மல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட மக்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க தகவல் வழங்குதல்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

மல்டிபிள் ஸ்கலரோசிஸ் (எம்எஸ்) கொண்ட மக்கள், நோயின் அனைத்து நிலைகளிலும் பல நிலையாமைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு, எதிர்காலத்தில் நோயின் போக்கை குறிப்பிடும் ஒரு அறுதியீடு தெளிவற்றதாக இருக்கும், அதெனில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கடுமையிராத நோயின் போக்கோடு, சிறிது அல்லது எந்த இயலாமையும் தீவிரமடையாமல் அனுபவிக்க கூடும். மருந்தியல் மற்றும் மருந்தியல் அல்லாத சிகிச்சைகளின் விளைவுகள் மற்றும் தீங்கு விளைவுகளுக்கும் உறுதியற்ற நிலை உள்ளது. தொடர்புடைய அனைத்து நோய்-சம்மந்தமான முடிவுகளுக்கும் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை திட்டமிடும் முடிவுகளுக்கும் தகவலறிந்த தேர்வுகளின் படி முடிவு செய்யும் பொருட்டு துல்லியமான, சமீபத்திய மற்றும் தொடர்புடைய தகவல்களை பெற எம்எஸ் கொண்ட மக்கள் வேண்டுகின்றனர். இதற்கு, ஒரு சீரான தகவல் ஒரு முற்படு தேவையாகும். எம்எஸ் கொண்ட மக்களில், நோய் பற்றிய அறிவு குறைவாக உள்ளது என்று காட்டப்பட்டுள்ளது. ஆதலால், எம்எஸ் கொண்ட மக்கள், அவர்களுக்கு தொடர்புடைய அனைத்து அம்சங்களிலும் தகவல் அளிக்க கூடிய சிகிச்சை தலையீடுகளை பெற வேண்டும்.

எம்எஸ் கொண்ட மக்களுக்கு, அந்நோய் பற்றிய அறிவை அதிகரிக்கவும், முடிவெடுத்தல், மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் தகவல் அளிப்பதை நோக்கமாக கொண்ட சிகிச்சை தலையீடுகளை நாங்கள் திறனாய்வு செய்தோம். ஜூன் 2013-ல், மருத்துவ இலக்கியத்தில் தொடர்புடைய ஆய்வுகளை நாங்கள் கண்டு, மொத்தம் 1314 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட 10 ஆய்வுகளை அடையாளம் கண்டோம். எழுத்து பூர்வ தகவல் அல்லது முடிவு சாதன கலங்கள், விளக்கக் கல்வி திட்டங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அணுகுமுறைகளை ஆய்வுகள் மதிப்பீடு செய்தன. ஆய்வுகளின் செயல் முறையியல் தரம் மாறுபட்டு இருந்தது. நோய்-மாற்றும் சிகிச்சை, மறுவீழ்வு மேலாண்மை, சுய-பராமரிப்பு உத்திகள், அயர்ச்சி மேலாண்மை, குடும்பக் கட்டுப்பாடு மற்றும் பொது ஆரோக்கிய உயர்வு ஆகியவை தலைப்புகளில் அடங்கும். தகவல், நோயாளிகளின் நோய் பற்றிய அறிவை வெற்றிகரமாக அதிகரிக்கக் கூடும் என்று நோய் பற்றிய அறிவின் நிலையை மதிப்பிட்ட நான்கு ஆய்வுகள் காட்டியது (மிதமான தர சான்று). முடிவெடுத்தலின் மீதான விளைவுகளை அறிக்கையிட்ட நான்கு ஆய்வுகள் மற்றும் வாழ்க்கை தரத்தை மதிப்பிட்ட ஐந்து ஆய்வுகளிலிருந்து கலவையான முடிவுகள் (குறைந்த தர சான்று) இருந்தன. ஆய்வுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட சிகிச்சை தலையீடுகள் குறிப்பிடும்படியாக மாறுபட்டு இருந்தபடியால் மற்றும் எங்களின் விளைவுகளின் மேலான ஆதாரத்தின் தரம் உயர்வாக இல்லாத படியாலும், எம்எஸ் கொண்ட மக்களில், தகவல் வழங்கும் சிகிச்சை தலையீடுகளின் திறன் பற்றிய ஒரு தெளிவான முடிவிற்கு வர கண்டுப்பிடிப்புகள் அனுமதிக்கவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.