கீல்வாதத்திற்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound) சிகிச்சைமுறை

இடுப்பு அல்லது முட்டு கீல்வாதத்திற்கு சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound)யின் விளைவுகள் குறித்து ஆராய்ச்சிகள் மூலம் நாங்கள் அறிந்து கொண்டதை இந்த காக்குரேன் மறுஆய்வு சுருக்கம் வழங்குகிறது. இந்த திறனாய்வின் முந்தைய வடிவம் nbsp சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound), போலி சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலியை (ultrasound) விட வலி நிவாரணம் மற்றும் செயல்பாட்டு நிலையை மேம்படுத்துவதில் எந்த நன்மையும் அளிக்கவில்லை என்று முடிவு செய்தது.

இந்த புதுப்பிக்கப்பட்ட திறனாய்வு, கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக தெரிவிப்பதாவது
-முழங்கால் முட்டு கீல் வாதம் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound) நன்மை பயக்கலாம்.

- சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound) உங்களது உடற்சார்ந்த செயல்பாட்டு திறனை அதிகரிக்கலாம் . ஆனால் அது தற்செயலான விளைவின் முடிவாக இருக்க கூடும்.

- வலி நிவாரணம் அல்லது கால் முட்டியை உபயோகிப்பதற்கான திறன் பற்றிய விளைவுகளின் அளவு நிச்சயமற்றது, ஏனெனில் அவை குறைந்த தரமுடைய ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டவை.
-சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound) சிகிச்சையினால் பக்க விளைவுகள் வராமல் இருக்கலாம்: எந்த பக்க விளைவுகளும் அறிக்கையிடப்படவில்லை ஆனால் பக்க விளைவுகள் பற்றி துல்லியமான தகவல்கள் எதுவும் எங்களிடம் இல்லை. குறிப்பாக இது அரிதான ஆனால் தீவிர பக்க விளைவுகளுக்கு பொருந்தும்.  

இடுப்பு மூட்டு கீல் வாதம் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலியின் (ultrasound) பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள மேற்கொள்ளப்பட்டதாக எந்த ஆய்வுகளும் இல்லை.

கீல்வாதம் என்றால் என்ன மற்றும் சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound) சிகிச்சை என்றால் என்ன?

கீல்வாதம் என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். உங்கள் மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது வளர்ந்து, அதன் பாதிப்பை சரி செய்ய முயற்சிக்கும். ஆனால், எலும்பு வழக்கத்திற்கு மாறாக வளர்ந்து இந்நிலையை சரி செய்வதற்கு பதிலாக, மோசமடையச் செய்கிறது. உதாரணமாக, எலும்பானது உருவிழந்து, மூட்டுவலியையும், மற்றும் ஸ்திரமற்ற மூட்டையும் உண்டாக்கும்.  இது உங்கள் உடல் செயல்பாடு, அல்லது உங்கள் முழங்கால் மூட்டினை உபயோகிக்கும் செயல்பாட்டு திறனை பாதிக்கலாம்.
சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound) என்பது வலி அல்லது இயலாமையை விடுவிக்க ஒலி அலைகளை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பது ஆகும். உங்கள் மருத்துவர் அல்லது இயன்முறை மருத்துவர் வலியுள்ள பகுதியில் உள்ள தோல் வழியாக ஒலிஅலைகளை செலுத்த ஒரு வட்ட வடிவ கருவியை பயன்படுத்துவார். தோலின் அதிக சௌகரியத்திற்கும் ஒலி அலைகள் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்றடையவும் ஏதுவாக செவியுணராஒலி (அல்ட்ராசவுண்ட்) ஜெல், வட்ட வடிவ கருவி மற்றும் உங்களது தோலின் மேல் பயன்படுத்தப்படும். 

2-8 வாரங்கள்சி கிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound) பெறும் கீல் வாதம் உள்ளவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கான சிறந்த கணிப்பு:

வலி
சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound) பெற்றவர்கள் 2 மாதம் கழித்து, அவர்களின் வலியை 0( வலி இல்லை)-10 (உச்சக்கட்ட வலி) என்ற ஒரு அளவுக்கோலில், 3 என்ற அளவில் முன்னேற்றமடைந்ததாக மதிப்பிட்டனர்
.-போலி சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound) பெற்றவர்கள் 2 மாதம் கழித்து, அவர்களின் வலியை 0(வலி இல்லை)-10 (உச்சக்கட்ட வலி) என்ற ஒரு அளவுக்கோலில், 2 என்ற அளவில் முன்னேற்றமடைந்ததாக மதிப்பிட்டனர்.
விதமாகவும் கூறலாம்:
சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound) பெற்ற 100 பேரில் 37பேர் (37%) மாற்றத்தை உணர்ந்தனர்
-போலி சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound) பெற்ற -31 பேர் சிகிச்சைக்கு மாற்றத்தை உணர்ந்தனர் (31%).
போலி சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound) அளிக்கப்பட்டவர்களை விட, சிகிச்சைக்குரிய செவியுணரா ஒலி (ultrasound) பெற்றவர்களில் கூடுதலாக 6 பேர் மாற்றத்தை உணர்ந்தனர் (6% வேறுபாடு).பெற்றவர்கள் மாற்றத்தை உணர்தனர் (6% வேறுபாடு).

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ. பி.என்.அர்

Tools
Information