பதட்ட-வகை தலைவலிக்கான அக்குப்பங்சர்

அடிப்படை கருத்து

அடிக்கடியான பதட்ட-வகை தலைவலியை கொண்ட மக்களுக்கு, குறைந்த பட்சம் ஆறு சிகிச்சை அமர்வுகளைக் கொண்ட ஒரு அக்குப்பங்சர் சிகிச்சை போக்கு ஒரு மதிப்புமிக்க தேர்வாக அமையக் கூடும் என்று கிடைக்கப்பெற்ற ஆதாரம் பரிந்துரைக்கிறது.

பின்புலம்

பதட்ட-வகை தலைவலி ஒரு பொதுவான தலைவலி வகையாகும். லேசான நிகழ்வுகள், வலி நிவாரணிகளைக் கொண்டு போதுமான அளவு சிகிச்சையளிக்கப்படும். எனினும், சில நபர்களில், பதட்ட-வகை தலைவலி அடிக்கடி ஏற்படக் கூடும் மற்றும் அது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடத் தகுந்த வகையில் செயலிழக்க செய்யலாம். அக்குப்பங்சர் என்பது, தோலின் குறிப்பிட்ட புள்ளிகளில் மெல்லிய ஊசிகள் உட்செலுத்தப்படும் ஒரு சிகிச்சை முறையாகும். அது, சீனாவில் தோன்றியது மற்றும் இப்போது, பதட்ட-வகை தலைவலிக்கு சிகிச்சையளிக்க அநேக நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அக்குப்பங்சர் பதட்ட-வகை தலைவலியை தடுக்குமா என்பதை ஆராய நாங்கள் சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளைக் கண்டோம். சிகிச்சைக்கு இணக்கமாக துலங்கிய மக்களின் எண்ணிகையை முக்கியமாக நாங்கள் கண்டோம், இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவர்கள் ஒரு தலைவலியை அனுபவித்த நாட்களின் எண்ணிக்கையை பாதியாக்குவதாகும்.

முக்கிய முடிவுகள்


ஜனவரி 2016 வரை வெளியான, 2349 வயது வந்தவர்களைக் கொண்ட 12 சோதனைகளை நாங்கள் திறனாய்வு செய்தோம். இந்த புதுப்பிக்கப்பட்ட திறனாய்வில், ஒரு புதிய சோதனை உள்ளடக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெரிய சோதனைகளில், வழக்கமான பராமரிப்பு அல்லது தலைவலிகளுக்கான சிகிச்சைகளோடு, தொடக்கத்தில் மட்டும் ( பொதுவாக, வலி நிவாரணிகளோடு) சேர்க்கப்பட்ட அக்குப்பங்சர், வழக்கமான பராமரிப்பு மட்டும் கொடுக்கப்பட்ட 100 பங்கேற்பாளர்களில் 17 பேரை ஒப்பிடும் போது 100 பங்கேற்பாளர்களில் 48 பேரில் தலைவலி அடுக்கு நிகழ்வு குறைந்த பட்சம் பாதியானது.

அக்குப்பங்சர், ஆறு ஆய்வுகளில், தவறான புள்ளிகளில் ஊசிகள் உட்செலுத்தப்பட்ட 'போலி' அக்குப்பங்சர் அல்லது தோலினுள் உட்புகாத அக்குப்பங்சரோடு ஒப்பிடப்பட்டது. போலி' அக்குப்பங்சர் பெற்ற 100 பங்கேற்பாளர்களில் 43 பேரை ஒப்பிடும் போது, நிஜ அக்குப்பங்சர் பெற்ற 100 பங்கேற்பாளர்களில் 52 பேரில் தலைவலி அடுக்கு நிகழ்வு பாதியாக குறைந்தது. ஒரு பெரிய, நல்ல தரமான சோதனையால் (கிட்டத்தட்ட 400 பங்கேற்பாளர்கள்) ஆதிக்கம் செலுத்தப்பட்டிருந்த கண்டுப்பிடிப்புகள், நிஜ அக்குப்பங்சரின் விளைவு ஆறு மாதங்களுக்கு பிறகும் தொடர்ந்து காணப்பட்டன என்று காட்டின. நிஜ மற்றும் 'போலி' அக்குப்பங்சர் இடையே, பக்க விளைவுகளின் எண்ணிக்கையிலும் மற்றும் பக்க விளைவுகள் காரணமாக விலகும் மக்களின் எண்ணிக்கையிலும் எந்த வித்தியாசங்களும் இல்லை.

நான்கு சோதனைகளில், பிசியோதெரபி, மசாஜ், அல்லது தளர்வு சிகிச்சை போன்ற பிற சிகிச்சைகளோடு அக்குப்பங்சர் ஒப்பிடப்பட்டது, ஆனால் அவை பயனுள்ள தகவலை கொண்டிருக்கவில்லை.

சான்றின் தரம்

சான்றின் தரம் மிதமாக இருந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information