Skip to main content

பிரசவத்தின் போது பெண்களுக்கு தொடர் ஆதரவு (ஊக்கம்) தருவது

பிரசவத்தின் போது தொடர்ந்து ஆதரவு (ஊக்கம்) தருவது, ஒரு தன்னிச்சையான யோனிவழி பிறப்பின் வாய்ப்பை அதிகரித்தது, எந்த தீங்கும் இல்லை, மற்றும் பெண்கள் அதிக திருப்தி அடைந்தார்கள்.

காலம்காலமாக பிரசவத்தின் போது பெண்கள் மற்ற பெண்களால் கவனிக்க பட்டதோடு அவர்களிடமிருந்து ஆதரவும் கிடைக்கபெற்றார்கள். எனினும், பல நாடுகளில், அதிக எண்ணிக்கையில் பெண்கள் வீட்டிற்கு பதிலாக மருத்துவமனையில் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். பிரசவத்தின் போது, தொடர் ஆதரவு என்பது விதியாக அல்லாமல் விதிவிலக்காகவே மாறிவிட்டது. இது பெண்களின் பிரசவ அனுபவங்கள் பாலுள்ள மனித நேயத்தை இழக்கும் படி செய்ததற்கு காரணமாக இருக்கலாம். நவீன மகப்பேறு பேணுகை பொதுவாக பெண்களை நிறுவன நடைமுறைகளுக்கு உட்படுத்துகின்றன. அது பிரசவத்தின் முன்னேற்றத்தில் பாதகமான விளைவுகளை உண்டுபண்ணலாம். பிரசவத்தின் போது காட்டும் ஆதரவு உணர்ச்சிபூர்வமான ஆதரவாக, பிரசவத்திற்கான வசதிகளை ஏற்படுத்தல் , தகவல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றை கொண்டவையாகயிருக்கலாம். இது பிரசவத்தின் உடலியல் செயல்முறைகளை மேம்படுத்துவதுடன் பெண்களின் கட்டுப்பாடு மற்றும் ஆற்றல் உணர்வுகளை அதிகரிக்கலாம். இதனால் மகப்பேறியல் தலையீட்டின் தேவையை குறைக்கலாம். பலதரப்பட்ட அமைப்புகள் மற்றும் சூழ்நிலைகளில், 15,000 க்கும் மேற்பட்ட பெண்கள் கொண்டு, 16 நாடுகளில் மேற்கொண்ட 23 சோதனைகள் (22 ஆய்வுகளின் தரவுகள் கொண்டது) இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர் ஆதரவு, ஒன்று மருத்துவமனை ஊழியர்கள் (செவிலி அல்லது செவிலித்தாய் போன்றவர்கள்) அல்லது வைத்தியசாலை ஊழியர்கள் அல்லாத மற்றும் பிரசவ பெண்களுக்கு உறவும் அல்லாத பெண்கள் (சுமாரான அளவு வழிகாட்டல் வழங்கப்பட்ட மகப்பேறில் உதவ முறைப்படி கற்ற அல்லது பெண்கள் போன்றவர்கள்) அல்லது பிரசவ பெண்களின் விருப்பப்படி அவர்களின் சமுகத்தில் உள்ள நபித்தோழர்கள் (அவரது கணவர், கூட்டாளி, தாயார், நண்பர் போன்றவர்கள்) போன்றவர்களால் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பிரசவ ஆதரவு பெற்ற பெண்கள் தன்னிச்சையாக குழந்தையை பெற்றெடுக்க அதாவது, அறுவை வழிப்பேறு (சிசேரியன்) இல்லாமலும் அல்லது வெற்றிடம் அல்லது இடுக்கி இழுவையால் பெறல் (ஃபோர்செப்ஸ்) இல்லாமலும் பெற்றெடுக்க அதிக வாய்ப்பு இருந்தது. மேலும், பெண்களுகள், வலி மருந்துகள் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தது, திருப்தி அதிகமாக இருந்தது, மற்றும் பிரசவ நேரம் சற்று குறைவாக இருந்தது. அவர்களின் குழந்தைகள் ஐந்து நிமிட அப்கார் (Apgar) அளவீட்டில் குறைந்த மதிப்பெண்ணுடன் இருக்க வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இதில் பாதகமான விளைவுகள் ஏதும் அடையாளம் காணப்படவில்லை. நாங்கள் அனைத்து பெண்களுக்கும் பிரசவத்தின் போது, தொடர் ஆதரவு வேண்டும் என்று முடிவுக்கு வந்தோம். தொடர் ஆதரவு அந்த பெண்களின் சமுக வலையில் இல்லாத நபராக, பிரசவத்திற்கு ஆதரவு கொடுப்பதில் அனுபவமுள்ள, மிதமான அளவாவது அதற்கென்றே பயிற்சிபெற்ற நபரால் வழங்கும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. தேர்வு செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் பிரசவத்தின் போது துணையாக, இருப்பதை அவ்வாறு ஒரு துணை இல்லாததுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு, தங்கள் குழந்தைபேறு அனுபவத்தின் திருப்தியை அதிகரிக்கிறது என தோன்றுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்

மொழிபெயர்ப்பு: க. அழகுமூர்த்தி மற்றம் சி.இ.ப.ஏன்.அர் குழு

Citation
Bohren MA, Hofmeyr GJ, Sakala C, Fukuzawa RK, Cuthbert A. Continuous support for women during childbirth. Cochrane Database of Systematic Reviews 2017, Issue 7. Art. No.: CD003766. DOI: 10.1002/14651858.CD003766.pub6.