நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் கொண்ட மக்களுக்கான நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பு

கேள்வி: நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (க்ரோனிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசிஸ், சிஓபிடி) கொண்ட மக்களில், நீர்-சார்ந்த உடற்பயிற்சியின் (ஆனால் நீச்சல் அல்ல) பாதுகாப்பு மற்றும் பயனை உடற்பயிற்சியின்மை அல்லது உடற்பயிற்சி திறன் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றோடு தொடர்புடைய வேறு வகையான உடற்பயிற்சிக்கு ​ எதிராக ஒப்பிட்டு பார்க்க விழைந்தோம்.

பின்புலம்: நிலம்-சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பு, (நடைபயிற்சி அல்லது மிதிவண்டி ஓட்டுதல் போன்ற​) சிஓபிடி கொண்ட மக்களில் உடற்பயிற்சி திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பு என்பது நிலம்-சார்ந்த பயிற்சி திட்டங்களை நிறைவு செய்ய முடியாத வயதானவர்களையும் மற்றும் சிஓபிடியுடன் மற்ற உடல் மற்றும் மருத்துவ நிலைமைகள் கொண்ட மக்களையும் ஈர்க்கக்கூடிய ​உடற்பயிற்சி ​பயிலுதலுக்கான ​ஒரு மாற்று முறையாகும். நாங்கள் நீச்சல் தலையீடுகளைச் சேர்க்கவில்லை.

ஆய்வு பண்புகள்: ஆகஸ்ட் 2013 வரையிலான ஐந்து ஆய்வுகள் அடையாளம் காணப்பட்டது. இந்த ஆய்வுகள் மொத்தம் 176 பங்கேற்பாளர்களைக் கொண்டிருந்தது; அவற்றில் 71 பேர் நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பிலும்; 54 பேர் நிலம்-சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பிலும், மற்றும் 51 பேர் எந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பிலும் பங்குபெறாமல் இருந்தனர். பங்கேற்பாளர்களின் சராசரி வயது 57 முதல் 73 ஆண்டுகள் வரை விரிந்திருந்தது. நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பு ​திட்டங்கள், காலளவில் நான்கு வாரங்கள் முதல் பன்னிரெண்டு வாரங்கள் வரை வேறுப்பட்டதோடு, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை 35 முதல் 90 நிமிடங்கள் வரை ​வருகைப் பதிவு கொண்டிருந்தது. நீர்-சார்ந்த பயிற்சிகள், நிலம்-சார்ந்த உடற்பயிற்சி அமர்வுகளோடு ​முடிந்த வரை ஒத்து ​வடிவமைக்கப்பட்டிருந்தது. நீரில் நடைபயிற்சி மற்றும் மிதித்தல்-வகை இயக்கங்கள், அதே போல் தீவிரத்தை ​அதிகரிக்க பெரும்பாலும் மிதவைகள் பயன்படுத்தப்பட்ட வலிமை பயிற்றுவிப்பு ஆகிய பொதுவான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

முக்கிய முடிவுகள்: நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பு ​திட்டத்தை நிறைவு செய்த பங்கேற்பாளர்களால், எந்த ஒரு உடற்பயிற்சி பயிற்றுவிப்பையும் மேற் கொள்ளாதவர்களைக் காட்டிலும் சராசரியாக 371 மீட்டர் அதிக தூரம் நடக்க முடிந்தது. மேலும் நிலம்- சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பை நிறைவு செய்தவர்களைக் காட்டிலும் சராசரியாக 313 மீட்டர் அதிக தூரம் நடக்க முடிந்தது. அதோடு,​ நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பு திட்டத்தை நிறைவு செய்தவர்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறியது. எந்த ஒரு உடற்பயிற்சி பயிற்றுவிப்பையும் மேற்கொள்ளாதவர்களைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவு சிறப்பான வாழ்க்கைத்தரம் இந்த பங்கேற்பாளர்களில் அறிக்கையிடப்பட்டது. பயிற்றுவிப்பை நிறுத்திய பின்னர் இந்த விளைவுகள் நீண்ட காலம் நீடிக்குமா என்பதைக் காட்ட குறைந்த தகவல்கள் வழங்கப்பட்டன. ​நீர் சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பின் நற்பயன்களின் மேல் ​சிஓபிடியின் தீவிரத்தின் விளைவைப் பற்றி ​மேலும் பரிசோதனை தேவை. இரண்டு ஆய்வுகள் பாதகமான நிகழ்வுகளைக் குறித்து ​தகவல் அளித்தது; ​ஒரு சிறிய தீங்கு விளைவிக்கும் நிகழ்வு (நீர்-சார்ந்த உடற்பயிற்சி பயிற்றுவிப்பில் பங்கேற்ற 20 பேரிலிருந்து) ஆவணப் படுத்தப்பட்டுள்ளது.

சான்றின் தரம்: இந்த முடிவுகள் பற்றிய ​சான்றின் ​தரம் பொதுவாக குறைந்தளவு முதல் மிதமானதாக ​இருந்தது. இதுமுக்கியமாக, குறைபாடுடைய ​ஆய்வு வடிவமைப்பு மற்றும் பற்றாக்குறையான தரவின் ​விளைவாக இருந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி

Tools
Information