பக்கவாதத்திற்கு பின் உட்காருதலிலிருந்து நிற்பதற்கான(Rise to stand from sitting) ஆற்றலை மேம்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள்

கேள்வி

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் உட்காரும் நிலையில் இருந்து பிறரை சாராமல் எழுந்து நிற்பதற்கு உதவும் உடற்பயிற்சிகள் அல்லது மற்ற சிகிச்சை முறைகளை வழக்கமான சிகிச்சை அல்லது சிகிச்சை ஏதும் அற்ற நிலையோடு ஒப்பு நோக்கி, இப்பயிற்சிகளின்திறனை மதிப்பிட நாங்கள் விழைகின்றோம்.

பின்புலம்

உட்காரும் நிலையில் இருந்து எழுந்து நிற்பது என்பது வழக்கமாக ஒருவர் தினசரி செய்யும் செயலாகும், மேலும், ஒருவர் நடப்பதற்கு இது மிகவும் அவசியமாகும். பக்கவாதத்திற்கு பிறகு, நோயாளிகள் உட்கார்ந்து எழுவதில் சிரமம் இருக்கலாம். எழுந்து நிற்பதற்கான திறனை மேம்படுத்த செய்யப்படும் பயிற்சி முறைகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் எளிதில் நிற்பதற்கான பல்வேறு உட்காரும் நிலைகளின் (Chair positions) பயன்களை நோக்குவதே இத்திறனாய்வின் நோக்கமாகும்.

ஆய்வு பண்புகள்

நாங்கள் ஜூன் 2013 வரை 13 ஆய்வுகளை கண்டறிந்தோம். இவ்வாய்வுகளில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 603 பங்கேற்பாளர்கள் பங்கு பெற்றுள்ளனர். வெவ்வேறு வகையான சிகிச்சை அல்லது பயிற்சிகளின் பயன்களை பன்னிரெண்டு ஆய்வுகள் ஆராய்கின்றன.மீண்டும் மீண்டும் செய்யப்படும் உட்காருதலிலிருந்து நிற்பதற்கான பயிற்சிகளை (Repetitive sit to stand training) குறித்து ஆறு ஆய்வுகள் (276 பங்கேற்பாளர்கள்) ஆராய்கின்றன, உட்காருதலிலிருந்து நிற்பதற்கான உடற்பயிற்சி முறையை குறித்து நான்கு ஆய்வுகள் (264 பங்கேற்பாளர்கள்) ஆராய்கின்றன. ஒரு ஆய்வு (12 பங்கேற்பாளர்கள்), உட்காருதலுக்கான பயிற்சியை (Sitting training) கொண்டு உட்காருதலிலிருந்து நிற்பதற்கான திறனை மேம்படுத்துவதை ஆராய்கின்றது.மற்றுமொரு ஆய்வு (42 பங்கேற்பாளர்கள்) பின்னூட்டு பயிற்சி (Feed back training) பாதங்களின் மூலம் சீராக எடையை தாங்குவதை குறித்த தரவு) உட்காருதலிரூந்து நிற்பதற்கான திறனை மேம்படுத்துவதை ஆராய்கின்றது. ஆய்வுகளில் ஒன்று, உட்காருதலிலிருந்து நிற்பதற்கான துவக்க உடல் இருக்கை நிலையின்(Starting posture) பயன்பாட்டை ஆராய்கின்றது:இவ்வாய்வு (9 பங்கேற்பாளர்கள்) ஊன்று கோலுடனும்(Cane), ஊன்று கோலின்றியும் உட்காருதலிலிருந்து நிற்பதை ஆராய்கின்றது. இவ்வாய்வு பாதிக்கப்பட்டோர் ஊன்று கோலுடன் மூன்று முறை (Three tests) உட்காருதலிலிருந்து நிற்பதையும், ஊன்று கோலின்றி (Without cane) மூன்று முறை உட்காருதலிலிருந்து நிற்பதையும் அளவிடுகின்றது; இதை செய்ய பயிற்சி நேரம் (Training period) ஏதும் வழங்கப்படவில்லை.

முக்கிய முடிவுகள்

இந்த ஆய்வு முடிவுகளை ஒருங்கிணைத்து ஒப்பு நோக்கும் போதுஉட்காருதலிலிருந்து நிற்பதற்கான செயல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தோடு வழங்கப்படும் பயிற்சி அல்லது உடற்பயிற்சிகள் வழக்கமான சிகிச்சை முறை, சிகிச்சை அற்ற நிலை அல்லது மாற்றுசிகிச்சை முறைகளை விடபயனுடையவை என்பதற்கான சான்றுகள் கிடைகின்றன. உட்காருதலிலிருந்து நிற்பதற்கான பயிற்சிகளில் பங்கு (Amount of weight) கொண்டோர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட காலில் தாங்கும் எடையின் அளவு அதிகரிப்பதை கண்டறிந்துள்ளோம். பயிற்சிகள் முடிந்து பல மாதங்கள் கடந்த பின்னும் பயிற்சியின் விளைவு பயன்கள் தொடர்ந்து இருப்பதற்கான சில சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் கீழே விழும் முறைகளில்(Number of falls) உட்காருதலிலிருந்து நிற்பதற்கான பயிற்சிகள் எவ்விதத்திலும் பாதிக்கவில்லை, ஆனால் இதற்கான சான்றின் தரம் மிகவும் சிறப்பானதாக காணப்படவில்லை (Evidence of poor quality). பயிற்சிக்கான சீரிய கால அளவை(Ideal amount of training) விளக்கும் சான்றுகள் போதிய அளவில் இல்லாவிடினும், வாரத்திற்கு மூன்று முறை என இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் பயிற்சிகளை செய்வது பயனளிக்கும் என ஆய்வின் விளைவுபயன்கள் சுட்டுகின்றன. உட்காருதலிலிருந்து நிற்பதற்கான கால அளவு(Time to sit to stand) மற்றும் பாதிக்கப்பட்ட கால் மூலம் தாங்கும் உடல் எடையை (Weight through the affected leg) தவிர வேறு விளைவு பலன்களின் திறம் மேம்பட்டதற்கான சான்றுகள் எதையும் இத் திறனாய்வு கண்டறியவில்லை. மேலும்,பயிற்சியின் கால அளவு(Length of the training programme) அல்லது பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட கால அளவு (Duration of stroke) போன்றவை விளைவு பலன்களில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பின் நடக்கும் அல்லது மற்றவரை சாரமமல் உட்கார்ந்து எழும்பும் பங்கேற்பாளர்கள் மட்டுமே இவ்வாய்வில் சேர்க்கப்பட்டுள்ளனர், எனவே, இவ்வாய்வின் பலன்களை குறிப்பிட்ட வகையான குழுவிற்கு மட்டுமே பொருந்தும். இவ்வகையாக பாதிக்கப்பட்டோர்க்கு உட்காருதலில் இருந்து நிற்பதற்கான பயிற்சிகளின் பலன்களின் விளைவுகளை ஆராய மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பிட்ட வகையான மீண்டும் மீண்டும் செய்யப்படும் உட்காருதலில் இருந்து நிற்பதற்கான பயிற்சிகளை (Specific repetitive training of sit to stand exercises) கொண்டு திறம்பட சிகிச்சை அளிக்க முடியும் என்று தற்போதய ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. பயிற்சியின் கால அளவு (Duration of training) அல்லது தீவிரத்தை(Intensity) குறித்த சரியான முடிவுகளை பெற போதிய சான்றுகள் இவ்வாய்வில் காணப்படவில்லை.

சான்றின் தரம்

பிறரை சாராமல் உட்காருதலிலிருந்து நிற்பதற்கான திறனை மேம்படுத்துவதை விளக்கும் இவ்வாய்வில் பிரதான விளைவு பயன்களை (Primary outcome) கொண்டு பொதுவான முடிவுகளை எடுக்க இவ்வாய்வில் போதிய சான்றுகள் இல்லை என நாங்கள் கண்டறிந்துள்ளோம். மேலும், உட்காருதலிலிருந்து நிற்பதற்கான கால அளவு மற்றும் பாதிக்கப்பட்ட கால் மூலம் தாங்கும் எடையை மேம்படுத்துவதாக, இச்சிகிச்சை முறைகள் கருதப்பட்டாலும், குறைந்த எண்ணிக்கைகளை உடைய சிறிய ஆய்வுகளில் இருந்து பெறப்படும் இம்முடிவுகள் மிதமான ஆய்வு தரத்தையே (Moderate quality evidence) கொண்டுள்ளன என கண்டறிந்துள்ளோம். மேலும்,உட்காருதலிலிருந்து நிற்பதற்கான பயிற்சிகள் மற்ற விளைவு பயன்களில் எவ்வித முடிவையையும் எடுக்க இயலாதவாறு, மிகசொற்ப சான்றுகளை (Insufficient evidence) கொண்டிருந்தன என நாங்கள் கண்டறிந்துள்ளோம். இத்திறனாய்வின் முடிவுகளை உறுதி செய்யவும், பயிற்சியின் கால அளவு (Duration of therapy) மற்றும் பயிற்சியின் முறைகளை (Number of repetitions) ஆராயவும், மேலும் பெரிய ஆய்வுகளை நாங்கள் பரிந்துரைகின்றோம். செயல் சார் திறன் அளவீடுகள் (Measure of functional ability), நீண்டநாள் விளைவு பயன்களை அளக்கும் அளவீடுகள் (Long term outcomes) மற்றும் பயிற்சிக்குப்பின்னுள்ள நேரடி விளைவு பலன்களை அளக்கும் அளவீடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக எதிர் கால ஆய்வுகள் இருக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: மோகனகிருஷ்ணன் ஜெகதேவன், பானுமதி மோகனகிருஷ்ணன், சலஜா . இரா, ஜெபராஜ் பிளட்சர். அ. ச மற்றும் சி.இ.பி.என்.அர் குழு.

Tools
Information