பக்கவாதத்திலிருந்து பிழைத்தவர்களுக்கான உடல் திறன் மேம்படுத்தும் பயிற்சி

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

திறனாய்வு கேள்வி

உடல்திறன் மேம்படுத்தும் பயிற்சிகள் பக்கவாதத்தால் பாதிக்க பட்டவர்களின் ஆரோக்கியத்தையும் செயல் திறனையும் அதிகரிக்க உதவுகிறதா என்று ஆய்வு செய்யும் ஆதாரங்களை நாங்கள் மறுசீராய்வு செய்தோம்.

பின்புலம்

அன்றாட செயல்பாடுகளான நடப்பது,படிஏறி இறங்குவது போன்றவற்றிற்கு உடல்திறன் முக்கியமாக தேவைப்படுகிறது. உடல்திறன் ஒன்று போல் அனைவருக்கும் இராது ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடியது. உதாரணத்திற்கு பெண்களைவிட ஆண்களுக்கு உடல்திறன் அதிகமாக இருக்கும். அது போல் வயதாகும் போது உடல் செயல்பாடுகள் குறையும் நிலையில் உடல்திறன் குறையும். பக்கவாதத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு உடல்திறன் குறைவாக இருக்கும். அது பக்கவாத நோயாளிகளின், அன்றாட நடவடிக்கைகளுக்கான செயல்திறனைக் கட்டுப்படுத்துவதோடு பக்கவாதம்-தொடர்பான இயலாமையை மோசமடைய செய்யலாம் . இந்த காரணத்திற்காக பக்கவாத நோயாளிகளுக்கு உடற்திறன் பயிற்சி ஒரு நன்மையளிக்கக் கூடிய அணுகுமுறையாக முன்மொழியப்பட்டது.இருப்பினும் இப்பயிற்சியில் பங்கெடுப்பதால் பக்கவாத நோயாளிகளின் யோசிக்கும் திறன், வாழ்க்கை தரம் , மனோநிலை அதிகரித்தல் போன்ற பக்கவாத நோயாளிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பலவகை நன்மைகள் கிடைப்பதோடு மீண்டும் பக்கவாதம் தாக்குவதற்கான வாய்ப்பை குறைப்பதாகவும் கருதப்படுகின்றது.

ஆய்வு பண்புகள்

பிப்ரவரி 2015 வரை நாங்கள் 58 ஆய்வுகளை கண்டறிந்தோம். இந்த ஆய்வுகள் மருத்துவமனையில் உள்ளவர்கள் மற்றும் வீட்டில் வாழும் பக்க வாத நோயாளிகள் என எல்லா நிலைகளிலும் இருக்கும் 2797 பேர்களை உள்ளடக்கியது இதில் பங்குபெற்ற பெரும்பாலானவர்கள் தானாக நடக்கும் திறன் கொண்டவர்கள். இந்த ஆய்வுகள் பல விதமான உடல்திறன் பயிற்சிகளை பரிசோதித்துள்ளன. அவைகளில் 1. இதய சுவாச திறன் மேம்படுத்தும் பயிற்சிகள் /நீடித்துழைக்கும் திறன் மேம்படுத்தும் பயிற்சிகள் 2.உடல் வலிமை மேம்படுத்தும் பயிற்சிகள் /எதிர்ப்பாற்றல் மேம்படுத்தும் பயிற்சிகள் 3.இவை இரண்டும் இணைத்து செய்யப்படும் கூட்டு பயிற்சிகள் போன்றவற்றின் ஆற்றலை பரிசோதித்துள்ளன.

முக்கிய முடிவுகள்

சில உடற்திறன் பயிற்சி வகைகள், குறிப்பாக, நடைபயிற்சி சம்மந்தப்பட்டவை உடற்பயிற்சி செய்யும் ​ திறன் மற்றும் பக்கவாதத்திற்கு பிறகான நடை, மற்றும் உடல் சமநிலையை மேம்படுத்த முடியும் என்று நாங்கள் கண்டுபிடித்தோம். இதய சுவாச திறன் மேம்படுத்தும் பயிற்சி மற்றும் உடல் வலிமை மேம்படுத்தும் பயிற்சி கூட்டாக மேற்கொண்டவர்களில் நடக்கும் திறனும் உடல் சமநிலையும் அதிகரித்துள்ளது. எனினும் யோசிக்கும் திறன் மீதும், வாழ்க்கை தரம் மீதும் மனோநிலை மீதும் இந்த உடல்திறன் பயிற்சிகளின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்று அறிய போதுமான விவரங்கள் இல்லை. அறிவுணர்விய செயல்பாட்டு திறன் பக்கவாதம் உள்ளவர்களுக்கு ஒரு முக்கியமான விளைவுபயன் என்றப் போதிலும் அவை குறைந்த அளவே ஆராயப் படுகிறது பல்வேறு வகையான உடற்திறன் பயிற்சிகளுள் எந்தவொரு பயிற்சியும் காயங்களையோ அல்லது மற்ற ஆரோக்கிய பிரச்சினைகளையோ ஏற்படுத்தியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை; உடற்பயிற்சி ஒரு பாதுகாப்பான சிகிச்சை தலையீடாக தோன்றுகிறது. பக்கவாதத்திலிருந்து பிழைத்தவர்களுக்கு, குறிப்பாக மிகக் கடுமையான பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாமல் உள்ளோருக்கு முக்கியத்துவம் வாய்ந்த நன்மைகளை பரிசோதித்தறிய மேலும் ஆய்வுகள் எமக்குத் தேவைப்படுகிறது.

சான்றின் தரம்

உடற்திறன் பயிற்சி ஆய்வுகளை செயல்படுத்தி நடத்துவது கடினமாக இருக்கலாம். இது என்னவென்றால், பெரும்பாலான ஆய்வுகள் சிறியதாகவும் ​ மிதமான தரத்தையுடையதாகவும் ​இருந்தன என்பதாகும். இருப்பினும் பல ஆய்வுகளின் முடிவுகள் மேலே கூறிய பயன்களைத்தான் தருவதாக கூறுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ஹரிகணேஷ் மற்றும் சி.இ.பி.என்.அர். குழு