தீக்காயங்கள் மற்றும் வெந்த புண்களை தடுப்பதில் சமூகம்-சார்ந்த அணுகுமுறைக்கு இம்மட்டும் போதுமான அளவு ஆதாரம் இல்லை.

காயங்களின் நிகழ்வுகளை குறைப்பதற்கு, பல்-உக்தியான சமூகம்-சார்ந்த சிகிச்சை தலையீடுகள் பரந்த அளவில் ஊக்கப்படுத்தப்படுகின்றன. இந்த அணுகுமுறையின் பலாபலனை மதிப்பிடுவது கடினமாக உள்ளது மற்றும் நல்ல தரம் வாய்ந்த ஆராய்ச்சி ஆய்வுகள் மிக குறைவாகவே உள்ளன. குழந்தைகளில் தீக்காயங்கள் மற்றும் வெந்த புண்களை தடுப்பதற்கென்று குறிப்பாக உள்ள சமூகம்-சார்ந்த சிகிச்சை தலையீடுகளின் வெற்றியை மதிப்பிட்ட ஆய்வுகளை திறனாய்வு செய்வதை இந்த திறனாய்வு நோக்கமாக கொண்டது. சேர்க்கை விதிகளை சந்தித்த நான்கு ஆய்வுகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டன, மற்றும் அவற்றில் இரண்டு ஆய்வுகள், தீக்காயங்கள் மற்றும் வெந்த புண்களின் குறைவான நிகழ்வுகளை கண்டன. சமூக அணுகுமுறையின் தொடர்ந்த பயன்பாட்டை ஆதரிக்க வேண்டி, இந்த தலைப்பில் அதிக உயர்-தர ஆராய்ச்சி படிப்புகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information