பக்கவாதத்திற்குப் பின் செயல்பாட்டு திறனை மேம்படுத்த சுற்று வர்க்கம் (Circuit class) சிகிச்சை முறை.

திறனாய்வு கேள்வி

பக்கவாதத்திற்குப் பின் நடந்து செல்வதை மேம்படுத்த சுற்று வர்க்கம் (Circuit class) சிகிச்சை முறை வழக்கமான இயன்முறை மருத்துவ முறையை விட சிறந்ததா?

பின்னணி

பக்கவாதத்திற்குப் பிறகு, நோயாளிகள் நடப்பதில் சிரமம் இருக்கலாம். அவர்கள் மெதுவாக நடப்பவராகலாம்; குறைந்த தூரம் மட்டுமே நடக்க முடியலாம்; மற்றும் அவர்களுக்கு உதவி தேவைப்படலாம். அவர்கள் மிக எளிதாக தங்கள் சமநிலையை இழக்கலாம்; மற்றும் அதிகமாக களைப்பு அடையலாம். இது அவர்கள் நடப்பது குறைவாககூட இருக்கும் எனப் பொருள் படலாம். இதனால் நடக்கும் திறன் மோசமடையலாம். பக்கவாதம் வந்த வெகுநாட்களுக்குப் பின்னர் புனர்வாழ்வு சிகிச்சை கிடைப்பது கடினம் என்ற போதிலும் புனர்வாழ்வு நடப்பதை மேம்படுத்தலாம். சுற்று வர்க்கம் சிகிச்சை முறை, பக்கவாதம் உடையயவர்கள் ஒரு குழு அமைப்பில் (தனியாக மருத்துவருடன் இல்லாமல்) அர்த்தமுள்ள செயல்பாடுகளில் பயிற்சிஎடுக்கும் வாய்ப்பினை வழங்குகிறது. மேலும் அணுகக்கூடிய தீர்வுகளை இவை வழங்கலாம்.

ஆய்வு பண்புகள்

இது, இதற்கு முன்னர் 2010-ல் வெளியான ஒரு திறனாய்வின் மேம்படுத்தல் ஆகும். பக்கவாதம் வந்தவர்களுக்கு சுற்று வர்க்கம் (Circuit class) சிகிச்சை முறையை பாரம்பரிய சிகிச்சைமுறைகளுடன் ஒப்பிட்ட ஆராய்ச்சிகள் மற்றும் அவற்றில் சார்புதன்மை அபாயம் குறைவான அதிகதரமுடைய ஆராய்ச்சிகளை மட்டும் நாங்கள் ஆய்வுக்கு எடுத்துகொண்டோம். மக்கள் நடக்கும் விதம், தூரம், வேகம் மற்றும் எந்த அளவிற்கு உதவி இன்றி நடக்க முடியும் போன்றவற்றில் இந்த இரு அணுகுமுறைகளுக்கும் இடையே உள்ள திறனை ஒப்பிட்ட ஆய்வுகள்மீது நாங்கள் ஆர்வம் கொண்டிருந்தோம். பாரம்பரியமான அணுகுமுறைகளை விட சுற்று வர்க்கம் (Circuit class) வகுப்புகள் குறைந்த அல்லது அதிகமான தீங்கு விளைவிக்க வாய்ப்பு உள்ளதா என்று புலனாய்வுசெய்த ஆய்வுகளுக்கான தேடலை நாங்கள் மேற்கொண்டோம். இந்த ஆதாரம் ஜனவரி 2017 வரையிலான நிலவரப்படியானது.

முக்கிய முடிவுகள்

இந்த வகையான புனர்வாழ்வுடன் வழக்கமான பராமரிப்பு அல்லது போலியான புனர்வாழ்வு சிகிச்சையை ஒப்பிட்ட 1297 பங்கேற்பாளர்கள் கொண்ட 17 ஆய்வுகளை நாங்கள் கண்டறிந்தோம். பெரும்பாலான ஆய்வுகள் நடைதிறனை மேம்படுத்த சுற்று வர்க்கம் (Circuit class) வகுப்புகளின் பயன்பற்றி அறிவித்தன. மேலும் மிகக் குறிப்பாக, அந்த ஆய்வுகளின் முடிவுகளை ஒருங்கிணைத்ததில்,மற்ற சிகிச்சைகளோடு ஒப்பிடுகையில் , சுற்று வர்க்கம் (Circuit class) சிகிச்சை வகுப்புகள் ஆதரவு எதுவுமின்றி சுயமாகவும் ,வேகமாகவும் மேற்கொண்டு நடக்கும் திறனை மேம்படுத்தவும், சில இனங்களில் ,சுலபமாகவும் நம்பிக்கையோடும் தன்னை சமன்படுத்தி கொள்ளவும், அதிக திறனுள்ளதாக இருக்கிறது என்று நாங்கள் கண்டறிந்தோம். சுற்று வர்க்கம் (Circuit class) சிகிச்சை வகுப்புகளில் பங்குபெற்றவர்கள் அடிக்கடி விழ வாய்ப்பு உள்ளது என்று கருதப்படுகிறது . அவர்கள் புனர்வாழ்வு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சீக்கிரமாக போகலாம் என்றும் கருதப்பட்டது. ஆனால் இவ்விரண்டு விடயங்களும் புள்ளிவிபரங்கள் மூலம் உறுதிசெய்யப்பட வில்லை. பக்கவாதம் வந்து ஒருவருடத்திற்குள் உள்ளவர்களை, ஒருவருடத்திற்கு மேல் ஆனவர்களுடன் ஒப்பிடுகையில் இரு குழுவினருமே சுற்று வர்க்கம் (Circuit class) சிகிச்சை வகுப்புகளால் சமஅளவு உறுதியான முன்னேற்றம் பெற்றனர் என்று நாங்கள் கண்டறிந்தோம். முன்பு தெரிவிக்கப்பட்டத்தைவிட பக்கவாதம் வந்த வெகுகாலம் ஆகியும் அவர்கள் தொடர்ந்து முன்னேற்றம் அடையலாம் என்பதே இதன் பொருள். எனினும், பக்கவாதத்திற்குப் பிறகு அனைத்து நிலையிலும் அல்லது தீவிரத்திலும் மற்றும் அனைத்து மக்களுக்கும் இந்த சிகிச்சை பயன் அளிக்கிறதா என்பதிலும், சில செயல்பாடுகளில் பயிற்சி எடுப்பது மற்ற செயல்பாடுகளை விட நன்மை அளிக்குமா என்பது குறித்தும் மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

ஆதாரங்களின் தரம்

புனர்வாழ்வு ஆராய்ச்சிகளின் சில அம்சங்கள்களை இறுக்கமாக கட்டுப்படுத்த முடியாது என்று எடுத்துக் கொண்டோமே ஆனால், பொதுவாக ஆய்வுகளின் தரம் ஏற்கத்தக்க வண்ணம் இருந்தது எனலாம். சில ஆய்வுகளில் பாரபட்சம்திற்கான சாத்தியகூறு அதிகம் இருந்தமையால் நாங்கள் தரவரிசையை "மிதமானது" என்று தரமிறக்கம் செய்தோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information