நிமோனியாவிற்கு கார்டிக்கோஸ்டீராய்ட்கள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

நிமோனியா என்பது, பொதுவாக பாக்டீரியாக்களினால் ஏற்படும் ஒரு கடுமையான சுவாச மண்டல நோயாகும், ஆனால், அது, பூஞ்சை, ஒட்டுண்ணிகள் மற்றும் வைரஸ் போன்ற பிற தொற்று காரணிகளாலும் ஏற்படக் கூடும். நிமோனியா கொண்ட நோயாளிகளுக்கு, கார்டிக்கோஸ்டீராய்ட்கள் ஒரு அழற்சி-நீக்கி முகமை மருந்தாக செயல்படும், ஆனால், அவை பாதகமான முறையில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்குவதன் மூலம், நோய் காரணிகளை எதிர்த்து உடல் போரிடுவதை தடுத்து, மற்றும் ஒரு கடுமையான தொற்றிற்கு வழி வகுக்கும். நிமோனியாவிற்கு கார்டிக்கோஸ்டீராய்ட்கள் நன்மையளிக்குமா என்பதை மதிப்பிடுவதே இந்த திறனாய்வின் நோக்கமாகும்.

நாங்கள் ஆறு சோதனைகளை (437 பங்கேற்பாளர்கள்) அடையாளம் கண்டோம். மற்றும் கார்டிக்கோஸ்டீராய்ட்களின் விளைவுகள் நிமோனியாவின் வகை மற்றும் தீவிரத்தைப் பொருத்து வேறுப்பட்டாலும், பெரும்பாலான நோயாளிகளுக்கு, ஒட்டுமொத்த விளைவு நன்மையளிப்பதாக இருந்தது என்று நாங்கள் கண்டோம். போலி மருந்து குழுவை ஒப்பிடுகையில், கார்டிக்கோஸ்டீராய்ட்கள் இறப்பை குறிப்பிடத் தகுந்த வகையில் குறைக்கவில்லை. இதயத் துடிப்பு இலயமின்மை, மேல் குடலிய-இரைப்பை இரத்தக் கசிவு, மற்றும் வீரியம் மிக்க உயர் இரத்த அழுத்தம் ஆகியவை கார்டிக்கோஸ்டீராய்ட்களோடு தொடர்பு கொண்டவையாக இருக்கலாம். உள்ளடக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் வரம்புகள் காரணமாக இந்த திறனாய்விலிருந்த ஆதாரம் பலவீனமாக உள்ளது. திறம்பட்ட ஆதாரத்தை அளிப்பதற்கு அதிகமான நோயாளிகளைக் கொண்ட பெரியளவு சோதனைகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.