சிசோப்ரேனியாவிற்கான உடற்பயிற்சி சிகிச்சை

தொடர்ச்சியான உடற்பயிற்சி மற்றும் உடலியக்க நடவடிக்கை உடல் மற்றும் மனநலம் இரண்டையும் மேம்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்த திறனாய்வில் மூன்றே ஆய்வுகள் சேர்க்கப்பட்டிருந்தாலும், தொடர்ச்சியான உடற்பயிற்சி சிசோப்ரேனியா கொண்ட சிலருக்கு அவர்களின் உடல் மற்றும் மனநலம் மற்றும் பொதுவான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவக் கூடும் என்று ஒட்டுமொத்த முடிவுகள் காட்டுகின்றன. சிசோப்ரேனியா கொண்ட நபர்களுக்கு உடற்பயிற்சியை தொடங்குவது மற்றும் தொடர்வதற்கு எவ்வாறு சிறப்பாக உதவுவது என்பதை எதிர்கால ஆய்வுகள் கருத்தில் கொள்ள வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information