வயது வந்தவர்களில் கடுமையான வலிக்கு வலி நிவாரண துணை மருந்தாக காஃபின்

அநேக தாவர தயாரிப்புகளில் காஃபின் காணப்படுகிறது, மற்றும் தேநீர், காபி மற்றும் சில குளிர் பானங்கள் மற்றும் சக்தி பானங்கள் போன்ற பானங்களில் உட்கொள்ளப்படக் கூடும். காஃபின் ஒரு ஊக்கி பொருளாகும், மற்றும் குறுகிய நேரங்களுக்கு விழிப்புணர்ச்சியை மேம்படுத்தவும் மற்றும் சோர்வையும் நீக்கக் கூடும். தூங்குவதற்கு முன் அதை உட்கொள்வது சில மக்களில் தூக்கத்தை கெடுக்கக் கூடும். சாதாரண காஃபின் உட்கொள்ளல் (தினமும் 500 மில்லிகிராம்களுக்கு குறைவாக) உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காது. மருந்தகங்களில் பரிந்துரைப்பு இல்லாமல் கிடைக்கப் பெறும் வலி-நிவாரண மருந்துகளில் காஃபின் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. துணை மருந்து என்பது ஒரு மருந்து சிறப்பாக வேலை செய்வதற்கு அதனுடன் சேர்க்கப்படும் ஒரு பொருளாகும்.

அத்தகைய மருந்துகளின் வலி-நிவாரண விளைவுகளை காஃபின் மேம்படுத்துமா என்பதை இந்த திறனாய்வு ஆராய்ந்தது. ஆகஸ்ட் 2014 வரைக்குமான ஆய்வுகளுக்கு நாங்கள் தேடினோம் மற்றும் தலைவலி, பற்சிகிச்சைக்கு பின்னான வலி, குழந்தை பிறப்பை தொடர்ந்த அறுவை சிகிச்சைக்கு பின்னான வலி, மற்றும் மாதவிடாய் வலி ஆகிய அநேக வலி நிலைமைகளை ஆராய்ந்த இருபது ஆய்வுகளை (7238 பங்கேற்பாளர்கள்) நாங்கள் உள்ளடக்கினோம். ஆய்வுகள் பொதுவாக, தரமான வடிவமைப்புக்கள் மற்றும் வலியை அளவிடுவதற்கு பெரும்பாலும் தரமான அளவைகளை பயன்படுத்திய நல்ல செயல்முறையியல் தரத்தை கொண்டவையாக இருந்தன. பற்சிகிச்சைக்கு பின்னான வலி, மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னான வலி ஆகியவற்றில் இருந்த ஆய்வுகள் சிறிதாக இருந்தன, மற்றும் நன்மைகளை ஆய்வுகள் அளவுக்கு அதிகமாக மதிப்பிட்டிருக்க கூடும்.

பாரசிடமால் அல்லது ஐபுப்ரோபென் போன்ற பொதுவான வலிநிவாரணிகளின் நிலைப்படியான அளவையோடு, ஒரு காபி குவளைக்கு ஒத்துமதிப்பான காஃபின் அளவை கூட்டுவது சிறப்பான வலி நிவாரணத்தை அளித்தது. வெறும் வலி நிவாரணியோடு ஒப்பிடுகையில், வலி நிவாரணியுடன் காஃபின், 5% முதல் 10% வரை ஒரு நல்ல அளவிலான வலி நிவாரணத்தைக் கொண்டிருந்த மக்களின் எண்ணிகையை உயர்த்தியது (உயர்தர ஆதாரம்).

இந்த ஆய்வுகளில், வலி நிவாரண மருந்து அல்லது காஃபினோடு சம்மந்தப்பட்ட கடுமையான பாதக விளைவுகள் எதுவும் அறிக்கையிடப்படவில்லை (குறைந்த தர ஆதாரம்). பரிந்துரைக்கப்பட்ட அளவை தாண்டாமலிருந்தால், ஒரு வலி நிவாரண மருந்துடன் காஃபினை சேர்ப்பது தீங்கு விளைவிக்கும் என்பதற்கு சாத்தியமில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information