தாய்ப்பால் மூலம் தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் எச்.ஐ.வி(HIV)

தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுவதே குழந்தைகள் எச் ஐ வியால் பாதிக்கப்படுவதன் முதன்மை காரணமாகும்.  அவ்வாறு பரவக்கூடிய நோய் குழந்தை தாயின் கருவறையில் இருக்கும் பொழுதோ அல்லது குழந்தை பிறக்கும் நேரத்திலோ அல்லது பிறந்த பிறகு தாய்ப்பாலின் மூலமாகவோ பரவலாம்.  ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இவ்வழியில் பாதிக்கப்படுகின்றனர், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வளரும் நாடுகளில் பிறந்தவர்கள். தாயிடம் இருந்து குழந்தைக்கு நோய் பரவுதலை குழந்தை தாயின் கருவில் இருக்கும் போதே, அல்லது பிறந்த உடனே தடுப்பதில் முக்கிய முன்னேற்றங்கள் அடையப்பட்டுள்ளது.  வசதி மிகுந்த பல பகுதிகளில், எச் ஐ வியால் பாதிகப்பட்ட தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தாய்ப்பால் ஊட்டலுக்கு ஏற்க தகுந்த மற்றும் மலிவான மாற்று முறைகள் அங்கு கிடைக்கிறது.  ஆனால்,எச் ஐ வியால் பாதிகப்பட்ட தாய்மார்கள் அதிகமாக வசிக்கும் உலகின் பல பகுதிகளில் தாய்ப்பால் ஊட்டலை முழுமையாக தவிர்ப்பது பெரும்பாலும் ஏற்க தகுந்ததாக இல்லை ( உதாரணமாக, சுத்தமான நீர் மற்றும் மலிவான மாற்று உணவு இல்லாத காரணத்தினால்).   எனவே, தாய்ப்பால் மூலம் எச் ஐ வி பரவுவதை தடுகக்கும் முறைகள் உடனடியாக தேவைப்படுகிறது.  தாய்ப்பால்லுடன் மற்ற திரவ அல்லது திட உணவுகள் கொடுக்கும் முறையை ஒப்பிடும்பொழுது பாதுகாப்புடன் கூடிய குறைந்த செலவில் முழுமையான தாய்ப்பாலூட்டு தவிர்ப்பு முறையும் அத்துடன் வாழ்க்கையில் முதல் சில மாதங்கள் குழந்தை தாய்ப்பால் மட்டும் அளிப்பது நோய் பரவுவதை தடுக்க உதவுகிறது என்று சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  தாய்ப்பால் தரும் நேரத்தில் குழந்தைகளுக்கு எச் ஐ வி எதிர்ப்பு மருந்து (அண்டி-ரெட்ரோ வைரல்) கொடுப்பதன் மூலம், தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவப்படும் ஆபத்து குறைக்க உதவும் இன்னும் ஓரு மருத்துவமுறையாக கருதப்படுகிறது. இம் மருத்துவமுறைகளை செயல்படுத்தவது, மற்றும் வேறுபல சிறப்பான முறைகளையும் கண்டரிவது முக்கியமானது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: பிறை சுடன் ஜெயகாந்தன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information