ஆஸ்துமாவிற்கான நாள்பட்ட நோய் மேலாண்மை

ஆஸ்துமா, உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு நாள்பட்ட (நீண்ட-கால) மூச்சுக் குழாய் (சுவாசித்தல்) நோயாகும். ஆஸ்துமா கொண்ட மக்கள், மூச்சிரைப்பு, இருமல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பல அறிகுறிகளைக் கொண்டிருப்பர். நோயாளியின் தேவைகளை மையமாக வைத்து ஒரு திட்டத்தை உருவாக்கி, மற்றும் ஆரோக்கிய சேவைகள் அளித்து, ஒன்றாக வேலை செய்து நோயாளிகளுக்கு அவர்களின் நோயோடு சமாளிக்க உதவி செய்து மற்றும் அவர்களின் நோயை பற்றி அறிந்து கொள்ள தகவல் வழங்குவதில் கவனம் செலுத்துகிற ஆரோக்கிய பராமரிப்பு நிபுணர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இடையே ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதே நாள்பட்ட நோய் மேலாண்மையின் நோக்கமாகும்.

ஆஸ்துமா உள்ள வயது வந்தவர்களில், நாள்பட்ட நோய் மேலாண்மை திட்டங்களின் விளைவுகளை வழக்கமான பராமரிப்புடன் ஒப்பிட்ட 20 ஆய்வுகளை இந்த திறனாய்வு கண்டறிந்தது. நோயாளிகளின் சராசரி வயது 42.5 ஆண்டுகளாக இருந்தது, 60% பெண்களாக இருந்தனர், மற்றும் அவர்களுக்கு மிதமான முதல் கடுமையான ஆஸ்துமா இருந்தது. ஒட்டுமொத்தமாக, காணப்பட்ட சான்றின் தரம் மிதமான முதல் குறைவாக வரை இருந்தது.

நாள்பட்ட நோய் மேலாண்மை திட்டங்கள், ஆஸ்துமா கொண்ட வயது வந்தவர்களுக்கு, பெரும்பாலும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, ஆஸ்துமா தீவிரத்தை குறைத்து, மற்றும் 12 மாதங்களுக்கு பிறகு நுரையீரல் செயல்பாட்டு சோதனைகள் மூலம் நிரூபணம் செய்யப்பட்ட மூச்சுவிடுதல் திறனை மேம்படுத்தியது. நாள்பட்ட நோய் மேலாண்மை திட்டங்கள், ஆஸ்துமாவை நோயாளிகள் தாங்களே நிர்வகிக்கக் கூடிய திறன்களை மேம்படுத்தியதா அல்லது மருத்துவமனையில் தங்கி இருத்தல் அல்லது அவசரக் கால வருகைகளின் எண்ணிக்கையைக் குறைத்தனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information