கழுத்து வலிக்கான உடற்பயிற்சி

திறனாய்வு கேள்வி

கழுத்து வலியுள்ள மக்களிடையே வலி, இயலாமை, நோயாளியின் திருப்தி, மற்றும் வாழ்க்கை தரத்தின் மேல் உடற்பயிற்சி சிகிச்சை விளைவுகளின் ஆதாரத்தை நாங்கள் திறனாய்வு செய்தோம்.

பின்புலம்

கழுத்து வலி பொதுவானது; அது ஒரு நபரின், சாதாரண நடவடிக்கைகளில் பங்கேற்கும் திறனை கட்டுப்படுத்த முடியும், மற்றும் அதிக செலவு வைப்பதாகும். கழுத்து வலிக்கு உடற்பயிற்சி ஒரு பரவலாக பயன்படுத்தப்படும் சிகிச்சை ஆகும். இந்த திறனாய்வு, கழுத்து வலி சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகிற அல்லது செய்யப்படுகிற செயல் பயிற்சிகளைக் (குறிப்பிட்ட கழுத்து மற்றும் தோள் பயிற்சிகள், தசை நீட்சி, வலுப்படுத்துதல், தோற்ற அமைவு கட்டுப்பாடு , சுவாசம், அறிவாற்றல், செயல்பாட்டு, கண்- பொருத்துதல் மற்றும் அசைவுகளையுணர்தல் பயிற்சிகள் உட்பட) உள்ளடக்கியதாகும். எந்த ஆய்வு படிப்புகளில் உடற்பயிற்சி சிகிச்சை, பல்வேறு துறை சார்ந்த சிகிச்சையின், பலவிதமான சிகிச்சைமுறையின் ஓர் பகுதியாக கொடுக்கப்பட்டதோ (கையாளுதல் அல்லது மீயொலி போன்ற பிற சிகிச்சைகளுடன் சேர்த்து) அல்லது பயிற்சி பெற்றவர்களால் அளிக்கப்படும் உடற்பயிற்சிகள் (பிடிப்பு-தளர்த்தல் நுட்பங்கள், இசைவு நிலைப்படுத்துதல், மற்றும் செயலற்ற நுட்பங்கள்), அவைகள் விலகப்பட்டன.

ஆய்வு பண்புகள்

இந்த ஆதாரம் தற்போது மே 2014 வரையுள்ளது. உடற்பயிற்சி, கழுத்து வலி மற்றும் இயலாமையைக் குறைத்து; செயல்பாடு, மொத்தமாக உணரப்படும் விளைவு, நோயாளியின் திருப்தி மற்றும்/ அல்லது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியுமா என்பதை பரிட்சித்த 27 சோதனை படிப்புகளைக் (2485 பங்கேற்பாளர்களை மொத்தமாகக் கொண்டது) நாங்கள் கண்டோம். இந்த பரிசோதனைகளில், உடற்பயிற்சி போலி சிகிச்சையுடனோ அல்லது சிகிச்சையின்மையுடனோ (காத்திருப்போர் பட்டியல்) ஓப்பிடப்பட்டது அல்லது மற்றொரு தலையீட்டுடன் இணைக்கப்பட்ட உடற்பயிற்சி அதே தலையீட்டுடன் (கையாளுதல்,விளக்கக் கல்வி /ஆலோசனை, குத்தூசி சிகிச்சை, உருவு சிகிச்சை, வெப்பம் அல்லது மருந்துகள் போன்றவற்றை உள்ளடக்க கூடும்) ஓப்பிடப்பட்டது. கழுத்து வலியை ஆய்வு செய்த 27 சோதனைகளில், இருபத்தி-நான்கு சோதனைகள் கழுத்து வலியின் கால அளவை பதிவு செய்திருந்தது: 1 கடுமையானவை; 1 கடுமையான முதல் நாள்பட்ட வரை; 1 ஓரளவு நாள்பட்டவை; 4 ஓரளவு நாள்பட்ட/ நாள்பட்டவை; மற்றும் 16 நாள்பட்டவை. ஒரு ஆய்வு, கழுத்து கோளாறுடன் கூடிய கடுமையான நரம்பு நோயைக் குறிப்பிட்டிருந்தது; இரு சோதனைகள் , ஓரளவு நாள்பட்ட மற்றும் நாள்பட்ட கழுத்திலிருந்து எழும் தலைவலியை ஆராய்ந்தன.

முக்கிய முடிவுகள்

பாதிக்கு மேலான சோதனைகள் பாதகமான விளைவுகளைத் தெரிவிக்கவில்லை என்றாலும், உடற்பயிற்சி தற்காலிக மற்றும் தீங்கற்ற பக்க விளைவுகளோடு பாதுகாப்பானது என்று காட்டியது. பல்வேறு வகையான உடற்பயிற்சிகளின் விளைவுகளை பார்த்து போது, சோதனை நெறிமுறைகள் இடையே ஒற்றுமையை உறுதி செய்ய ஒரு உடற்பயிற்சி வகைப்படுத்தும் முறை பயன்படுத்தப்பட்டது. சிலவகை உடற்பயிற்சிகள் பிற ஒப்பிட்டு குழுக்களுக்கு மேலாக அனுகூலமானதாக இருப்பதைக் காட்டியது. வலுப்படுத்தும் பயிற்சிகளுக்கு கழுத்து, தோள் மற்றும் தோள்பட்டை பகுதியின் மேல் கவனம் செலுத்தப்பட்டால், கடுமையான கழுத்து வலி, கழுத்திலிருந்து எழும் தலைவலி மற்றும் கழுத்து நரம்பு நோய் ஆகியவற்றில் ஒரு பங்கு இருப்பதாகத் தோன்றுகிறது. மேலும், வலுப்படுத்தும் பயிற்சிகளோடு சேர்க்கப்பட்ட தாங்கும்திறன்/ஆற்றல் அல்லது தசை நீட்டல் பயிற்சிகளின் பயன்பாடு மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பயிற்சிகளின் பலனளிக்கும் விளைவுகள் பற்றி சில சான்றுகள் உள்ளது (எடுத்துக்காட்டு: கழுத்திலிருந்து எழும் தலைவலிக்கு, அழற்பாறை பல்இணை வடிவத்தின் நீடித்த இயல்பான குறுமூட்டு நழுவு) மற்றும் நாள்பட்ட இயந்திர இயக்கம் சார்ந்த கழுத்து வலிக்கு, விழிப்பு நெறி பயிற்சிகள் (எடுத்துக்காட்டு:குகோங்). கழுத்து, தோள் மற்றும் தோள்பட்டை பகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்ட தசை நீட்டல்அல்லது தாங்கு திறன் மட்டுமான உடற்பயிற்சிகள், கழுத்து வலி மற்றும் செயல்பாடு மேல் சிறிதளவே விளைவை கொண்டிருதது என்று தெரிகிறது.

சான்றின் தரம்

எந்த உயர்-தர சான்றும் கண்டுபிடிக்க முடியாத நிலைமையானது , கழுத்து வலிக்கான உடற்பயிற்சியின் திறன் பற்றி உறுதியில்லாத நிலைப்பாடே இன்னும் உள்ளது என்பதை குறிப்பிடுகிறது. இவ்விளைவின் மதிப்பீட்டின் மேல் வருங்கால ஆராய்ச்சி ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது; இந்த திறனாய்வில் பல சவால்கள் இருந்தன, எடுத்துக்காட்டாக, பெரும்பாலான சோதனைகளில் உள்ள பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது, சேர்க்கப்பட்டிருந்த பாதிக்கு மேலான ஆய்வுகள் குறைந்த அல்லது மிக குறைந்த தரம் கொண்டதாக இருந்தன, மற்றும் உகந்த உடற்பயிற்சி அளவை தேவைகள் மீது மிகக் குறைவான ஆதாரமே இருந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information