உயர் இதயநாள அபாயம் கொண்ட மக்களுக்கான உடற்பயிற்சி

உயர் இரத்த அழுத்தம், அதிக இரத்த கொழுப்பு, அல்லது புகைத்தல் போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட இதயநாள அபாய காரணிகளைக் கொண்ட நபர்கள், இதயநாள நோய் கொண்டவர்களாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது. உடற்பயிற்சியானது, தனிப்பட்ட அபாய காரணிகளை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அபாயங்கள் மீதான அதன் விளைவு பற்றிய ஆதாரம் நிச்சயமற்றதாக உள்ளது. உயர்-அபாயம் கொண்ட நபர்களுக்கான உடற்பயிற்சியை, கட்டுப்படுத்தப்பட்டோ அல்லது சிகிச்சையின்மைக்கு எதிராகவோ ஒப்பிட்ட மொத்தம் 823 பங்கேற்பாளர்கள் கொண்ட நான்கு ஆய்வுகளை நாங்கள் சேர்த்துள்ளோம். நோயாளிகளை பின்-தொடர்தல் காலம் 16 வாரங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை விரிந்திருந்தது. இதயநாள அல்லது இறப்பின் அனைத்து-காரணங்கள், அல்லது இதயநாள நிகழ்வுகளை தனிப்பட்ட விளைவுகளாக எந்த ஆய்வும் மதிப்பிடவில்லை. மொத்த இதயநாள அபாயம், அடர்த்தி-குறைந்த கொழுப்புப்புரதம் (எல்டிஎல்) மற்றும் உயர்-அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்டிஎல்) கொழுப்பு, இரத்த அழுத்தம், உடல் நிறை குறியீட்டெண், உடற்பயிற்சி திறன் மற்றும் ஆரோக்கியத்-தொடர்புடைய வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆய்வுகள் பதிவு செய்திருந்தன, ஆனால் அவற்றின் முடிவுகள், அம்மக்களில் உடற்பயிற்சியின் விளைவுகள் பற்றிய முடிவான ஆதாரத்தை தரவில்லை. சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகள், புகைபிடித்தல் நிறுத்தம், அல்லது உடற்பயிற்சி தலையீட்டின் எந்த பாதகமான விளைவுகளையும் மதிப்பிடவில்லை. தற்போதைய தேதிப் படியான ஆதாரம், குறைந்தளவு ஆய்வு மக்கள் எண்ணிக்கை, குறுகிய-கால பின்- தொடர்தல் மற்றும் ஆய்வு முறை ஒருதலைச் சார்பு உயர்-ஆபத்து என்ற வகையில் சிறிய ஆய்வுகளைக் கொண்டு மட்டுமே வரையறுக்கபட்டுள்ளது என்று தீர்க்கிறோம், இவை, ஒட்டுமொத்த இதயநாள அபாயம், இறப்பு, அல்லது இதயநாள நிகழ்வுகள் மீது சேர்க்கப்பட்டிருந்த சோதனைகளில் மேற்கொள்ளபட்ட உடற்பயிற்சியின் திறன் அல்லது பாதுகாப்பு பற்றிய முடிவுகளை எடுப்பதற்கு சிரமத்தை அளிக்கிறது. அதிகப்படியான இதயநாள அபாயம் கொண்ட மக்கள் மேல் உடற்பயிற்சியின் விளைவை மதிப்பிடுவதற்கு உயர்-தர மருத்துவ சோதனைகள் நடத்தப்பட வேண்டியதாய் இருக்கிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்:தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information