மார்பக புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் நிணநீர் தேக்க வீக்கத்தை (lymphoedema) தடுக்கும் இடையீடுகள்

திறனாய்வு கேள்வி

நாங்கள் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் நிணநீர் தேக்க வீக்கத்தை (lymphoedema) தடுக்கும் சிகிச்சை தலையீடுகள் பற்றிய சான்றுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

பின்புலம்

புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒன்றில் ஐந்து பேர் நிணநீர் தேக்கத்தால் (lymphoedema) பாதிப்படைகின்றனர். நாங்கள் கைமுறை செயல்களால் நிணநீர் வடித்தல் (ஒரு மசாஜ் சிகிச்சை ), அமுக்கம் மற்றும் உடற்பயிற்சி போன்ற சில முறைகளாலோ அல்லது கல்வியினால் மட்டுமோ நிணநீர் தேக்க வீக்கத்தை தடுக்க உதவ முடியுமா என்பதனைத் தீர்மானிக்க கிடைக்கப் பெற்ற சான்றுகளை திறன்ஆய்வு செய்தோம்.

ஆய்வின் பண்புகள்
இந்த ஆதாரம் மே 2013வரை தற்போதியவை. பத்து சான்றுகள் ஆய்வுக்கு உட்படுதப்பட்டடது. அவற்றில் நான்கு ஆய்வுகள் கைமுறையால் நிணநீர் வடித்தலுடன் வழக்கமான பராமரிப்பு அல்லது உடற்பயிற்சியுடன் கூடிய பராமரிப்பு அல்லது உடல்நலக்கல்வி (395 பங்கேற்பாளர்கள்) மட்டும் உட்படுத்தப்பட்டவை; மூன்று ஆய்வுகள் அறுவை சிகிச்சைக்கு பின்னர் சீக்கிரம் மற்றும் தாமதமாக தொடங்கிய தோள்பட்டை பயிற்சிகளில் (378 பங்கேற்பாளர்கள்) பங்கேற்றவர்கள் மேல் செய்யப்பட்டது; இரண்டு ஆய்வுகள் படிப்படியாக அதிகரிக்கும் உடற்பயிற்சி அல்லது வரையறை படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மேல் (358 பங்கேற்பாளர்கள்) மேற்கொள்ளப்பட்டடது; ஒரு ஆய்வு இயண்முறை மருத்துவம் உட்கொண்டோர் அல்லது உட்கொள்லோதார் (65 பங்கேற்பாளர்கள்) மீது செய்யப்பட்டது. நோயாளிகள் இரண்டு நாட்களில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரை தொடர்க் கண்காணிப்பு காலம் இருந்தது.

முக்கிய முடிவுகள்

நிணநீர் தேக்க வீக்கத்தின் நிகழ்வை கட்டுப்படுத்த உடற்பயிற்சி அல்லது உடல்நலக்கல்வியுடன் கைகளால் நிணநீர் வடித்தலின் பயன்கள் குறித்து எந்தவொரு உறுதியான முடிவும் எடுக்க இயலவில்லை. இந்த திறனாய்வில் உட்படுத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளும் ஒன்றுக்கொன்று எதிர்மறையான முடிவுகளை தந்ததே இதற்கு காரணம் ஆகும். மேலும் கைகளால் நிணநீர் வடித்தலுடன் மற்ற தலையீடுகளும் சேர்த்து அளிப்பது குறித்து எந்தவொரு உறுதியான முடிவும் எட்டப்படவில்லை ஏனெனில் சீராய்விற்கு உட்படுத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளும் வெவ்வேறு மருத்துவமுறைகளை சேர்த்து ஆராய்ச்சி செய்ததே இதற்கு காரணம். இந்த ஆய்வுகளில் ஒன்று உடற்பயிற்சியுடன் இணைந்த கைமுறைகளால் நிணநீர் வடித்தல் செயற்பாடு மூலம் நிணநீர் தேக்க வீக்கம் ஏற்படுவதை குறைக்கலாம் என்று தெரிவிக்கிறது. கைகளால் நிணநீர் வடித்தலுடன் அமுக்கம் குறித்து ஆராய்ச்சி செய்த மற்ற ஆய்வு குறைந்த அளவு பங்கேற்பாளர்களை கொண்டமையால் உறுதியான முடிவு எடுப்பதில் தடுமாற்றம் கண்டுள்ளது.

கைகளால் நிணநீர் வடித்தல் செயற்பாடு கைகளின் (எ.கா. கைகளை தலைக்கு மேல் தூக்குதல்) அசைவாற்றலை மேம்படுத்துகிறது. ஆனால் இந்த முன்னேற்றம் மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் சில வாரங்களே நீடித்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக அல்லது தாமதமாக தொடங்கிய தோள்பட்டை பயிற்சிகள் நிணநீர் தேக்க வீக்கத்தின் நிகழ்வாய்ப்பை குறைக்குமா என்ற என்ற கேள்விக்கு, ஆய்வுகள் தெளிவான முடிவை வழங்கவில்லை. அறுவை சிகிச்சைக்கு பின்னர் (முதல் 6-12 மாதங்கள் வரை), நிணநீர் தேக்க வீக்கத்தின் நிகழ்ப்பாடு உடனடியான தோள்பட்டை பயிற்சிகளில் பங்கேற்றவர்களில் 5 முதல் 27 விழுக்காடு வரையும், தாமதமாக தொடங்கியவர்களில் 4 முதல் 20 விழுக்காடு வரையும் காணப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முதல் வாரத்திற்கு பிறகு தோள்பட்டை பயிற்சிகளில் ஈடுபடுதலை காட்டிலும் முதல் வாரத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டால் தோள்பட்டையின் அசைதன்மை முதல் மாதம் வரை மேம்படும் என்று தெரிகிறது, ஆனால், எந்த ஒரு உறுதியான முடிவுக்கும் வர முடியாத சூழல் உள்ளது.

அறிகுறிகளை கண்காணித்து அது தோன்றும் போது உடனுக்குடன் சிகிச்சை அளிப்பது என்ற சூழ்நிலையில் , கட்டுப்படுத்தப்பட்ட உடல் அசைவுடன் ஒப்பிடுகையில் படிப்படியாக எடை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள் (Progressive resistance training) நிணநீர் தேக்க வீக்கம் நிகிழ் வாய்ப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்படவில்லை.

வழியை குறைப்பதிலோ அல்லது வாழ்க்ககை தரத்தை மேம்படுத்ததிலோ அராயப்பட்ட அனைத்து தலையீடுகளின் திறன் பற்றி எந்தவொரு உறுதியான தீர்மானத்திற்கும் வர இயலவில்லை.

சான்றுகளின் தரம்

வலிமை உடல் பயிற்சிகளுக்கு மிதமான தரம் சான்றுகள் இருந்தபோதும், மற்றவைகளுக்கு சான்றுகளின் தரம் தாழ்ந்ததாக இருந்தது. நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்ட விதத்தில் குறைபாடு உள்ளதே இதற்கு காரணம். மேலும் ஒவ்வொறு தலையீடுக்கும் குறைந்த அளவிலான ஆய்வே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. மேற்கொள்ளப்பட்ட ஒப்பிடு ஆய்வுகளும் அதன் முடிவுகளில் மாறுபடுகின்றன. மற்றும் ஆய்வுகள் குறைந்த அளவிலான பங்கேற்பாளர்களிடமே மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ஷங்கர் கணேஷ் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information