வெவ்வேறான இதய புனர்வாழ்வு முறைகளை ஒப்பிடுதல்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

உடற்பயிற்சி, விளக்கக் கல்வி, மற்றும் உளவியல் ஆதரவு ஆகிய கலவையின் மூலமாக இதய நோய் கொண்ட மக்களில் ஆரோக்கியத்தை மீட்பதற்கு இதய புனர்வாழ்வு நோக்கம் கொண்டுள்ளது. பாரம்பரியமாக, தனிநபர்களில் இதய நிகழ்வுகளுக்கு பிறகு, மையம்-சார்ந்த இதய புனர்வாழ்வு திட்டங்கள் (எ.கா. ஒரு மருத்துவமனைக்குள், உடற்பயிற்சி அல்லது ஒரு விளையாட்டு மையம் சார்ந்த சூழலில்) வழங்கப்படுகின்றன, அதே வேளையில், அணுகல் மற்றும் பங்களிப்பை விரிவுப்படுத்தும் முயற்சியில் வீடு-சார்ந்த இதய மறுவாழ்வுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வீடு-சார்ந்த புனர்வாழ்வு திட்டங்களின் விளைவுகளோடு கண்காணிக்கப்பட்ட மையம்-சார்ந்த இதய புனர்வாழ்வு திட்டங்களின் விளைவுகளை ஒப்பிடுவதற்கு இந்த திறனாய்வு நோக்கம் கொண்டுள்ளது. வீடு-சார்ந்த மற்றும் மருத்துவமனை-சார்ந்த சிகிச்சை தலையீடுகள், இதயத்தமனி நோய் அபாய காரணிகளின் (எ.கா., புகை பிடித்தல், கொழுப்பு அமிலங்கள், மற்றும் இரத்த அழுத்தம்) ஆரோக்கியம்-தொடர்பான வாழ்க்கைத் தரம், இறப்பு, மருத்துவ நிகழ்வுகள் மற்றும் செலவுகள் மேல் ஒரே மாதிரியான நன்மைகளைக் கொண்டிருந்தன என்று இந்த திறனாய்வின் கண்டுப்பிடிப்புகள் காட்டுகின்றன. வீடு-சார்ந்த சிகிச்சை தலையீடுகள், அதிக அளவில் தலையீடுகளை பின்பற்றுதலோடு தொடர்புடையதாக இருந்தது என்பதற்கு சில ஆதாரம் இருந்தது. சேர்க்கப்பட்டிருந்த சோதனை அறிக்கைகளில், பொதுவாக, செயல் முறைகளை பற்றிய அறிக்கைகள் இல்லாத காரணத்தினால், அவற்றின் செயல்முறையியல் தரத்தை மதிப்பிடுவதை, மற்றும் அவற்றின் ஒரு தலை சார்பு அபாயத்தை தீர்ப்பதை கடினமாக்கியது. வீடு-சார்ந்த மற்றும் மையம்-சார்ந்த இதய புனர்வாழ்வின் குறுகிய-கால விளைவுகள் நீண்ட-காலத்திற்கும் உறுதிப்படுத்துவதற்கு, மேற்படியான தரவு உறுதிப்படுத்துவதற்கு தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.