பராமரிப்பு விடுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் இருக்கும் வயதானவர்களில் கீழே விழுதலை தடுக்கும் சிகிச்சை தலையீடுகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

வசிப்பிடங்கள் அல்லது செவிலிய பராமரிப்பு விடுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் இருக்கும் வயதான மக்களில், கீழே விழுதல் மிக பொதுவான நிகழ்வுகளாகும், அவை சாராதிருத்தல் இழப்பு, காயங்கள், மற்றும் சிலசமயங்களில் காயம் நிமித்தமான மரணங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். விழுவதை தவிர்க்கும் திறன்வாய்ந்த தலையீடுகள், அவற்றின் குறிப்பிடத்தக்க உடல்நலப் பயன்கள் காரணமாக முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.

இந்த திறனாய்வு 60, 345 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட 60 சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை சேர்த்துள்ளது. நாற்பத்து மூன்று சோதனைகள் (30,373 பங்கேற்பாளர்கள்) பராமரிப்பு கூடங்களில் நடை பெற்றன , மற்றும் 17 சோதனைகள் (29,972 பங்கேற்பாளர்கள் ) மருத்துவமனைகளில் நடை பெற்றன. பெரும் எண்ணிக்கையிலான சோதனைகள் இருந்தப் போதிலும், எதேனும் ஒரு சிகிச்சை தலையீட்டை ஆதரிப்பதற்கு வரையறுக்கப்பட்ட சான்றுகள் தான் இருந்தன.

பராமரிப்பு விடுதிகளில், வைட்டமின் டி மருந்துகளின் பரிந்துரைப்பு கீழே விழுதலின் எண்ணிக்கையைக் குறைத்தது, அநேகமாக குடியிருப்பாளர்களுக்கு வைட்டமின் டி அளவுகள் குறைவாக இருந்தது காரணமாக இருந்திருக்கலாம். பராமரிப்பு விடுதிகளில் உடற்பயிற்சி தலையீடுகளை சோதனையிட்ட 13 சோதனைகளின் முடிவுகள் நிலையற்றதாய் இருந்தன மற்றும் ஒட்டுமொத்ததில் ஒரு நன்மையும் காட்டவில்லை. உடற்பயிற்சி திட்டங்கள், பலவீனமான குடியிருப்பாளர்களில் கீழே விழுதலை அதிகரித்து மற்றும் கொஞ்சம் பலவீனமான குடியிருப்பாளர்களில் கீழே விழுதலை குறைத்தது இதற்கு காரணமாக இருக்கலாம். பல அபாயக் காரணிகளை இலக்காகக் கொண்ட சிகிச்சை தலையீடுகள் கீழே விழுவதின் எண்ணிக்கையை குறைப்பதில் திறன்வாய்ந்ததாக இருக்கக்கூடும்.

கூடுதல் இயன்முறை மருத்துவம் மருத்துவமனை புனர்வாழ்வு இருப்பிடங்களில் இருந்த மக்களில் கீழே விழும் எண்ணிக்கையை குறைத்தது மற்றும், பல அபாயக் காரணிகளை இலக்காகக் கொண்ட சிகிச்சை தலையீடுகள் மருத்துவமனைகளில் கீழே விழும் எண்ணிக்கையை குறைத்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.