ஆஸ்துமா கொண்ட குழந்தைகள் மற்றும் 18 வயது அல்லது அதற்கும் குறைவான வளர் இளம் பருவத்தினருக்கான நீச்சல் பயிற்சி

ஆஸ்துமா என்பது, குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரில் இடைவெளி கொண்ட மூச்சிறைப்பு, இருமல் மற்றும் நெஞ்சடைப்பு ஆகியவற்றை உண்டாகும் ஒரு பொதுவான வியாதியாகும். நீச்சல் போன்ற உடலியக்க பயிற்சி ஆஸ்துமாவை மோசமாக்கும் என்ற எண்ணம் இருப்பதினால், இது பங்கேற்பை குறைத்து மற்றும் குறைவான உடற்திறனிற்கு வழி வகுக்கும். ஆஸ்துமா கொண்ட குழந்தைகள் மற்றும் 18 வயது அல்லது அதற்கும் குறைவான வளர் இளம் பருவத்தினரில் நீச்சல் பயிற்சியின் திறன் மற்றும் பாதுகாப்பை நிர்ணயிக்க இந்த திறனாய்வு நோக்கம் கொண்டிருந்தது.

நன்கு-கட்டுப்படுத்தப்பட்ட ஆஸ்துமாவை கொண்ட 5 வயது முதல் 18 வருடங்கள் வரை வயதை கொண்டிருந்த 262 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய மொத்தம் எட்டு ஆய்வுகளை நாங்கள் திறனாய்வு செய்தோம். ஏழு ஆய்வுகளில், அவர்கள் ஆறு முதல் பன்னிரண்டு வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் இரண்டு முதல் மூன்று தடவைகள் முப்பது முதல் தொன்னூறு நிமிடங்கள் வரை வேறுப்பட்டிருந்த நீச்சல் பயிற்சியை மேற்கொண்டனர்;ஒரு ஆய்வில், வாரத்திற்கு முப்பது நிமிடங்கள் என்று ஆறு தடவைகள் வரை நீச்சல் பயிற்சி நீடித்தன.

கட்டுப்பாட்டோடு (வழக்கமான பராமரிப்பு அல்லது மற்றொரு உடலியக்க நடவடிக்கை) நீச்சல் பயிற்சியை ஒப்பிடுகையில், ஓய்வின் போதான நுரையீரல் செயல்பாடு பரிசோதனைகளில் மேம்பாடுகளை காட்டின; ஆனால், வாழ்க்கைத் தரம், ஆஸ்துமா அறிகுறிகள் கட்டுப்படுதல் அல்லது ஆஸ்துமா மிகுதல்கள் போன்றவற்றில் எந்த விளைவுகளும் இருக்கவில்லை. வழக்கமான பராமரிப்போடு ஒப்பிடுகையில், நீச்சல் பயிற்சியோடு உடற்திறன் அதிகரித்தது. நீச்சல் பயிற்சி திட்டங்களின் போது பங்கேற்பாளர்களில் சிலர் பாதகமான ஆஸ்துமா நிகழ்வுகளை அறிக்கையிட்டனர். குறைந்த எண்ணிக்கையிலான ஆய்வுகள் மற்றும் ஆய்வு மக்கள் வாழ்க்கைத் தரம் மற்றும் ஆஸ்துமா மிகுதல்களின் மீதான விளைவு போன்ற கவனத்தை ஈர்க்கும் சில விளைவுகளை இந்த திறனாய்வு மதிப்பிடுவதை கட்டுப்படுத்தின.

சுருக்கமாக, நிலையான ஆஸ்துமா கொண்ட குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரில் நீச்சல் பயிற்சி சிறப்பாக எதிர்கொள்ளப்பட்டது மற்றும் உடற்திறன், நுரையீரல் செயல்பாட்டை அதிகரித்தது. எனினும், பிற வகையான உடலியக்க நடவடிக்கைகளைக் காட்டிலும் நீச்சல் சிறப்பானது மற்றும்/அல்லது பாதுகாப்பானது என்பதை இந்த திறனாய்விலிருந்து தீர்மானிக்க முடியாது. நீச்சல் பயிற்சியின் நீண்ட-கால நன்மைகளை பற்றி நாம் அறிந்து கொள்ள நீண்ட பின்-தொடர்தல் காலங்கள் கொண்ட எதிர்கால ஆய்வுகள் உதவக் கூடும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information