிற்சி தலையீடுகள் சிறிது முதல் மிதமான அளவில் விழுதலின் பயத்தை குறைத்தது என்பதற்கான குறைந்த தர ஆதாரத்தை 24 ஆய்வுகளிலிருந்து நாங்கள் கண்டோம். இந்த விளைவு, உயர் விழுதல் அபாயம், அல்லது குழு அல்லது தனிப்பட்ட உடற்பயிற்சி போன்ற வேற விதமான உடற்பயிற்சி தலையீடுகள் கொண்டிருந்த பல்வேறு மக்கள் குழுக்களில் வேறுப்பட்டிருந்ததா என்பதை தீர்மானிக்க சில பகுப்பாய்வுகள் தேடல்கள் எங்களுக்கு உதவவில்லை. தலையீடு முடிந்த அடுத்த சில மாதங்களில், விழுதல் பற்றிய பயத்தின் மேல் உடற்பயிற்சியின் விளைவு பராமரிக்கப்பட்டிருந்தது என்று எங்களுக்கு மிகவும் சரியாக தெரியவில்லை.

விழுதல் பற்றிய பயத்தை பதிவு செய்த ஆய்வுகளை மட்டும் நாங்கள் சேர்த்துள்ளோம், அதனால், பிற விளைவுகள் (விழுதல்கள், மனச்சோர்வு பதற்றம் மற்றும் உடல் செயல்பாடு) பற்றிய ஆதாரம், இவ்விளைவுகளின் மேல் உடற்பயிற்சியின் பலன்கள் பற்றிய மொத்த ஆதாரங்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே ஆகும். எனினும், உடற்பயிற்சியானது விழுதல் அபாயத்தை மற்றும் விழுதல் எண்ணிகையை குறைத்தன என்று இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டுள்ள ஒன்பது ஆய்வுகளிலிருந்த ஆதாரங்கள் காட்டுகிறது, மற்றும் விழுதலை தடுக்கும் உடற்பயிற்சியின் விளைவுகளை சோதித்த மற்றொரு காக்குரேன் திறனாய்வின் முடிவுகளுக்கு இசைவானதாக உள்ளது. மற்ற விளைவுகளின் மேலுள்ள ஆதாரம் மிகக் குறைவாக உள்ளது மற்றும் சேர்க்கப்பட்டிருந்த எந்த ஆய்வுகளும், நடவடிக்கை தவிர்த்தல் அல்லது செலவுகளின் மேல் உடற்பயிற்சி தலையீடுகளின் விளைவுகளை அறிக்கையிடவில்லை.

முடிவு

சமூக-வாழ் வயதான மக்களில், உடற்பயிற்சி தலையீடுகள், தலையீட்டிற்கு பின் உடனடியாக, விழுதல் பயத்தை, விழுதல் அடுக்கு நிகழ்வை அதிகரிக்காமல் குறைந்தளவிற்கு குறைத்தன என்று முடிவு செய்தோம். தலையீட்டின் இறுதிக்கு பின்னும், உடற்பயிற்சி தலையீடுகள் விழுதல் பயத்தை குறைத்தனவா அல்லது பிற விளைவுகளின் மேல் அவற்றின் பலன்கள் ஆகியவற்றை தீர்மானிக்க போதுமான ஆதாரம் இல்லை என்றும் முடிவு செய்தோம். இந்த தலைப்பில், மேற்படியான ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information