மக்கள் புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு இணையம்-சார்ந்த சிகிச்சை தலையீடுகள் உதவுமா?

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

மக்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த இணையம் மூலம் வழங்கப்படும் சிகிச்சை தலையீடுகள் உதவுவதை தீர்மானிக்க அதிக ஆதாரம் தேவைப்படுகிறது. ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக புகைப்பிடிப்பதை நிறுத்திய வெற்றி நிகழ்வுகளை அறிக்கையிட்ட அநேக சோதனைகளை இந்த திறனாய்வு கண்டது. ஒரு தலைச் சார்பு அபாயத்தை கொண்டிருந்த மூன்று சோதனைகளின் கூட்டு முடிவுகளில், ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேல், வழக்கமான பராமரிப்பு அல்லது எழுத்துப்பூர்வ சுய-உதவியைக் காட்டிலும், ஊடாட்ட மற்றும் தனிப்பட்ட தன்மைகளுக்கு ஏற்றவாறு இருந்த இணைய திட்டங்கள் அதிகளவில் புகைப்பிடிப்பதை நிறுத்துவதின் நிகழ்வுகளுக்கு வழி நடத்தின. இந்த குழுவில், எந்த வெளிப்படையான காரணமுமின்றி, சில சிகிச்சை தலையீடுகள் பிறவற்றை விட அதிக திறன் வாய்ந்தவையாக இருந்தன. இரண்டு சோதனைகளில், தனிப்பட்ட தன்மைகளுக்கு ஏற்றவாறு இல்லாத இணைய திட்டம் புகைப்பிடிப்பதின் விளைவுகளை மேம்படுத்தவில்லை, ஆனால், ஊடாட்ட /தனிப்பட்ட தன்மைகளுக்கு ஏற்றவாறு இருந்த மற்றும் ஊடாட்டமில்லாத/ தனிப்பட்ட தன்மைகளுக்கு ஏற்றவாறு இல்லாத திட்டங்களை நேரிடையாக ஒப்பிடும் போது, அவற்றினிடையே எந்த வேறுபாடும் இல்லை.

நிகோட்டின் மாற்று சிகிச்சை அல்லது பிற மருந்து சிகிச்சை போன்ற பிற சிகிச்சை தலையீடுகளுடன் இணைந்து பயன்படுத்தப்படும் போது, இணையம் கூடுதலான நன்மையைக் கொண்டிருக்கும். புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு, இணையம் மூலம் வழங்கப்படும் புதுமையான சிகிச்சை தலையீடுகள், புகைப்பிடிக்கும் இளம் மக்கள் மற்றும் பெண்களை அதிகமாக கவர்ந்திழுக்கும் மற்றும் மனச்சோர்வை அறிக்கையிடும் புகைப்பிடிப்பவர்களை குறைவாக கவர்ந்திழுக்கும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.