ஹெச்ஐவி/எய்ட்ஸ் கொண்ட மக்களுக்கு மசாஜ் சிகிச்சை

ஹெச்ஐவி/எய்ட்சுடன் வாழும் மக்கள், அந்நோயின் சிக்கல்களால் குறைந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்க கூடும். அவர்களின் ஒட்டுமொத்த உடல்நலத்தை மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கும் அவர்களின் திறனை மேம்படுத்துவதற்கு மசாஜ் சிகிச்சை உதவக் கூடும். மசாஜ் சிகிச்சையை பிற வகை சிகிச்சைகளோடு அல்லது சிகிச்சையின்மையோடு ஒப்பிட்ட ஆய்வுகளை நாங்கள் முறையானபடி ஆராய்ந்தோம். ஹெச்ஐவியுடன் வாழும் குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் அல்லது இறுதிக்கட்ட எய்ட்ஸ் கொண்ட வயது வந்தவர்களில் மசாஜ் சிகிச்சையை பயன்படுத்திய நான்கு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை நாங்கள் கண்டோம். ஹெச்ஐவி/எய்ட்ஸ் கொண்ட மக்களில், தியானம், மனத்தளர்வு பயிற்றுவிப்பு போன்ற யுக்திகளை தனித்தனியாக செய்வது அல்லது ஒன்றை மட்டும் செய்வதை விட இவற்றோடு சேர்த்து மசாஜ் சிகிச்சையை குறிப்பாக பெறும் போது, மசாஜ் சிகிச்சை அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி நன்மையளிக்கக் கூடும் என்ற கூற்றை இந்த திறனாய்வு ஆதரிக்கிறது. மேலும், அந்நோயை எதிர்க்க உடலுக்கு தேவையான திறனை மசாஜ் சிகிச்சை மேம்படுத்தக் கூடும் என்றும் அறியப்படுகிறது; எனினும் இவை நம்பத்தகுந்த அளவிற்கு நிரூபிக்கப்படவில்லை. இந்த கேள்வியை மேற்படியான ஆய்வுகள் ஆராய வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்; மேலும், ஹெச்ஐவி/எய்ட்ஸ் கொண்ட மக்கள், தெளிவான இலக்குகள் கொண்டு மற்றும் சிகிச்சைக்கு அவர்களின் ஏற்புத்தன்மையை தொடர்ந்து கண்காணிக்கும் பட்சத்தில், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மசாஜ் சிகிச்சையை பயன்படுத்துமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information