ஹெலிகோபாக்டெர் பைலோரி தொற்றுனால் உண்டாகும் குடற் புண்ணிற்கு (Peptic ulcer) நுண்ணுயிர்க் கொல்லிகள்

திறனாய்வு கேள்வி

ஹெலிகோபாக்டெர் பைலோரி (ஹெச் பைலோரி தொற்றுடான் கூடிய குடற் புண்ணிற்கு (Peptic ulcer) (அதாவது குடல் அல்லது மேல் சிறு குடல் தொடக்க பகுதியில் உண்டாகும் புண்கள்) நுண்ணுயிர்க் கொல்லிகள் எவ்வகையில் உதவிகரமாக இருக்கும்?

பின்புலம்

குடற் புண் (Peptic ulcer)நோய், வயிற்றில் சுரக்கும் அமிலசாறுகள் வயிற்றின் உட்பூச்சினை சேதப்படுத்துவதாலும் (இரைப்பை புண்)அல்லது மேல்சிறுகுடலை சேதப்படுத்துவதாலும் (முன் சிறு குடல் புண்) உண்டாகிறது. இவை வலி, அஜீரணம் மற்றும் சில நேரங்களில் இரத்தப்போக்கு உண்டாக்கலாம். குடற் புண் ஆறிய பின்னும் மீண்டும் வரலாம் .குறிப்பாக ஒருவருக்கு ஹெலிகோபாக்டெர் பைலோரியினால்தொற்று இருந்து, (சிகிச்சை அளிக்காவிட்டால் வாழ்நாள் முழுக்க இருக்கும் தொற்று)இது ஏற்படலாம். எச் பைலோரி பொதுவாகக் குடற் புண்களை (Peptic ulcer) ஏற்படுத்துகிறது. குடற் புண் (Peptic ulcer) உள்ளவர்களுக்கு, ஹெச் பைலோரியை அழிக்க, நுண்ணுயிர்க் கொல்லிகளை கூட்டு மருந்துகளின் ஒரு பகுதியாக (ஹெச் பைலோரியை அழிப்பதற்கான சிகிச்சை) சேர்த்து அளிக்கப்படும் சிகிச்சையை, எந்த ஒரு சிகிச்சையும் எடுக்காதவர்கள் அல்லது வேறு மருத்துவ சிகிச்சை பெற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தபோது இச்சிகிச்சை உதவியாக இருக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை. இது 2006 இல் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் புதுப்பிப்பாகும்.

ஆய்வு பண்புகள்

55 ஆராய்ச்சிகள் இந்த திறனாய்விற்கு தகவல் அளித்தன. முன்சிறுகுடற்புண் (duodenal ulcer) ஆறுவதற்காக எச் பைலோரி அழிப்பு சிகிச்சையுடன் வயிற்று புண்-ஆற்றும் மருந்துசேர்த்தும், வயிற்று புண்-ஆற்றும் மருந்து மட்டும்தனியாக அளித்தும் செயப்பட்ட சோதனைகளை 34 ஆராய்ச்சிகள் ஒப்பிட்டன. எச் பைலோரி அழிப்பு சிகிச்சையை எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாததுடன் 2 ஆராய்ச்சிகள் ஒப்பிட்டன. இரைப்பைப்புண் (gastric ulcer) சிகிச்சைக்கு ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையுடன் வயிற்று புண்-ஆற்றும்மருந்தை சேர்த்தும் ,வயிற்று புண்-ஆற்றும் மருந்து மட்டும்தனியாக அளித்தும் செய்யப்பட்ட சோதனைகளை 15 ஆராய்ச்சிகள் ஒப்பிட்டது. 3 ஆய்வுகள் குடற் புண் (Peptic ulcer) (இரைப்பைப்புண் அல்லது முன்சிறுகுடற்புண்) ஆறுவதற்காக ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையோடு, வயிற்று புண்-ஆற்றும் மருந்து சேர்த்தும், வயிற்று புண்-ஆற்றும் மருந்து மட்டும் அளித்தும் செய்யப்பட்ட சோதனைகளை ஒப்பிட்டன. ஒரு ஆய்வு குடற் புண் (Peptic ulcer) (இரைப்பைப்புண் அல்லது முன்சிறுகுடற்புண்) ஆறுவதற்காக ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையை எவ்வித சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாதவர்களோடு ஒப்பிட்டது. வயிற்று புண்-ஆற்றும் மருந்தால் வயிற்று புண்கள் முதலில் ஆறியபின், முன்சிறுகுடற்புண் (duodenal ulcer) மீண்டும் நிகழ்தலை தடுக்க அளிக்கப்படும் ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையுடன் வயிற்று புண்-ஆற்றும் மருந்துடன் நான்கு ஆராய்ச்சிகள் ஒப்பிட்டன. வயிற்று புண்கள் முதலில் ஆறியவுடன் முன்சிறுகுடற்புண் (duodenal ulcer) மீண்டும் நிகழ்தலை தடுக்க எடுக்கப்படும் ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்புசிகிச்சையுடன் எந்த சிகிச்சையும் எடுக்காதவர்களுடன் 27 ஆராய்ச்சிகள் ஒப்பிட்டன. வயிற்று புண்கள் முதலில் ஆறியவுடன் இரைப்பைப்புண் (gastric ulcer) மீண்டும் நிகழ்தலை தடுக்க அளிக்கப்படும் ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையுடன் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாதவர்களுடன் 12 ஆராய்ச்சிகள் ஒப்பிட்டது. ஒரு ஆய்வு வயிற்று புண்கள் முதலில் ஆறியவுடன் குடற் புண் (Peptic ulcer) இரைப்பைப்புண் அல்லது முன்சிறுகுடற்புண் (gastric or duodenal ulcer) மீண்டும் நிகழ்தலை தடுக்க எடுக்கப்படும் ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையுடன் எந்த சிகிச்சையும் எடுத்துக்காதவர்களை ஒப்பிட்டது. ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையுடன் வயிற்று புண்-ஆற்றும் மருந்துகள் சேர்த்த சிகிச்சையை, குடற் புண் (Peptic ulcer) அறிகுறிகள் நிவாரண திட்டங்களுடன் நான்கு ஆராய்ச்சிகள் ஒப்பிட்டன. இரைப்பைப்புண் குணப்படுத்த எச் பைலோரி அழிப்பு சிகிச்சையை எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாதவர்களுடன் ஒப்பிட்டு எந்த ஒரு ஆராய்ச்சியும் இல்லை. மேலும் வயிற்று புண்கள் முதலில் ஆறியபின் மீண்டும் வராமல்தடுக்க எடுக்கப்படும், எச் பைலோரி அழிப்பு சிகிச்சையையுடன் வயிற்று புண்-ஆற்றும் மருந்துகளோடு ஒப்பிட்ட எந்த ஒரு ஆராய்ச்சியும் இல்லை. மேலும் ஹெலிகோபாக்டெர் பைலோரி அழிப்பு சிகிச்சையுடன் வயிற்று புண்-ஆற்றும் மருந்துகள் சேர்த்து அளித்த சிகிச்சையோடு எவ்வித சிகிச்சையும் எடுக்காதவர்களோடு ஒப்பிட்டு எந்த ஒரு ஆராய்ச்சியும் இல்லை. சில ஆய்வுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒப்பீடுகளுக்கு தகவல்களை அளித்துள்ளன. இந்த ஆதாரம் மார்ச் 2016 வரையிலான நிலவரப்படியானது.

முக்கிய முடிவுகள்

எச் பைலோரி உள்ளது என்று உறுதியாக நிருபிக்கப் பட்ட முன்சிறுகுடற்புண் நோயாளிகளுக்கு , இரைப்பைப்புண் ஆறுவதற்கான மருந்து மட்டும் எடுத்துகொள்வது மற்றும் எந்த சிகிச்சையும் எடுக்காததோடு ஒப்பிடும்போது, ஓன்று முதல் இரண்டு வாரத்திற்கு எச் பைலோரி அழிப்பு சிகிச்சையை கூடுதலாக சேர்த்துகொள்வது , இரைப்பைப்புண் ஆறுவதைத் துரிதப்படுத்தும் எந்த சிகிச்சை எடுக்காதாவர்களுடன் ஒப்பிடும்போது எச் பைலோரி அழிப்பு சிகிச்சை இரைப்பைப்புண் (gastric ulcer) மற்றும் முன்சிறுகுடற்புண் (வயிற்று புண்கள் முதலில் ஆறியவுடன்) மீண்டும் நிகழ்தலை தடுப்பதில் திறனானது. இரைப்பைப்புண் உள்ளவர்களுக்கு இரைப்பைப்புண் ஆறுவதற்கான மருந்து சிகிச்சையோடு ஒப்பிடும்போது எச் பைலோரி அழிப்பு சிகிச்சை ஒரு திறனான சிகிச்சை அல்லது மீண்டும் வருவதை தடுக்கும் திறனானது என்று கூற தற்போது எந்த ஆதாரமும் இல்லை. வயிற்று புண்கள் முதலில் ஆறியவுடன் முன்சிறுகுடற்புண் மீண்டும் நிகழ்தலை தடுக்க மற்றும் கடுமையான இரைப்பைப்புண் ஆற்றலுக்கு எச் பைலோரி அழிப்பு சிகிச்சை எந்த ஒரு சிகிச்சையும் எடுக்காதாவர்களுடன் ஒப்பிடும் ஆய்வுகள் சிறிய எண்ணிகையில் இருந்தமையால் இவை குறிப்பிடும் படியான பயனோ அல்லது தீங்கோ உண்டுபண்ணும் என்பதை மறுக்க இயலாது.

ஆதாரங்களின் தரம்

பெரும்பாலான ஆராய்ச்சிகளில் , ஆய்வு வடிவமைப்பில் பிழைகள் இருந்தமையால் ஆதாரங்களின் தரம் குறைவு அல்லது மிகவும் குறைவாக இருந்தது. இதனால் முடிவுகளைப் பற்றி நிறைய நிச்சயமற்ற தன்மை உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information