கீல்வாதத்திற்கான மின்காந்தமண்டலம் சிகிச்சைகள்

திறனாய்வு கேள்வி

கீல் வாதத்திற்கு மின்காந்தமண்டலத்தின் விளைவுகள் பற்றி அறிய இந்த திறனாய்வை நாங்கள் மேற்கொண்டோம். 636 பேர் கொண்ட ஒன்பது ஆய்வுகளை நாங்கள் கண்டறிந்தோம்.

பின் புலம்: கீல்வாதம் என்றால் என்ன மற்றும் மின்காந்தமண்டலம் என்றால் என்ன?

கீல்வாதம் என்பது, கைகள், இடுப்பு, தோள்கள் மற்றும் முழங்கால்களை பாதிக்கும் மிகவும் பொதுவான வாத வடிவம் ஆகும். மூட்டுவாதத்தில் மூட்டுஅமைப்பில் ஈடுபடும் எலும்புகளின் முனைகளை பாதுகாக்கும் குருத்தெலும்பு (Cartilage) சேதமடைந்து வலி மற்றும் வீக்கத்தை உண்டுபண்ணுகின்றது.

மின்காந்த மண்டலம் என்பது காந்தங்களின்பால் பொருள்களை ஈர்க்கும்தன்மையுடைய கண்ணுக்கு தெரியாத சக்தியாகும். இந்த கண்ணுக்கு தெரியாத ஈர்ப்பு சக்தியை, மூட்டுகளை சுற்றி உள்ள குருத்தெலும்பு பாதிக்கதக்க அளவில் மின் ஓட்டத்தை பயன்படுத்தி உருவாக்கலாம். கீல்வாதத்தில் மின்காந்தமண்டலங்கள் என்பது மூட்டினை சுத்தி உள்ள தோலில் மின்ஓட்டத்தை செலுத்தி செய்யப்படும் ஒருவகை சிகிச்சை முறையாகும். சிறிய இயந்திரங்கள் அல்லது மின்விரிப்புகள் (mats) மூலம் உடல் முழுவதும் அல்லது ஓரு சில மூட்டுகளில் மின்காந்தமண்டலம் அளிக்கப்படும். மருத்துவர் அல்லது இயன்முறை மருத்துவர் இந்த சிகிச்சையை செய்வார். சில இயந்திரங்கள் வீட்டிலேயே பயன்படுத்ததக்கவை.

ஆய்வு பண்புகள்

அக்டோபர் 2013 வரை இதனுடன் தொடர்புடைய அனைத்து ஆய்வுகளையும் தேடிய பிறகு, நாங்கள் 4 முதல் 26 வாரங்கள் மின்காந்த சிகிச்சையின் விளைவுகளை போலி சிகிச்சையோடு ஒப்பிட்ட , 636 கீல் வாதம் உள்ள பெரியவர்கள் பங்குபெற்ற ஒன்பது ஆய்வுகளை மீளாய்வு செய்தோம்.

முக்கிய முடிவுகள்

வலி (0-100 புள்ளிகள் கொண்ட அளவீட்டில் ; அதிக புள்ளிகள் என்றால் கடுமையான அல்லது மோசமான வலி):

கீல்வாதத்திற்கான மின்காந்தமண்டல சிகிச்சைகள் வலியை குறைக்கலாம்.

- மின்காந்த சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளவர்கள் போலி சிகிச்சை பெற்றவர்களோடு ஒப்பிடுகையில் வலிநிவாரணத்தில் 15 புள்ளிகள் அதிகம் பெற்றார்கள் (15% முன்னேற்றம்).

- மின்காந்தமண்டல சிகிச்சை பெற்றவர்கள், 0 முதல் 100 புள்ளிகள் வரையிலான ஒரு அளவீட்டில், அவர்களின் வலியை, 26 புள்ளிகள் குறைவாக பதிவிட்டனர்.

- போலிசிகிச்சை பெற்றவர்கள், 0 முதல் 100 புள்ளிகள் வரையிலான ஒரு அளவீட்டில், அவர்களின் வலியை, 11 புள்ளிகள் குறைவாக பதிவிட்டனர்.

உடல் செயல்பாடு

-மின்காந்தமண்டலம் உடற்சார்ந்த செயல்பாட்டு திறனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் அது எதேச்சையாக நடந்திற்க கூடும்.

ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் நல்வாழ்வு

- மின்காந்தமண்டலம் அநேகமாக ஒட்டுமொத்த உடல்நலம்,மற்றும் நல்வாழ்வில் எந்த மாற்றத்தையும் உண்டுபண்ணாது.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள் அல்லது பக்க விளைவுகளால் சிகிச்சையை நிறுத்துவது போன்றவற்றில் மின்காந்தமண்டலம் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களில் பொதுவாக எந்த வேறுபாடும் இல்லை. இருப்பினும் இது எதேச்சையாக நடந்திருக்கக் கூடும்.

பக்க விளைவுகள் மற்றும் சிக்கல்கள் பற்றிய துல்லியமான தகவல்கள் எங்களுக்கு கிட்டவில்லை. இது குறிப்பாக, அரிதான ஆனால் தீவிர பக்க விளைவுகளில் உண்மையாகிறது. தோல் எரிச்சல் மற்றும் வலி மேலும் மோசமடைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.

எக்ஸ்-ரே மாற்றங்கள்

எக்ஸ்-ரேயில் கீல்வாதம் உள்ள மூட்டில் மின்காந்தமண்டலம் சிகிச்சையினால் எதாவது முன்னேற்றம் இருக்குமா என்பதை பற்றி எந்த தகவலும் இல்லை.

சான்றின் தரம்

- மின்காந்தமண்டலம் அநேகமாக வலியை குறைக்கலாம் மற்றும் ஒட்டுமொத்த உடல்நலம், நல்வாழ்வு மற்றும் பக்கவிளைவுகளில் எந்த மாற்றத்தையும்உண்டுபன்ணாது. மேற்கொண்டு செய்யப்படும் ஆராய்ச்சிகளில் இது மாறலாம்.

- மின்காந்தமண்டலம் சிகிச்சைகள் செயல்பாட்டு திறனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் மேலும் செய்யப்படும் ஆராய்ச்சிகள் மாற்றத்தை உண்டுபண்ணலாம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ. பி.என்.அர்

Tools
Information