அசைவு அல்லது செயல்சார் ஆற்றல் திறன் மீட்பை ஊக்குவித்து மின்வழி தூண்டல்.

மின்வழி தூண்டல்சிகிச்சை பக்கவாதத்திற்குப் பின் பாதிக்கப்படும் அசைவு மற்றும் செயற்பாட்டு திறனை மீட்டு மேம்படுத்தச் செய்யும் உள்ளார்ந்த ஆற்றல் பெற்றது. ஆனால் இந்த திறனாய்வு முடிவுகள் எதனையும் அறுதியிட்டு கூறவில்லை. பக்கவாதப் பாதிப்பிற்கு பிறகு நோயாளிகளால் பாதிக்கப்பட்ட மூட்டுகளை கொண்டு நடப்பது, மாடிப்படி ஏறி இறங்குவது, தலை குளியல் செய்தல் அல்லது ஒரு காபி ஜாடி திறத்தல் போன்ற செயல்களை தாமே செய்ய இயல்வதில்லை. செயற்பாட்டு திறனை மீட்பதை மேம்படுத்த மேற்கொள்ளும் ஒரு வழியாக பாதிக்கப்பட்ட தசைகளுக்கு மின் வழி தூண்டல் பயிற்சி அளிப்பது அமையலாம். இந்த திறனாய்வு, பாதிக்கப்பட்ட மூட்டினை தானாக அசைக்கும் ஆற்றல் அல்லது தினசரி பயன்பாட்டை மேம்படுத்த மின்வழிதூண்டல் சிகிச்சை அளிக்கப்பட்ட 24 சமவாய்ப்பு கட்டுப்பாடு சோதனைகளை ஆராய்ந்தது. இவற்றின் மூலம் கிடைத்த சான்றுகள் மின்வழிதூண்டுதலை சிகிச்சையின்மையுடன் ஒப்பிடும் போது மின்வழி சிகிச்சைக்கு ஆதரவாக, செயலாற்றத்தில் சில அம்சங்களில் சிறிதளவு முன்னேற்ற விளைவுகள் இருக்கலாம் என்னும் கருத்தினை முன்வைக்கிறது. எனினும் மின்வழி தூண்டல் சிகிச்சைக்கு ஆதரவான பெரும்பாலான முடிவுகள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை ஏதும் பெறாத குழுவைச்சார்ந்த நோயாளிகளோடு ஒப்பிடுகையில் மட்டுமே அறியப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.அதில் இரண்டு ஆய்வுகள் தவிர அனைத்து ஆய்வுகளிலும் கிடைத்த விளைவுகள் மின் வழிதூண்டல் சிகிச்சை அளிக்கப்பட்ட மற்றும் மருந்துப்போலி சிகிச்சை அளிக்கபட்டவரை ஒப்பிட்டு பார்க்கையில் அல்லது மின் வழிதூண்டல் சிகிச்சை அளிக்கப்பட்ட மற்றும் வேறு ஏதேனும் ஒரு இயன்முறை சிகிச்சை பெற்றவரோடு ஒப்பிடுகையில் அவை இரண்டிர்க்கும் இடையில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதாகும். அது மட்டுமின்றி, இந்த திறனாய்விற்கு உட்பட்ட சமவாய்ப்பு கட்டுப்பாடு சோதனைகளில் நிறைய வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இவை பக்கவாத நோயாளிகளின் சேர்க்கை, மின்வழி தூண்டுதலின் அளவு மற்றும் விளைவு அளவிடுதல் உள்ளிட்டவையாகும். இதன் பொருள் பெரும்பாலான இந்த திறனாய்வு ஒப்பீடுகள் ஒரு சமவாய்ப்பு கட்டுப்பாடு சோதனையை சார்ந்ததே தவிர மாறாக இரண்டு அல்லது அதற்கு மேலானவைகளில் இல்லை. மேலும் கூடுதலாக, சோதனைகளில் உள்ள பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சிறியதாக இருக்கிறது. ஆதலால், இந்த திறனாய்வு முடிவுகளை எச்சரிக்கையுடன் பொருள் விளக்கம் கொள்வது அவசியமாகும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பு: ம. முருகவேல் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information