தம்ப முள்ளந்தண்டழல்க்கு மெதொடிரெக்ஸேட்

காக்ரேன் ஒத்துழைப்பு ஆராய்ச்சியாளர்கள் தம்ப முள்ளந்தண்டழல் (ankylosing spondylitis (AS)) உள்ளவர்களுக்கு மெதொடிரெக்ஸேட் மருந்தின் திறன் பற்றி ஒரு ஆய்வு நடத்தினர். மொத்தம் 116 பங்கேற்பாளர்கள் கொண்ட 3 ஆய்வுகள் சேர்ப்பு விதிகளுக்கு உட்பட்டு இருந்தன.

இந்த ஆய்வு AS பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிவிப்பது:

-மெதொடிரெக்ஸேட் உடற்சார்ந்த செயல்பாட்டு திறனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது .ஆனால் அது எதேச்சையாக நடக்கக் கூடும்.

-ஆய்வுகளில் போதுமான பங்கேற்பாளர்கள் இல்லாததால் மெதொடிரெக்ஸேட் (methotrexate) வலி, ரணம், மற்றும் மூட்டுகளில் தசைநார்களின் வீக்கம், முதுகெலும்பு இயக்கம், விறைப்பு மற்றும் ஒட்டுமொத்த நலனுக்காக உதவும் என்பது உறுதியற்றதாக உள்ளது.

-மெதொடிரெக்ஸேட் மூட்டுகளின் சேதத்தைத் தாமதப்படுத்தும் என்பது உறுதியற்றதாக உள்ளது ஏனெனில் இந்த ஆய்வுகளில் தம்ப முள்ளந்தண்டழல் (AS) உடைய மக்களின் முதுகு தண்டை X -கதிர் கொண்டு சோதிக்கவில்லை.

பக்கவிளைவுகளைப் பற்றி துல்லியமான தகவல்கள் இல்லை. குறிப்பாக அரிதான ஆனால் கடுமையான பக்க விளைவுகளை பற்றி தகவல்கள் இல்லை. வயிற்று பிரச்சினைகள்,லேசான தலைவலி, வாய்ப்புண், கல்லீரல் செயல்பாடு மாற்றங்கள், முடி உதிர்தல், அல்லது லேசான தொற்று நோய்கள் முதலியன சாத்தியமான பக்க விளைவுகள். அரிதான சிக்கல்களில் நுரையீரல் பிரச்சனைகள் அடங்கும். தீவிர பிரச்சனைகளைக் கண்டறிய மருத்துவ நியம சந்திப்புகளைச் சரியாக கடைப்பிடிப்பது முக்கியம்.

AS மற்றும் மெத்தோட்ரெக்ஸேட் என்றால் என்ன?

AS ஒரு விதமான வாதநோய், இவை முதுகெலும்பு மூட்டுகள் மற்றும் தசைநார்களைப் பாதிக்கும். இது தோள்கள், இடுப்பு, அல்லது மற்ற இதர மூட்டுகளையும் பாதிக்கும். முதுகு மற்றும் இதர முடுகளில் இயக்கத்தை, வலி மற்றும் விறைப்புத்தன்மை கட்டுப்படுத்தும்.

மெதொடிரெக்ஸே (MTX) ஒரு நோய் மாற்றம் அளிக்ககூடிய ஆன்டிரூமாடிக் மருந்து (DMARD) ஆகும். இது மூட்டுகளில் வீக்கம் உள்ள நோயாளிகளுக்கு DMARD பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இவை பாதிக்கப்பட்ட மூட்டுகளில் உள்ள வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மூட்டுகளின் வலி மற்றும் விறைப்புத்தன்மையையும் குறைக்கும். MTX வாரத்திற்கு ஒருமுறை மாத்திரை வடிவிலோ அல்லது ஒரு ஊசி மூலமோ அளிக்கப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ஜெயலக்ஷ்மி மற்றும் சி.இ.பி.என்.அர். குழு

Tools
Information