ஆல்கஹால் பழக்கத்திலிருந்து திரும்பும் நோய்க்குறிகளுக்கு பாக்லோஃபென் (Baclofen)

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

திறனாய்வு கேள்வி

குடிபழக்கம் கொண்ட மக்களில் குடி பழக்கத்திலிருந்து திரும்ப நினைக்கும் நோயாளிகள் மத்தியில் நோய்க்குறி (AWS) சிகிச்சையாக பாக்லோாபனின்(Baclofen) செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மதிப்பீடு செய்ய இந்த ஆய்வு முயற்சித்தது.

பின்னணி

பொதுவாக குடிப்பழகதிற்க்கு அடிமையாக உள்ள மக்கள் அதிலிருந்து முற்றிலுமாக விலகும் போது அல்லது குடியை குறைக்கும் நோய்க்குறி (AWS) நிலைக்கு வரும்போது அது மிகவும் துன்பகரமான மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாகக்கூடும். மிகவும் பொதுவான விளைவுகளில், உடம்பு குலுங்குதல், அமைதியற்ற தன்மை, தூக்கம் இல்லாமை, பயத்தின் எண்ணங்கள், வியர்வை, உயர் இதய துடிப்பு, காய்ச்சல், வாந்தி், வலிப்பு, மாயத்தோற்றம், வன்முறை எண்ணங்கள், உளறுதல், மற்றும் சித்தப்பிரமை. கடுமையான சந்தர்ப்பங்களில், மக்கள் நினைவு இழக்க நேரிடலாம், அவர்களுடைய இதய துடிப்பு நின்று போகலாம், மரணமும் சம்பவிக்கலாம். இந்தவிதமான நோயின் அறிகுறிகளை பெக்லோபென் (Baclofen) மருந்து அதிக குடிப்பழகதிற்க்கு ஆளானவர்கள் மத்தியில் கடுமையான அறிகுறிகளைக் குறைத்துள்ளது என்ற ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. பெக்லோபென் சிகிச்சையானது மிக எளிமையான முறையில் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் கையாளும் சிகிச்சையாகும். இந்த ஆய்வு 2015 இல் வெளியிடப்பட்ட அசல் கோக்ரன் ஆய்வின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு, வெளியீடு 4.

தேடல் தேதி: இந்த ஆதாரம் மார்ச் 2017 வரை உட்பட்டது.

ஆய்வு பண்புகள்

பாக்ளோபின் (baclofen ) மற்றும் மருந்து போலி (மறைக்கப்பட்ட சிகிச்சை) அல்லது குடிப்பழக்கத்தின் விலக்கு குறிகளை கட்டுப்படுத்தும் மற்ற முக்கியமான பயனுள்ள மருந்துகளுடன் ஒப்பிடும்மருத்துவ ஆய்வுகளை அறிவியல் தரவுத் தளங்களில் தேடினோம். 141 நோயாளிகள், ஒன்று அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிகிச்சை குழுக்களில் பங்கேற்பாளர்களாக கூடிய மூன்று சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகளை நாங்கள் சேர்த்தோம். அமெரிக்காவிலிருந்து சேர்க்கப்பட்ட ஆய்வில் பாக்ளோபின் மற்றும் மருந்து போலியுடன் ஒப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வு குறைந்தபட்சம் 72 மணிநேரம் கால அவகாசம் கொண்டது. நோயாளிகள் பெரும்பாலும் ஆண்கள், சராசரியாக 47 வயத்துக்குட்பட்டவர்கள். இத்தாலியிலிருந்து சேர்க்கப்பட்ட ஒரு ஆய்வு, தொடர்ந்து 10 நாட்களுக்கு பாக்ளோபின் (baclofen ) மற்றும் டையாசிபாம் (diazepam) மருந்துகளை ஒப்பீடு செய்துள்ளது. இங்கு நோயாளிகள் முக்கியாமாக ஆண்களாக 42 வயதிற்கு உட்பட்டு இருந்தனர். இந்தியவிலிருந்து சேர்க்கப்பட்ட ஆய்வில் ஒன்பது நாட்களுக்கு கொடுக்கப்பட்டது பாக்ளோபின்(Baclofen) மற்றும் Chlrodiazepoxide கொண்டு ஒப்பீடபட்டது. இந்த நோயாளிகள் அனைவரும் ஆண்களும், மற்றும் அவர்களின் சராசரி வயது 38ஆக இருந்தது. இதில் எந்த ஒரு ஆய்வும் மருந்து கம்பெனிகளின் நிதியை பெறவில்லை.

முக்கிய முடிவுகள்

ஆதாரங்களின் சான்றுகள் தரவரிசை மிகவும் குறைவாக இருப்பதால் பாக்லோபென்(Baclofen) குடிபழக்கத்தை திரும்பப் பெறும் அறிகுறிகளைளை மருந்துப்போலி அல்லது பிற மருந்துகளுடன் ஒப்பிடுகையில் பக்க விளைவுகளை குறைக்கிறதா என்பதை எங்களால் உறுதி செய்ய இயலவில்லை.

ஆதாரங்களின் தரம்

ஆய்வுகளில் இருந்த ஆதாரங்களின் சான்றுகளின் தரம் மிக குறைவாக உள்ளதால் ஆய்வுகளின் முடிவுகளை கவனத்துடன் விளக்க வேண்டும். எதிர்காலத்தில் நன்கு வடிவமைக்கப்பட்ட, இரட்டை-குருட்டு(double-blind ) (பங்கேற்பாளர்கள் அல்லது ஆய்வாளர்கள் இறுதி முடிவு வந்தவுடன் எந்த சிகிச்சை கொடுக்கப்பட்டது என்று தெரிய வேண்டும்). குடிப்பழக்கத்தை திரும்பப் பெறும் அறிகுறிகளைளை (AWS) கொண்ட நோயாளிகளுக்கு (Baclofen) பாகோலோபென் எவ்வளவு பயனுள்ளது மற்றும் இந்த சிகிச்சையை எவ்வாறு நோயாளிகளால் எற்றுகொள்ளமுடிகிறது என்று பெரிய அளவில் நோயாளிகளை கொண்ட சீரற்ற(RCT 's ) ஆய்வுகள் தேவைப் படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [சங்கீதா, ஜாபெஸ் பால்]